ஒரு சமூகம் எந்தவித வர்க்க போராட்டத்திற்கும் இடம்கொடுக்காமல் அமைதியாக இயங்க வேண்டும் என்றால் ஒன்று அந்த சமூகம் வர்க்க ஏற்றத்தாழ்வுகளை ஒழித்த பொதுவுடமை சமூகமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் சுரண்டுவோருக்கும், சுரண்டப்படுவோருக்கும் இடையேயான வர்க்கப் பகைமைகளை இனம் காண முடியாத வகையில் சுரண்டலை தன்னளவில் ஓர் இயல்பான நிகழ்ச்சிப் போக்காக சுரண்டப்படும் மக்களை ஏற்றுக் கொள்ள வைக்க அடிமை சிந்தனைகளை அந்த மக்கள் மனதில் ஆழமாக வேருன்றும்படி செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் ஆளும்வர்க்கம் ஒவ்வொரு நாளும் தனது நிம்மதியையும் மன மகிழ்ச்சியையும் இழந்து தனது இருத்தலைக் காப்பாற்றிக் கொள்ள போராடவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படும்.
போராட்ட குணம் இயல்பாகவே உள்ள மனித இனம் உலகம் பூராவும் பெரும்பான்மையாக, கொடுமையான முதலாளித்துவ சுரண்டலை இன்று ஏற்றுக்கொண்டு அதைச் சகித்துக்கொண்டு வாழப் பழகியிருக்கின்றது என்றால் அதற்கு அடிப்படையான காரணம் மதம் ஆகும். மதங்கள் தன்னைக் கடைபிடிக்கும் ஒவ்வொரு மனிதனிடமும் இருந்தும் அடிமை விசுவாசத்தை நிபந்தனை அற்ற முறையில் எதிர்பார்க்கின்றன. ஆண்டவனின் மீதான விசுவாசமும் அவனை நிறுவனமயமாக்கி தன் கைப்பிடிக்குள் வைத்து ஆட்டிப் படைக்கும் ஆளும்வர்க்கத்துக்கு ஏற்ற விசுவாசமும் ஒரே புள்ளியில் சந்திக்கின்றன. அந்தப் புள்ளியில் இருந்து விலகி மதத்தையும், ஆளும்வர்க்கத்தின் சுரண்டலையும், ஒடுக்குமுறையையும் கேள்வி கேட்பவர்களுக்கு எல்லாம் மதநிந்தனையாளர்கள், நாத்திகர்கள், தேசத்துரோகிகள் என்று பல பெயர்களை மத நிறுவனங்களும், ஆளும்வர்க்கமும் வைத்துள்ளன.
முதலாளித்துவம் வளர்ச்சிடைந்து அதற்கு ஏற்றார்போல நவீன அறிவியல் கல்விமுறை வந்தபின்பும் கூட மதநிறுவனங்கள் கல்வி நிலையங்களை ஆரம்பித்து நவீன அறிவியல் கல்விமுறையுடன் மத சம்மந்தமான ஆன்மீக கல்விமுறையும் சேர்த்தே கற்பித்தன. இதன் மூலம் நவீன கல்விமுறையைக் கற்றவர்கள் அறிவியலின் எல்லைக்குள் சென்றுவிடாமல் தனக்கு வேண்டிய அடிமைகளை உற்பத்தி செய்துகொண்டன. அது மனிதர்களை ஒரு இரட்டை சிந்தனை கொண்டவர்களாக குழப்பவாதிகளாக தன்வாழ்நாள் முழுவதும் இருக்கும் படி அவர்களை செய்தது. ஒருபக்கம் நவீன அறிவியலை உபயோகப்படுத்தும் மனிதன் மற்றொரு பக்கம் அதற்கு எதிரான சிந்தனை கொண்டவனாக கடவுளையும், மதத்தையும் போற்றி பாதுகாப்பவனாக அவனை மாற்றியது.
