2000 வருடமாக பார்ப்பன அடிமைகளாக இருந்த தமிழ் மண்ணை தன்மானம் மிக்க மண்ணாக மாற்ற பல தலைவர்களும்,அறிஞர்களும் தோன்றி தங்கள் கருத்துக்களை இந்த மண்ணுக்கும்,மக்களுக்கும் கொடையாக வழங்கி உள்ளனர்.அப்படி இந்த மண்ணில் இருந்த பார்ப்பன கொடுமைகளுக்கு எதிராக சித்தர்கள் தொடங்கி பல தலைவர்கள் தோன்றி இருந்தாலும்,அவர்கள் வெறுமனே தங்களின் உள்ளக் குமுறல்களை தங்களின் எழுத்து வண்ணம் பதிந்ததொடு நிறுத்தி விட்டனர்.ஆனால் வெறும் வார்த்தையோடு நின்று விடாமல்,களத்தில் இறங்கி பார்ப்பனியம் என்ற விச மரத்தின் ஆணி வேரையே ஆட்டம் காணச்செய்த தனிப்பெரும் மக்கள் தலைவராக பெரியார் மற்றுமே திகழ்ந்தார்.
தான் சாகும் தருவாயில் வரை மக்களோடு மக்களாக பட்டி தொட்டி எல்லாம் பேசி,மக்களை தன்மானமும்,சுயமரியாதையும் மிக்கவர்களாக மாற்றிட களத்தில் நின்ற பெரியாருக்கே மக்கள் தலைவர் என்ற பட்டம் பொருந்தும்.சிறை சென்று பதவி போனால்,தாங்களே மக்களின் முதல்வர் என்று பட்டம் சூடிக்கொள்வது போல அல்லவே மக்களின் தலைவராய் இருப்பது.
இப்படி 2000 வருடங்களாக வேறுன்றி நின்ற நச்சு வேரை ஆட்டம் காணச்செய்த பெரியாரை ஜென்மப் பகையாளியாக கருதும் காவிக் கும்பலும்,தங்களின் சாதிய மேலாதிக்கத்திற்கு தடையை இந்த கிழவன் அமைந்து விட்டானே என கதறும் சாதிவெறி கும்பலும்,அதன் தழுவலில் உருவான வெள்ளாள சார்புடைய தமிழ்தேசிய கூட்டமும் ஒரு சேர எதிர்த்து நின்றது .
பெரியாரால் அதிகம் தொழில் நஷ்டம் அடைந்த காவிக் கும்பல் ,அதிக பட்சம் பெரியாரை "ராமசாமி நாயக்கர்" "ஈவெரா" என்று விவாத நிகழ்ச்சிகளில் அழைத்து தங்கள் கோபத்தை வெளிக்காட்டி கொள்கிறது பாவம்..
அதைத் தாண்டி எதுவும் செய்ய முடியாமல் தவித்து வந்த ராமராஜ் டவ்சர்களுக்கு ஒரு விவாத நிகழ்ச்சியில் தாலி அகற்றும் காட்சியை முன்னோட்டமாக காண்பித்து உருவாக்கிக் கொடுத்தது புதிய தலைமுறை தொலைக்காட்சி.அதை ஒளிபரப்பக்கூடாது என்று எதிர்த்து,மண்ணெண்ணையை சொத்து டப்பாவில் அடைத்து பு.த அலுவலகம் மீது எரிந்து சென்றனர் டவ்சர்கள்(இதுக்கு பெயர் டிபன்பாக்ஸ் குண்டாம்?!)
இப்படி ஒரு சூழல் நிலவி வருகையில்,காவிகளை எதிர்க்கும் வண்ணமாக "தாலி அகற்றும் போராட்டம்" என திராவிடர் கழகம் அறிவித்தவுடன் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இந்த அறிவிப்பை எதிர்த்து மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்,தன் பாட்டிக்கும்,அதற்க்கு முந்தைய தலைமுறை பெண்களுக்கும் மேலாடையை பறித்ததே இந்த கும்பல் தான் என மறந்து,காவிகள் மனதை குளிர்விக்க "கருப்பு சட்டை அகற்றும் போராட்டம் " என அறிவித்தார்.
சார் வாளின் இந்த அறிவிப்பை கேட்ட உடன்,அனைத்து பெரியாரிஸ்ட்டுகள்,கம்யுனிஸ்ட்டுகள்,முற்ப்போக்காளர்கள்,இஸ்லாமிய தோழர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு, கருப்பு சட்டையை தங்களின் முகநூலில் முகப்புப் படமாக வைத்து,"இது பெரியார் மண்" என உணர்த்தி,சார் வாளையும்,அவரது கூட்டத்தை மூத்திர சந்தில் விட்டு அடித்தனர்.
பிறகு அவர்களே கருப்பு சட்டையை அணிந்து,அதை தாங்களே கழற்றி ,போராட்டத்தை தங்கள் குளியல் அறையிலேயே நிறைவு செய்தனர் வீராதி வீரர்கள்.
