கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு 7வது முறையாக சிறந்த பாடலாசிரியருக்குக்கான தேசிய விருது மத்திய அரசால் கொடுக்கப்பட்டிருக்கின்றது. வைரமுத்து வழக்கம் போல ‘இது தமிழுக்குக் கிடைத்த பெருமை’ என்று பெருமையோடு சொல்லியிருக்கின்றார். நம்மால்தான் வைரமுத்து அவர்களோடு அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. காரணம் அவரின் ஆத்ம நண்பர் தருண்விஜய் அவர்கள். ஆனால் வைரமுத்து அவர்கள் தருண்விஜயின் ‘கருப்பு’ கருத்துப் பற்றி எதுவும் இதுவரை கருத்துச் சொன்னதாகத் தெரியவில்லை. ஒருவேளை அது அவ்வளவு முக்கியத்துவமற்ற ஒன்றாக அவர் நினைத்திருக்கலாம். அவரைப் பொருத்தவரை லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு, பெண்களின் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ஒவ்வொரு உறுப்பாக ரத்தமும், சதையுமாகப் பிய்த்து எடுத்து அவர் எழுதும் ‘போர்னோ’ திரைபாடல்களில்தான் தமிழுக்கு உண்மையான பெருமை உள்ளது என்று நினைக்கின்றார். அவர் எழுத வந்த நாள்முதல் இன்றுவரை தமிழ்ச் சமூகம் பெண்களின் மீது வைத்திருக்கும் அருவருக்கத்தக்க மதிப்பீடுகளில் இருந்து கொஞ்சம் கூட தன்னை விலக்கிக்கொண்டவர் கிடையாது. அரிப்பெடுத்த ஆண்களுக்கு தீனி போட்டு வளர்த்து விட்டதுதான் அவர் அதிகபட்சமாக தமிழுக்குச் சேர்த்த பெருமை.

Vairamuthu Felicitating Tarun Vijayவைரமுத்து மட்டும் அல்ல, பெரும்பாலான திரைப்பட பாடலாசியர்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள் தான். ஆனால் அவர்களிடமிருந்து வைரமுத்து கொஞ்சம் வேறுபட்டவர். எப்படி என்றால் மற்றவர்கள் காசுக்காக விபச்சாரம் செய்தாலும், தன்னளவில் நேர்மையைக் கடைபிடிப்பவர்கள். பணம் கிடைக்கும் என்பதற்காக எந்த எல்லைக்கும் போகும் அற்ப செயலைச் செய்யாதவர்கள். ஆனால் வைரமுத்து அவர்கள் பணத்திற்காகவும், புகழுக்காகவும் எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காதவர். அவர் பெருமையாக நினைப்பதாய் சொல்லும் தமிழையும் சேர்த்தே விபச்சாரத்திற்குத் தள்ள நினைப்பவர். நம்மைப் பொருத்தவரை அவர் வாங்கிய தேசிய விருதுகளால் தான் தமிழுக்குப் பெருமை என்றால் அந்தத் தமிழ் இருப்பதைவிட அழிந்து போவதே நல்லது.

 இந்தியா முழுவதும் பல எழுத்தாளர்கள் மோடி அரசு பதவி ஏற்றதில் இருந்து தலித்துகள், சிறுபான்மையின மக்கள், எழுத்தாளர்கள் போன்றவர்களுக்கு எதிரான காவிப் பயங்கரவாதிகளின் தாக்குதல் செயலுக்கு கண்டனம் தெரிவித்து தனது விருதுகளை திருப்பிக் கொடுத்தபோது, இந்தப் கவிப்பேரரசு அதற்குக் காரணமான ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தைச் சேர்ந்த தருண்விஜயை அழைத்து வந்து விழா எடுத்துக் கொண்டு இருந்தார். தமிழகத்தில் உள்ள பல்வேறு முற்போக்கு அமைப்புகள் வைரமுத்துவின் ஈனத்தனத்தை அப்போதே கடுமையாக கண்டனம் செய்தன. ஆனால் அதைப் பற்றி வைரமுத்து அவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை. காரணம் அவர் விதை விதைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு நிச்சயம் தெரியும், இந்த விதை நாளை நமக்கு நல்ல பலனைத் தரும் என்று. அவர் நினைத்தது போலவே அவருக்கு நல்ல பலனை இப்போது அது கொடுத்துவிட்டது.

