1991-92 மற்றும் 1997-1999 ஆகிய ஆண்டுகளில் உத்திரப்பிரதேசத்தின் முதல்வராக பதவி வகித்தவர்தான் கல்யாண்சிங். இதனைவிட முக்கியமானது, பாபர் மசூதி இடிப்பிற்காக, பாசக-வினால் மிகவும் முன்னிறுத்தப்பட்டவர் இவர். லிபர்கான் ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்ட இவர் தனது பதவியினை இழந்தார். பாபர் மசூதியினை இடித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என உவகை பொங்க 2007-ம் ஆண்டில் ஊடக வாயிலாக பேட்டியும் அளித்தவர். கட்சி தன்னை ஓரம் கட்டுவதனால் இருமுறை கட்சியிலிருந்து வெளியே சென்று மீண்டும் உள்ளே வந்தவர். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினரின் பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்திற்காக, தேசம் முழுவதும் இவர் பாசக-வின் ஆகப் பெரும் தலைவராக முன்னிறுத்தப்பட்டார். ஆனால் இன்று இவரின் முகவரி, நடந்து முடிந்த தேர்தலில் தேட வேண்டியதாக உள்ளது.

modi advani 360பாசக-வில் தேசியத் தலைவராக வலம் வந்த முதல் தலித் தலைவர், ஐதாராபத்தைச் சேர்ந்த பங்காரு லட்சுமணன் ஆவார். பாசக ஒரு தலித்தை தேசியத்தில் கொண்டுபோய் சேர்த்திருக்கிறதே என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டுக் கொண்டனர். ஆனால் அவர் ஓராண்டுகள் கூட அதில் நிலைக்கவில்லை. தெஹல்கா புலனாய்வு அமைப்பு அம்பலப்படுத்திய ஆயுத பேர ஊழலினால் தனது தேசியத் தலைவர் பதவியினையும், தேசிய செயற்குழுவில் இருந்தும் விலக்கப்பட்டார். அந்த அளவிற்கு ஊடகங்கள் இவருக்கு எதிராய் கோசமிட்டன. இந்த ஊழலுக்காய் புலானாய்வு நீதிமன்றம் இவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தனது உடல்நலக் குறைவால் பிணையில் வெளியே வந்தவர், சமீபத்தில் உயிரிழந்தார். பாசக-வில் பல்வேறு பொறுப்புகளை வகித்தும், சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்தவர் இவர்.

சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்று, தற்போது மோடி அரசின் நீர்வளத்துறை அமைச்சராக உள்ளவர், உமாபாரதி அவர்கள். மத்தியப் பிரதேச அரசியல்வாதியான இவர், பாசக-வின் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். வாஜ்பாய் அரசின் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றவரும் கூட. இவர் கட்சியில் உயர்ந்து வரும் சூழலில் பாசகவில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டும் ஓராண்டிற்குள் சேர்ப்பிக்கப்பட்டார். அதேபோல் மீண்டும் ஒருமுறை நீக்கப்பட்டார். கட்சியில் தனது செல்வாக்கினை இழந்த இவர், ஒதுக்கப்படுதலை அறிந்தும் வேறுவழியின்றி மீண்டும் ஒட்டிக் கொண்டு தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். இவர் சேது கால்வாய் பாலம் அமைக்கும் திட்டத்தினை களைய பயன்படுத்தப்பட்டவர்.