அடுத்து ,சென்னை ஐஐடியில் இயங்கி வந்த "அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்திற்கு" தடையை விதித்தது.நாட்டில் எவ்வளவோ மாநிலங்கள் இருக்க,பெரியார் மண்ணான தமிழகத்திலே தடையை விதித்து,வசமாக மோட்டுச் சந்தில் வந்து மாட்டியது காவிக் கும்பல்.இதை அடுத்து,பெரியார் இயக்கங்கள்,இடது சாரி இயக்கங்கள் என வேறுபாடின்றி "பெரியார் அம்பேத்கர்" படங்களை கையில் ஏந்தி தடையை ஓட வைத்தது.
அடுத்து,மத்தியில் பாஜக ஆள்வதால்,தங்களின் வக்கிரக் கொள்கையை ஒவ்வொன்றாக அறிவித்த வண்ணம் இருந்தது.சமஸ்கிரத திணிப்பு,மாட்டுக்கறிக்கு தடை,பகவத் கீதை தேசிய நூல்,கோட்சேவிற்கு சிலை,ஐஐடியில் பெரியார் அம்பேத்க்கர் வாசகர் வட்டத்திற்கு தடை என எண்ணற்ற சதி திட்டத்தை நடை முறைப்படுத்த முயன்ற போதெல்லாம்,இந்தியாவின் மற்ற மாநிலங்கள் எல்லாம் என்ன நடக்கிறது என்றே உணராமல் இருந்த போதெல்லாம் ,தமிழகம் மட்டும் பெரியார் இயக்கங்களாலும், முற்ப்போக்கு சக்திகளாலும் போராட்ட காலமாக மாற்றி,பார்ப்பனிய கூட்டத்திற்கு ஆப்பு வைத்தது.
இப்படி காவிகளின் ஒவ்வொரு நகர்வையும்,தமிழ் மண்ணிற்குள் வராமல் தடுத்ததோடு,மற்ற மாநிலத்தையும் சேர்த்தே பெரியார் மண் காவிக் கூட்டத்திடம் இருந்து தற்க்காத்தது.
அவர்களால் இதைத் தாண்டி எதுவும் செய்ய முடியாது என்று உணர்ந்த காவிக் கூட்டம், இந்த இனத்தில் துரோகிகளையும்,அறிவு மங்கிய அப்பாவிகளையும் பிரசவிப்பது எளிது என்று உணர்ந்து உருவாக்கப்பட்ட,,காலி டப்பாவில் பெருங்காய வில்லை ஒட்டப்பட்டது போல இருக்கும் ,போலி தமிழ்தேசிய வாதிகள் மூலம் தங்கள் பார்ப்பன வஞ்சகத்தை ,தமிழ் முகம் கொண்டு கக்கச்செய்தது.
இந்த பார்ப்பன ஏவல் கூட்டத்தின் தலைமை ஏஜண்ட்டாக செயல்படும் திருவாளர் சீமான்,தங்களின் ஆட்டு மந்தை கூட்டத்திடம்,பெரியார் எதிர்ப்பும்,திராவிட எதிர்ப்பும் பேசி அரசியல் செய்வதில் பேரும் சருக்களையே சந்தித்தார்.
பெரியார் மீது நாம் தமிழர் கூட்டம்,கக்கும் வஞ்சகத்தை அனைத்து தரப்பு முர்ப்போக்காளர்களும் கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்ததோடு,இது முழுக்க முழுக்க நன்றி கெட்ட அரசியல் தவிர வேறு அல்ல என்று தோலுரித்து காட்டினர்.
இதனால்,தன்னை ஒரு போராளியாக நிலைநிறுத்திக்கொள்ள பெரியார் எதிர்ப்பை கொஞ்ச காலத்திற்கு ஒளித்து வைப்பது தான் "கம்பனிக்கு" நல்லது என உணர்ந்தது..,"முகநூலில் இனி பெரியாரை நாம் தமிழரை சேர்ந்தோர் யாராவது விமர்சித்தால்,கட்சியில் இருந்து பாரபட்சம் இன்றி நீக்கப்படுவர்" என்று அறிவிப்பை வெளியிட்டார்.
ஆனால் ராஜாவின் இந்த கட்டளையை,பிரஜைகள் ஒரு வாரம் கூட கடை பிடிக்க முடியாமல்,கடைந்தெடுத்த கரியை சீமான் முகத்தில் ஜோராக பூசினர்.