இப்படி மனிதனை குழப்பவாதியாக மாற்றி அவனை நிரந்தர அடிமைத்தனத்தில் வைத்திருப்பதன் வாயிலாக ஆளும் வர்க்கம் தன்னை எப்போதுமே எந்தவித பிரச்சினைகளுக்கும் முகம்கொடுக்கத் தேவையில்லாத பாதுகாப்பு நிறைந்த வாழ்க்கையை அளித்தது. மேலைநாடுகளில் குறிப்பாக முதலாளித்துவம் முதன் முதலில் துளிர்விட்ட ஐரோப்பிய நாடுகளில் மக்களை அடிமைப்படுத்த மதம் ஒரு பெரும் கருவியாக அவர்களுக்குப் பயன்பட்டது. ஆனால் யாருக்கும் கல்வி மறுக்கப்படவில்லை. அனைவருக்கும் கல்வி பாரபட்சமில்லாமல் வழங்கப்பட்டது. இதனால் பெரும்பான்மை நபர்கள் மத சம்பந்தமான சிந்தனையில் மூழ்கி குழப்பவாதிகளாக அடிமை சிந்தனை கொண்டவர்களாக மாறினாலும், அதில் இருந்து அவ்வப்போது கணிசமான நபர்கள் அறிவியல் சிந்தனை கொண்டவர்களாகவும், முதலாளித்துவத்திற்கு எதிராக புரட்சிகர சிந்தனை கொண்டவர்களாகவும் உருவாக முடிந்தது. ஆனால் இந்தியாவில் நிலைமை இதற்கு நேர் எதிரானது.
இங்கு கல்வி என்பது சாதியின் பெயரால் மறுக்கப்பட்டது. வெறும் மூன்று சதவீதமே இருந்த பார்ப்பன கும்பல் தன்னுடைய புராண புளுகு கதைகள் மூலமாக இங்கிருந்த மன்னர்களையும், மக்களையும் அச்சுறுத்தி அவர்களை அடிமைகளாக, தீண்டப்படாத மக்களாக, பஞ்சமர்களாக, பார்ப்பனின் வைப்பாட்டி மக்களாக மாற்றி அவர்களின் சுதந்திர வாழ்க்கையை நிர்மூலமாக்கியது. இங்கிருந்த மன்னர்கள் பார்ப்பனர்கள் கல்வி கற்க வேண்டும் என்று நூற்றுக்கணக்கான வேத பாடசலைகளை நிறுவினார்கள். அதற்காக சாமானிய மக்களின் உழைப்பைப் பிழிந்து எடுத்து, அதில் வந்த வருவாயைக் கொண்டு பார்ப்பனர்களுக்குச் சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் உழைத்துக் கொடுத்த சாமானிய மக்கள் கல்வி கற்க மறுக்கப்பட்டார்கள். வேதத்தைப் படித்தாலோ, இல்லை காதில் கேட்டாலோ அவனைக் கொன்றுவிட மனு கட்டளையிட்டான்.
நாம் தமிழ்நாட்டில் பார்த்தோம் என்றால் இங்கிருந்த 100 சதவீத மன்னர்களுமே பார்ப்பன மனுதர்ம சாஸ்திரத்தை ஏற்றுக்கொண்டு அதன்படி ஆட்சி செய்பவர்களாகவே இருந்தார்கள். பார்ப்பனர்கள் படிக்க வேத பாடசாலைகள் திறந்த எந்த மன்னனும் தன்னுடைய குடிகள் கல்வி கற்க ஒரு பள்ளிக்கூடத்தைக் கூட திறந்ததாக வரலாறு இல்லை. தன்னை மனுநீதி படி ஆட்சி செய்யும் மன்னன் என்று சொல்லிக்கொள்வதில் அவர்கள் பெரும்மகிழ்ச்சி அடைந்தார்கள். பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பிரம்தேயங்களாக பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டன. அதற்கு கைமாறாக மன்னர்களுக்கு ஒரு மரபான வம்சாவழிக்கதைகளை அதாவது சூரிய குலத்தில் பிறந்தவர்கள் என்றும், சந்திர குலத்தில் பிறந்தவர்கள் என்றும், புராண பாத்திரங்களின் வம்சாவழியில் வந்தவர்கள் என்றும், கால்வழி மரவுகளை உருவாக்கி மன்னனுக்கு ஒரு தெய்வீக அந்தஸ்த்தை வழங்கினர்.