கல்யாண்சிங், பங்காரு லட்சுமணன், உமாபாரதி வரிசையில் தற்போது இந்தியாவின் முன்னாள் துணை பிரதமரான லால் கிருஷ்ணா அத்வானியும் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த இந்தியாவின் கராச்சியில் (தற்போது பாகிஸ்தான்) சிந்தி குடும்பத்தில் பிறந்தவர் அத்வானி. சுதந்திர இந்தியாவில் மும்பை மாநகரிலே தனது குடும்பத்தாரோடு குடியேறிய இவர், கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஆசிரியராகப் பணியாற்றினார். பிறகு இந்துத்துவா எனும் பாசிச கொள்கையுடைய ஆர்.எஸ்.எஸ் அமைப்பினால் ஈர்க்கப்பட்டு 1942-ம் ஆண்டிலிருந்து, அதில் தீவிரமாய் பங்கெடுத்தார். 1951-ல் அமையப் பெற்ற பாரதிய ஜனசங்கத்தில் உறுப்பினராய் சேர்ந்து தனது அரசியல் பாதையைத் தொடங்கினார். இப்படியாக தனது ஜனசங்க அரசியலில் வேகமாக வளர்ந்த இவர், 1975-ல் அதன் தலைவராகவும் ஆகினார். இந்திரா காந்தியின் அவரசரநிலைப் பிரகடனத்தை எதிர்க்க, ஜெயப்பிரகாஷ் நாராயணனை உடன் இணைத்து, தேசிய அளவில் எதிர்க்கட்சியாக ஜனசங்கத்தை மாற்றினார். பின்னர் 1977-ல் இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராக தேர்வானார். தான் (ஆர்.எஸ்.எஸ்) எதிர்பார்த்த இலக்கை ஜனசங்கம் மற்றும் ஜெயபிரகாஷால் பெற்றவுடன் அவர்களைக் கழற்றிவிட்டு, ஆர்.எஸ்.எஸ் பாசிச அமைப்பினால் நேரடியாக அமையப் பெற்ற வாஜ்பாய் தலைமையிலான பாசக-வில், பொதுச் செயலாளராக மாறினார் திரு.எல்.கே.அத்வானி.

இதனையடுத்து 1986-ல் அக்கட்சியின் தலைவராக நியமனமான இவர், கட்சி ஆட்சியைப் பிடிக்க ஏதுவாக தனது ஆர்.எஸ்.எஸ் முகத்தினை நேரடியாகக் காட்டினார். அப்பொழுதுதான் அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவோம் என முழக்கங்கள் இட்டு, இரத‌ (இரத்த) யாத்திரியினை நடத்தி, இந்துக்கள் மத்தியில் மிகப்பெரும் விசமங்களை அத்வானி பரப்பினார். இதனால் தேசம் முழுவதும் இசுலாமியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன. இந்தத் தருணத்தில்தான் நமது தாயகத் தமிழகத்திலேயும் ஆர்.எஸ்.எஸ் எனும் கொடிய அமைப்பின் ஒருபகுதியான இந்து முன்னணி எனும் அபாயகரம் பிறந்தது. தமிழர்களாக வலம் வந்து கொண்டிருந்த நாம் இவர்களால்தான் மதங்களாகப் பிளவுபட்டு, இன்னும் அதன் சூழ்ச்சியிலயே சிக்கிக் கொண்டு, நமக்கான தேசியப் போராட்டத்தில் தோல்வியில் உள்ளோம்.

இப்படி நாடு முழுவதும் ஒரு விசமப் பிரச்சாரத்தினை கையிலெடுத்த அத்வானி, அதேவேகத்தில், 1992 திசம்பரில் பாபர் மசூதியினை இடித்து, பாசக-வின் அசைக்க முடியாத நபராகவும், தலைவராகவும் உருவெடுத்தார். இவரின் இந்துத்துவத் தீவிரவாதங்களினால், பாசக 1996-ல் ஆட்சியைப் பிடித்து சொற்ப நாட்களிலயே அதனை இழந்தாலும், மீண்டும் 1998-ல் ஆட்சியைப் பிடித்து, 2004-வரை நீடித்தது. இந்த ஆட்சியில்தான் அத்வானி இந்தியாவின் துணைப் பிரதமருமானார். இந்த ஆட்சிக்குள்ளான காலத்தில்தான், அத்வானி ஓரம் கட்டப்படுதலின் ஆரம்பமாக, மோடி உருவாகத் தொடங்கினார். அவரின் இருப்பை, அத்வானிக்கோர் இரத‌யாத்திரையைப் போல, 2002-ம் ஆண்டைய குஜராத்தின் இசுலாமிய இனப் படுகொலை மூலம் ஆர்.எஸ்.எஸ் வெளிக்கொணர்ந்தது எனலாம்.