(பெரியாரை விமர்சித்தால் கட்சியை விட்டு நீக்கப்படுவர் என்ற அறிவிப்பை கேட்டு,மற்றவர்களை எப்படி நான்காம் தரச்சொற்க்களால் அர்ச்சனை செய்வார்களோ,அதே அர்ச்சனை சீமானுக்கும் முகநூலில் நாம் தமிழரை சேர்ந்த சிலாரால் கிடைத்தது என்பது சோகமான கூடுதல் செய்தி)
செந்தில்,கவுண்டமணி பாத்திரத்திற்கு இய்யம் பூசும் நகைச்சுவையில்,கவுண்டமணி,செந்திலிடம் "டேய் இய்யத்தை எடுத்துட்டு நா பாத்தரத்துக்குள்ள போனயுடனே,நா இப்படி சுத்தும் போது,நீ இப்படி சுத்தணும்,நீ இப்படி சுத்தும் போது,நா இப்படி சுத்துவேன்.அதாவது இய்யம் பூசுன மாதிரியும் இருக்கணும் ,பூசாத மாதிரியும் இருக்கணும்.இதெல்லாம் ஒரு பிஸ்னஸ் டாக்டிக்ஸ் டா மண்டையா" எனக் கூறுவது போல தொழிலை நடத்தலாம் என பெரியார் ஆதரவு என்ற கணக்குப் போட்ட சீமானுக்கு "பிஸ்னஸ் டாக்டிக்ஸ்" தோற்றுத்தான் போனது.
ஆக,தான் என்ன அரசியல் செய்கிறோம் என்ற கவலை இன்றி செயல்படும் விஜயகாந்த்திற்கும்,என்ன அரசியல் செய்யலாம் என்று மண்டலத்திற்கு ஒரு முறை மண்டை குழம்பி அலையும் சீமானுக்கும் பெரிய வேறுபாடு ஏதும் இல்லாமல் போனது.இருவருக்கும் இருக்கும் இந்த ஒற்றுமையே ,இந்த வருடம் அதிகமாக கேலிகளுக்கு பலியான நபர்களில் இருவரும் டாப் 2 இடங்களை பிடித்துள்ளனர்.
அடுத்து பெரியார் எதிர்ப்பில் சீமானுக்கு முன்னரே பழம் தின்று கொட்ட போட்ட அய்யா மணியரசனும் இந்த வருடம் ஆப்பு வைக்கும் வருடமாகவே அமைந்தது.சுபவீயுடன் நடந்த ஒரு நேரடி விவாத நிகழ்ச்சியில்,பெரியார் மீதும்,திராவிடர் இயக்கம் மீதும் பொய்யான தகவலை கூறி,அதற்க்கு மறுப்பாக வலைதளங்களில் ஆதாரத்துடன் பெரியாரிஸ்ட்டுகள் வைத்ததை எதிர்கொள்ள முடியாமல் சில காலம் சாந்த சொரூபியானார்.
இதற்க்கு எல்லாம் சிகரம் வைத்தார் போல,உண்மையான தமிழ் தேசியத்தின் முன்னோடிகளாக செயல்பட்டு வரும்,தோழர் பொழிலன்,தோழர் அரங்க குணசேகரன் முதலிய தோழர்களும்,மே 17 இயக்கம்,தமிழர் விடுதலை இயக்கம் முதலிய பல இயக்கங்கள் ஒன்று கூடி,,பெரியாரை எதிர்க்கும் போலி தமிழ்தேசியவாதிகளின் முகத்திரையை கிழிப்பது போல,"பெரியாரும்,திராவிட இயக்கங்களும்" இந்த மண்ணுக்கு செய்த/செய்யும் களப்பணி ,தமிழ் தேசியத்தின் படிக்கற்க்களே."பெரியாரை புறம் தள்ளி இந்த மண்ணின் விடுதலையை முன்னெடுக்க முடியாது" என கூட்டமைப்பின் சார்பாக தீர்மானம் நிறைவேற்றி,போலி தமிழ் தேசியவாதிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர்.
"ராமன் படம் எரிக்கும் போராட்டடத்தில் போராட்டத்தில் வந்து செருப்பு ஏறிந்து,ராமன் பட எரிப்பு போராட்டத்தை ,"ராமனை செருப்பால் அடித்த போராட்டமாக மாற்றியவர்களே பெரியார் தொண்டர்கள்" என்பதை எதிரிகள் உணர்ந்து கொஞ்சம் சூதானமா பெரியாரை எதிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஆக,இப்படி காவிகளின் சூழ்ச்சி வலைகளை தகர்த்தேரிந்தும்,காலை விழிப்பதே பெரியார் எதிர்ப்பை பேசத்தான் எனத் திரியும் கோமாளி குழுக்களின் தமாசு திட்டங்களையும் "பெரியாரிஸ்ட்டுகளும்,பெரியார் ஆதரவாளர்களும்,முற்ப்போக்காளர்களும்" சேர்ந்து எதிர்கொண்டு 2016 யையும் சிறப்பான வருடமாக மாற்ற வாழ்த்துக்கள்.
(கட்டுரையின் தலைப்பிற்கு ஏற்ப,இதில் கூறப்பட்ட காவி மற்றும் போலி தமிழ் தேசியவாதிகள் கூட்டத்தில் எந்த கூட்டம் கயவாளிக் கூட்டம் ,எந்த கூட்டம் கோமாளிக் கூட்டம் என நீங்களே முடிவு செய்து கொள்ளவும்)
மனோஜ் குமார்-தந்தை பெரியார் திராவிடர் கழகம்