 அவருக்கு மதவாதம், சாதியவாதம் போன்றவற்றைப் பற்றி எல்லாம் பெரிய கருத்து எப்போதுமே இருந்தது கிடையாது. திமுக மேடையில் இருந்ததால் அவ்வபோது தனது இருந்தலைக் காட்டிக்கொள்வதற்காக சில முற்போக்கு முத்துக்களை உதிர்த்துவிடுவார். எப்படி கதையின் போக்குக்கு ஏற்ப பாடல்களை எழுதுகின்றாரோ, அதே போலத்தான் எந்த மேடைக்கு என்ன தேவையோ அந்த மேடைக்கு அதைப் பேசி ‘கவர்’ வாங்கி விடுவார். அவரின் இந்தக் குணம் தான் தருண் விஜயை தாஜா செய்ய வைத்தது. ‘சமஸ்கிருதமே இந்தியாவின் முதன்மையான மொழி, இந்தியன் என்ற உணர்வே சமஸ்கிருதத்தில் தான் தொக்கி நிற்கின்றது. பிறப்பு முதல் இறப்புவரை அனைத்திற்கும் சமஸ்கிருதம் தேவை. மேலும் அரசின் உயர் பதவிகளைப் பெறுவதற்கு இந்தியாவில் முன்பு நிலவிய மாதிரி சமஸ்கிருதத்தைக் கொண்டுவர வேண்டும்’ என்றெல்லாம் எழுதிய ஆர்.எஸ்.எஸ் தருண்விஜயை பெரியார் பிறந்த மண்ணில் அழைத்துவந்து தன்னுடைய ‘வெற்றித்தமிழர் பேரவை’ என்ற பஜகோவிந்தம் அமைப்பின் மூலம் விழா எடுத்தார்.

 அக்கரகாரத்தில் குடியிருந்து கொண்டு பூணூல் அணிந்துகொண்டு, பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு, உச்சிக்குடுமியை ஆட்டிக்கொண்டு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்துகொண்டு, அரை நிர்வாணமாக ஊருக்குள் வெட்கமானமே இல்லாமல் உலாவரும் ஒரு சனாதன பார்ப்பனப் பெருச்சாளி பெரியாரியத்தைப் பற்றி பேசினால், அது எப்படி கொஞ்சம் கூட பொருத்தமற்று இருப்பதோடு, ஏதோ சூழ்ச்சியின் பாற்பட்டு நடத்தப்படும் கபட நாடகம் என நம்மை எண்ண வைக்குமோ, அதை நம்ப மறுக்க வைக்குமோ அதே போலத்தான் தருண்விஜயின் திருவள்ளுவர் மற்றும் தமிழ் மீதான பாசம். வரலாற்றில் தமிழையும், தமிழர்களையும் வேசிமொழி என்றும், குரங்குகள் என்றும் அசிங்கப்படுத்திய அயோக்கியர்கள் திடீரென தமிழையும், திருக்குறளையும் புகழ்வதையும், காசியில் பார்ப்பன பாரதி வாழ்ந்த வீட்டை நினைவுச் சின்னமாக ஆக்கவேண்டும் என்று சொல்பவனையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்காமல், அவனை அழைத்துவந்து விழா எடுத்து, விருது எல்லாம் கொடுப்பது என்பது, தன் இன மக்களையும், மொழியையும் வைத்து விபசாரம் செய்து பிழைக்கத் தயங்காத வைரமுத்து போன்ற பிழைப்புவாதிகளால் தான் முடியும்.

 வைரமுத்து, தருண்விஜய் ஆர்.எஸ்.எஸ்காரன் என்பதைப் பற்றி கவலைப்படவில்லை. அவன் சமஸ்கிருதத்தைத் தூக்கிப் பிடிக்கும் பார்ப்பன பயங்கரவாதி என்பதைப் பற்றி கவலைப்படவில்லை அவர் கவலை எல்லாம் தேசிய விருதுகளின் மேலேயே இருந்தது. எவனைப் பிடித்தால் டெல்லியில் லாபி செய்ய வசதியாக இருக்கும் என்பதில் தான் அவர் எப்போதும் குறியாக இருந்தார் . அதற்காக தமிழன விரோதிகளுக்கு அவர் தன்னுடைய சூத்திர கருநாக்கால் கவிதை பாடினார். எப்படி திருஞான சம்பந்தன் தன்னுடைய பார்ப்பன ஊத்தவாயால் பாடிப் பாடியே திருமரைக் காட்டில் உள்ள கோவில் கதவைத் திறந்தானோ, அதே போல இவர் தருண்விஜயை தன்னுடைய கவிதையால் சொறிந்து, சொறிந்தே தனது 7 வது தேசிய விருதை வாங்கியிருக்கின்றார். இந்த மானங்கெட்ட விருது தமிழுக்கு பெருமை சேர்க்குமாம். வைரமுத்து பேக்கரியை வாங்கிய கதையைக் கேள்விப்பட்டு இன்று தமிழ்நாடே கைகொட்டி சிரித்துக்கொண்டு இருக்கின்றது.