ஆர்.எஸ்.எஸ் எனும் தீவிரவாத அமைப்பின் (16-குண்டு வெடிப்புகளின் மூல காரணம், ஆர்.எஸ்.எஸ்-தான் எனும் சமீபத்திய உளவுத்துறையின் நிரூபணங்களின் மூலமும், அசிமானந்தாவின் வாக்குமூலங்கள் மூலமும்) ஜனநாயக முகமூடிக்காக தோற்றுவிக்கப்பட்ட பாசக உருவாவதில் இருந்து, அது வளர்ந்து ஆட்சியைப் பிடிக்கும் வரை மிக நன்றாகப் பயன்படுத்தப்பட்ட அத்வானி தற்போது தனது செல்வாக்கை இழந்து, ஓரங்கட்டப்பட்டு வருவதனை நாம் கண்கூடாகக் காண்கிறோம். 2004-ம் ஆண்டுக்குப் பிறகு, 2009-ம் ஆண்டைய தேர்தலில் அத்வானி முன்னிறுத்தப்பட்டு, பாசக தோல்வியினைத்தான் தழுவியது. இந்தக் காலங்களில்தான் குஜராத்தில், இசுலாமியர்களை ஒடுக்கியும், அவர்களை வெளியேற்றியும் தொடர்ந்து அடக்குமுறைகள் மூலம் முதல்வராக நீடித்துக் கொண்டிருந்த மோடி, பாசக-வினால் முன்னிறுத்தப்படுகிறார். அதனைத் தொடர்ந்து மிகவும் தீவிரவமாக மோடி அரசிற்கு பாசக-வினரும், கார்ப்பரேட் கம்பெனிகளும் ‘வளர்ச்சி நாயகன்’ பட்டத்தினை அளித்தன‌. இது தொடர்ந்த நிலையில் இருக்க, மோடி இந்திய முதலமைச்சர்களுக்கு ஒரு முன்மாதிரி போலவும், குஜராத் இந்தியாவின் வளர்ச்சியில் ஓங்கி இருப்பதாகவும் நீண்டது மோடிக்கான முன்னிறுத்தல்களும், அத்வானிக்கான ஒதுக்கப்படுதலும்.

இந்த சமயங்களிலெல்லாம், அத்வானி எதிர்பார்த்திருக்கமாட்டார். திடீரென்று 2014-மக்களவைத் தேர்தல் நெருங்குவதற்கு ஓராண்டிற்கு முன்னதாக மோடிதான் பாசகவின் பிரதம வேட்பாளர் என்றும், தேர்தல் பிரச்சாரக்குழு தலைவரென்றும் புதிய யுக்திகளைக் கை கொண்டது அக்கட்சி. இந்தத் தருணங்களில் அத்வானி மாபெரும் அதிருப்தி அடைந்து, சமீபத்தில் (தேர்தலுக்கு முன்னதாக) கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகியும், கட்சியிலிருந்தே வெளியே செல்வதாகவும் அறிக்கை வெளியிட்டார். இதேபோன்றதொரு அவமான மற்றும் ஒதுக்குதல் நடவடிக்கைகள்தான் மேற்சொன்ன, உமாபாரதி, கல்யாண்சிங் ஆகியோருக்கும் நேர்ந்ததும், அதன் பின்னணியில் அவர்களின் வளர்ச்சியுமே காரணம் என்பதும் குறிப்பிட்டுப் பார்க்க வேண்டியதாகும். பங்காரு லட்சுமணனுக்கோ உயர்வைக் கொடுத்து, பிறகு ஒரு இழிவை திட்டமிட்டு ஏற்படுத்தி விலக வைத்தது எனலாம். ஏனெனில் இன்றுள்ள பாசக-வின் தலைவர்களில் எத்தனையோ நபர்களின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும், பாலியல் குற்றச்சாட்டுகளும், மோடிக்கோ இனப்படுகொலையாளி என நிரூபண‌க் குற்றமும் உள்ள நிலையில் இவர்களையெல்லாம் ஊடகங்கள் பதவி விலகச் சொல்லி பங்காருவிற்குப் போன்றதோரு ஊளையை விடவில்லை. ஆனால் பங்காருவிற்கோ தேசம் முழுவது ஊடகங்களால் பாசக-வே மிக அழகாக எதிர்ப்பினை ஏற்படுத்தி விலக வைத்தது.