சமண, பெளத்த கல்வி நிலையங்களின் அழிவுக்குப் பின்னால் வெள்ளைக்காரன் இந்தியாவுக்கு வந்த பின்னால் தான் இந்தியாவில் நவீன கல்விமுறை போதிக்கப்படும் கல்வி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு, சாதி வித்தியாசம் பாராமல் அனைவருக்கும் கல்வி வழங்கப்பட்டது. பார்ப்பனியத்தால் கல்வி மறுக்கப்பட்ட கோடிக்கணக்கான சூத்திர, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி கற்கும் வாய்ப்பை ஆங்கில அரசாங்கம் வழங்கியது. ஆனால் இங்கிருக்கும் பார்ப்பனக் கும்பல் எந்த மக்களை கல்வி கற்க விடாமல் முட்டாள் தனத்திலேயே இருத்தி வைத்து அவர்களை சாதி ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சுரண்டிக்கொழுத்ததோ, அதே மக்களை இப்போது குரு பூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா என்ற பெயரில், பார்ப்பன மேலாண்மையை மனமாற ஏற்றுக்கொள்ள வைக்க அந்தச் சித்தாந்தத்தைக் கடைபிடிக்கும் ஆசிரியர்கள் என்ற போர்வையில் இருக்கும் கழிசடைகளின் காலை கழுவ வைத்திருக்கின்றது.
மதுரையில் பார்ப்பன பாரதி பணியாற்றிய சேதுபதி பள்ளியில் குருபூர்ணிமா அன்று(08/07/2017) ஆர்.எஸ்.எஸ் ஆசிரியர்களின் காலை மாணவர்களை வைத்து வலுக்கட்டாயமாக கழுவ வைத்திருக்கின்றார்கள். மேலும் பள்ளியில் கோ பூசை, கங்கா பூசை போன்றவற்றையும் செய்திருக்கின்றார்கள். எவ்வளவு பார்ப்பனக் கொழுப்பும், பார்ப்பன அடிவருடித்தனமும் இருந்திருந்தால் மாணவர்களை கண்ட பொறுக்கி ஆர்.எஸ்.எஸ் ஆசிரியர்களின் காலை கழுவ வைத்திருப்பார்கள். இவர்களை எல்லாம் ஆசிரியர்கள் என்று விளிப்பதே மிகவும் கேவலமாகும். மாணவர்களுக்குக் கொஞ்சம் கூட சூடு சுரணை இல்லையே!, அவர்களுக்குத்தான் இல்லை என்றால் அவர்களின் பெற்றோருக்கும் இல்லாமல் போய்விட்டதே!. பார்ப்பனிய அடிமைத்தனம் அவர்களின் புத்தியை மறைத்து விட்டதைத்தான் இது காட்டுகின்றது. மானமுள்ள பெற்றோராக இருந்தால் காலைக் கழக்ச் சொன்னவனை வெளக்கமாத்தால் அல்லவா அடித்து விரட்டி இருக்க வேண்டும். இல்லை மலர்களால் பாதத்தைக் கழுவச் சொன்னவனின் தலையில் மலத்தைக் கரைத்து அல்லவா ஊற்றியிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் கொஞ்சம் கூட சுயமரியாதை உணர்வும், தன்மான உணர்வும் இல்லாமல் ஆசிரியர்கள் என்ற போர்வையில் இருக்கும் கண்ட நாய்களின் காலை அல்லவா தனது குழந்தைகளை கழுவவிட்டிருக்கின்றார்கள்.