 வைரமுத்துவின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியில் நீங்கள் இப்படி அவதூறு பரப்புகின்றீர்கள் என்று சொல்லலாம். தருண்விஜய் “ நாங்கள் நிறவெறியர்களாக இருந்தால் எப்படி தமிழர்கள், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மக்கள் என இருக்கும் தென்னிந்தியர்களோடு இருப்போம். இந்தியாவிலும் கருப்பர்கள் இருக்கின்றார்கள். எங்களைச் சுற்றிலும் அவர்கள் இருக்கின்றார்கள். நீங்கள் உங்கள் சொந்த நாட்டை மறுக்கிறீர்கள் என்றால் நீங்கள் உங்கள் வம்சாவளியை மறுக்கின்றீர்கள். உங்கள் கலாச்சாரத்தை மறுக்கின்றீர்கள்” என்று சொல்லியபோது இந்தக் கருப்பு வைரமுத்து ஏன் வாய்திறந்து கூட கண்டிக்கவில்லை என்பதால் தான் நாம் அவரைக் கண்டிக்கின்றோம். அவர் ஏன் கண்டிக்க வேண்டும் என்றால், அந்த நாயை அழைத்து வந்து தமிழகத்தில் வைத்து விழா எடுத்துப் பெருமைப்படுத்தி பூரித்து, மகிழ்ந்தது வைரமுத்துதானே. அதனால் அந்த நாய் தமிழர்களை இழிவாகப் பேசினால் அதற்கு வைரமுத்துதான் முதலில் பதில் சொல்ல வேண்டும். இங்கே இருக்கும் பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய இயக்கத் தோழர்கள் பார்ப்பன பயங்கரவாதத்திற்கு எதிராக தீவிரமாகப் போராடி, அதை வேரறுக்க முயன்றுகொண்டு இருந்தால் வைரமுத்து போன்ற போர்னோ எழுத்தாளர்கள் அதைத் தவிடுபொடியாக்க, கேவலம் விருது கிடைக்க – காவி பயங்கரவாதிகளை அழைத்துவந்து அவர்களுக்குத் தமிழகத்தில் களம் அமைத்துக் கொடுப்பார்கள்.

 ஒருவகையில் தருண்விஜய் சொன்னது உண்மைதான். அவர் தெளிவாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என கருப்பர்கள் வாழும் பகுதிகளைக் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கின்றார். திராவிடர்கள் கருப்பானவர்கள் என்பதையும் அவர்கள் வாழும் பகுதி எது என்பதையும் ஒரு ஆர்.எஸ்.எஸ் பத்திரிக்கையாசிரியனே தான் வாயால் ஒப்புக்கொண்டு இருக்கின்றான். தமிழ்நாட்டில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். காலிகள் திராவிடம் என்பதெல்லாம் பொய், அப்படி என்ற ஒன்று வரலாற்றில் என்றுமே இருந்தது கிடையாது என உளறித் திரிகையில் அதே ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பயங்கரவாதப் பட்டறையில் இருந்து வெளிவந்த ஒரு பெரிய குரங்கு அதை ஒப்புக்கொண்டு சான்றளித்துள்ளது. எனவே கருப்பர்கள் எல்லாம் திராவிடர்கள் என்பதும், வெண் குஷ்டம் பிடித்தது போன்று இருக்கும் வெள்ளையர்கள் எல்லாம் ஆரியர்கள் என்பதும், கருப்புத் திராவிடர்களுக்கு புரியவைக்கப்பட்டுள்ளது. ‘எங்களைச் சுற்றி அவர்கள் இருக்கின்றார்கள்’ என்று சொன்னதன் மூலம் இந்த ஆரிய நாய்கள், திராவிடர்களால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதும், எந்த நேரத்திலும் அட்டாக் செய்ய திராவிடர்கள் தயாராக இருக்கின்றார்கள் என்பது உறுதியாகியிருக்கின்றது. எனவே அதற்காக நாம் தருண்விஜயைக்கு நன்றி சொல்லிக்கொள்வோம். தருண்விஜயின் இனவெறிப் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காத அவரின் நண்பர் போர்னோ கவிஞர் வைரமுத்துவுக்கு அவர் வாங்கியது விருது அல்ல என்றும், அது பார்ப்பனனின் மலம் என்பதையும் ஒரு கருப்புத் திராவிடனாக பெருமையாக தெரிவித்துக் கொள்வோம்.

- செ.கார்கி

Pin It