பாசகவின் மிகப்பெரும் வளர்ச்சிக்குத் தூணான அத்வானி மிகச் சுலபமாக தூக்கி வீசப்பட்டார். பிறகு வேறு வழியின்றி, தனது அறிக்கையினை திரும்பப் பெற்றுக் கொண்ட இவர், மனதில் ஆறாக் காயங்களுடன் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பங்கெடுத்துக் கொண்டு, போட்டியிட்டு வென்றவருக்கு மோடியின் மந்திரி சபையில் இடம் மறுக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளார். இதுவெல்லாம் அத்வானி நிச்சயமாக எதிர்பார்த்திருக்கவே மாட்டார். கட்சியின் தூணாக விளங்கிய தனக்கே இப்படியான ஒருகதி வருமென அவர் நினைத்தே இருக்க மாட்டார்.

இதற்கெல்லாம் காரணம், பாசக என்பது பார்ப்பனியத்தின் ஆட்சிக்காக ஆர்.எஸ்.எஸ் ஏற்படுத்தியுள்ள ஒரு ஜனநாயக முகமூடி என்பதுதான். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல் திட்டமானது, இந்தியாவில் ஹிந்து ராஷ்ட்டிரம் ஏற்படுத்துவதுதான். ஹிந்து ஆட்சி என்று இவர்கள் முன் வைப்பதில், மத்தியத் தரைக்கடலிலிருந்து, கைபர், போலன் கணவாய் வழியாக கால்நடைகளை மேய்த்துக் கொண்டு வந்து இந்தியாவில் தஞ்சமடைந்த ஆரிய இன வகையறாக்களான பார்ப்பனர்களின் ஆட்சி மட்டுமே. இதுதான் பாசக, இதுதான் ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ் எனும் மரத்தின் வேர்கள்தான் பார்ப்பனர்கள். ஏனைய இந்துக்கள் என அறியப்படுபவர்கள் எல்லாம் அதன் கிளைகளும், இழைகளுமே ஆவார்கள். தங்களது வேர் நிலைத்து நிற்க இவர்கள் பல கிளைகளையும், இழைகளையும் பயன்படுத்திக் கொண்டு, உதிர்த்து எறிந்துவிடுவார்கள். அந்த வகையில் சேர்பவர்கள்தான், கல்யாண்சிங், உமாபாரதி, பங்காரு லட்சுமணன், அத்வானி போன்றவர்கள். தமிழகத்திலே இதற்கொரு உதாரணமாய் நாம் சொல்ல வேண்டுமெனில், இந்து தலித் தோழர்களைச் சொல்லலாம். ஆண்டுதோறும் விநாயகர் ஊர்வலத்திற்க்காய் இங்குள்ள எண்ணற்ற தலித் தோழர்கள் பயன்படுத்தப்பட்டு, அவர்களைக் கொண்டு இசுலாமியர்களைத் தாக்கும் வேலைகளை இராமகோபலய்யர் கும்பல்கள் செய்து வருகின்றனர். இங்கு கவனிக்க வேண்டியது, தலித் தோழர்கள் தேர் இழுக்கவும், கலவரம் செய்யவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு பின்பு அவர்களின் சேரிகளை கொளுத்தி, காலைவாரிவிடுவதுதான் இங்கு வாடிக்கை.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்பது ஆரியத்தின் வழிவகையிறாக்கள். உலக அளவில் ஆரியத்தின் சுவடுகளாக உள்ளவர்கள் யூதர்கள். இவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்திட்டங்களுக்கான முன்னோடிகள். உலகில் பல்வேறு பயங்கரவாதத்தினை யூதர்களின் நாடான இஸ்ரேல் தனது ‘மொஸாட்’ எனும் உளவு அமைப்பின் மூலம் நிகழ்த்திவிட்டு, வெளியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டுள்ளது. தங்களது பயங்கரவாதத்தினால் பாலஸ்தீனம் எனும் ஒரு நாட்டையே சூறையாடி, 1948-ல் இஸ்ரேலை உருவாக்கினார்கள். இவர்களின் பாசிசக் கோட்பாட்டை கையில் கொண்டவர்தான் முசோலினி. இந்த முசோலினியினை தங்களது ஆசானாகக் கொண்டவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர். இஸ்ரேல், முசோலினி, ஆர்.எஸ்.எஸ் என்பவைகள் பாசிசத்தின் மாறுபட்ட பிம்பங்களே ஆகும்.