இது ஏதோ தமிழகத்தில் உள்ள ஒரு பள்ளியில் மட்டும் நடக்கும் அவலம் கிடையாது. பல பள்ளிகளில் குறிப்பாக தனியார் பள்ளிகளில் இந்த அயோக்கியத்தனம் அரங்கேறுகின்றது. தனியார் பள்ளிகளை நடத்தும் கல்விக் கொள்ளையர்கள் பெரும்பாலும் தங்களை சூத்திரன் என்று கருதாமல், அதையே பெருமையாக நினைக்கும் மானங்கெட்ட ஜென்மங்களாக இருப்பதாலும் பார்ப்பனக் கடவுள்களையும், பார்ப்பனனையும் நக்கினால்தான் கதிமோட்சம் அடையமுடியும் என்று உறுதியாக நம்புவதாலும் தன்னைப் போலவே தன்னுடைய கல்வி நிலையத்துக்கு வரும் மாணவர்களையும் பார்ப்பன அடிவருடிகளாக மாற்ற வேண்டும் என்ற இழித்தனமான சிந்தனை உள்ளதாலும் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுத்துகின்றனர். பெரும்பாலான தனியார் பள்ளிகள் தினமும் மாணவர்களை ஆன்மீக பஜனை பாடல்களை ஒலிபரப்பி அதற்கு எழுந்துநின்று மாணவர்கள் மரியாதை செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றன. அவன் எந்த மதத்தைச் சேர்ந்த மாணவனாக இருந்தாலும் நிர்பந்திக்கப்படுகின்றார்கள். ஆனால் மானங்கெட்ட எந்த அரசும் இதைத் தடுத்து நிறுத்துவது கிடையாது.
மாணவர்களின் இயல்பான அறிவியல் சிந்தனை முளையிலேயே இது போன்ற கல்வி நிலையங்களால் காயடிக்கப்படுகின்றன. மாணவர்களை இது போன்று அடிமைகளாக வளர்த்தெடுத்து முதலாளிகளின் சொல்பேச்சு கேட்கும் ஏவல் நாய்களாக அவர்களை வளர்த்தெடுக்கின்றார்கள். இன்று ஆசிரியரின் காலைக் கழுவிய மாணவன் படித்து முடித்து வேளைக்குப் போனவுடன் முதலாளியின் காலைக் கழுவுவான். இன்னும் அதிகாரத்தைக் கைப்பற்ற எவன் காலை எல்லாம் கழுவினால் முடியுமோ அவன் காலை எல்லாம் கழுவுவான். முடிந்தால் பதவிக்காக கூட்டிக்கூட கொடுப்பான். அவனுக்குத்தான் மானம் , மரியாதை, சுயகெளரவம் என எல்லாத்தையும் பள்ளியிலேயே நீக்கிவிட்டார்களே. இனி அவன் தன்னை எப்படி ஒரு சுயமரியாதை உள்ள மனிதனாக உணர்வான்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அதிகம் மதிப்பெண் பெறுபவனாக வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்களே ஒழிய அவன் மானமரியாதை உள்ள மனிதனாக வரவேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. அதனால் தான் பொறுக்கி கழிசடை ஆர்.எஸ்.எஸ் ஆசிரியர்களின் காலை கழுவவிட்டிருக்கின்றார்கள். நாளை அந்த மாணவன் வளர்ந்து ஒரு மானங்கெட்ட ஜென்மமாய், பார்ப்பன அடிமையாய் இந்தச் சமூகத்தில் வாழ்வதைவிட பேசாமல் அவர்களின் பெற்றோர்கள் கருவிலேயே அழித்திருக்கலாம். சுயமரியாதை இல்லாமல் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் (சூத்திரன்) என்ற பட்டத்தை பெருமையாக நினைத்து அவனின் காலைக் கழுவி படித்துப் பட்டம் வாங்குவதற்குப் பதில் தங்கள் குழந்தைகள் பிச்சை எடுத்து சோறு தின்னுவதை பெற்றோர்கள் பெருமையாக நினைக்கலாம்.
- செ.கார்கி