உலக அளவில் எப்படி மொஸாட் தங்களது காய்களை நகர்த்தி, அமெரிக்காவை பொம்மையாக ஆட்டிவித்துக் கொண்டுள்ளதோ, அதேபோலத்தான், தங்களது கொள்கைகளை இந்தியாவில் நிறைவேற்ற ஆர்.எஸ்.எஸ் வைத்திருக்கும் ஜனநாயகப் பொம்மைதான் பாரதிய சனதா கட்சி. இங்கு எப்படி பார்ப்பன‌ர் அல்லாதவர்கள் நிலைக்க முடியும்?

பங்காரு லட்சுமணன் அதன் தலைவராக இருந்த போதும் கூட, அவர் வெறும் பொம்மையாகவே, ஒரு போலி தோற்றத்திற்க்கான நபராகவே பயன்படுத்தப்பட்டு, பிறகு நாங்கள் தலித்தைக் கூட தலைவர்கள் ஆக்கியுள்ளோம் என்கிற பிம்பத்தை விதைத்து, தலித்தானவர் ஊழலில் சிக்கி கட்சியிக்கு அவப்பெயர் விளைவித்ததாக காய்களை நகர்த்தி, ஆர்.எஸ்.எஸ் தனது அரசியல் இலாபிக்கு, பங்காருவைப் பயன்படுத்திக் கொண்டது. இப்படித்தான் அது இந்தியவில் உள்ள அனைத்து தலித்துகளையும், சாதிய இந்துக்களையும் பயன்படுத்திக் கொண்டுள்ளது. தனது காரியம் நிறைவேறியவுடன், தலித்களுக்கும், பிற வகுப்பினருக்கும் இடையே பகையை மூட்டிவிட்டு, சமூகங்களைப் பிரித்து வைத்துக் கொள்ளும். இதுதான் இந்தியாவில் நாம் கண்டுவரும் நிலைப்பாடு.

பாபரி மசூதி இடிப்பிற்கு கல்யாண்சிங்கும், சேது கால்வாய் திட்ட எதிர்ப்பிற்கு உமாபாரதியும், தலித் தலைமை எனும் மாயைக்கு பங்காரு லட்சுமணனும், ஜனசங்கத்திலிருந்து கட்சியின் அனைத்து வளர்ச்சிக்கும், இரதயாத்திரைக்கும் அத்வானியும், பயன்படுத்தி ஓரம்கட்டப்பட்டதினைப் போல, தற்போது பாசகவின் ஆட்சிக்காய் மோடி என்பார் பயன்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளார். இவரைக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் என்னவெல்லாம் நினைத்துள்ளதோ அவைகளையெல்லாம் நிறைவேற்றிய பின், கட்சியில் மோடிக்கான இடத்தை குறைக்கத் தொடங்கி, இன்னொரு முகத்தினை முன்னிறுத்த ஆரம்பித்துவிடுவார்கள். ஏனெனில் மோடியும் பார்ப்பனர் இல்லையே.

ஆர்.எஸ்.எஸ் எனும் அபாயகரமானது, வருங்காலத்தில் இந்தியாவை இல்லாமல் ஆக்கி, அதனை தனது உலக வாழ் இனத்தின் கைக்கூலியாக மாற்றும் திட்டத்தினைக் கூட கொண்டிருக்கலாம். அதற்கான முகாந்திரமாகத்தான் இராஜபக்சே எனும் இனப்படுகொலையாளனின் உறவு என்பதாகக் கூடத் தெரிகின்றது. தங்களது ஆக்டோபஸ் கரங்களை உலக பயங்கரவாதிகள் இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் என்பதன் வாயிலாக ஊடுருவவிட்டிருக்கிறார்கள் போலும்.

எது எப்படியோ, இந்தியமாக இருக்கும் வரையில்தான் அவர்கள் இங்கு நிலைகொள்ள முடியும். மொழிவாரி மாநிலங்கள், தங்களுக்கான தேசியங்களை முன்னெடுக்கும் பட்சத்தில் பாசிசத்தின் திட்டங்களை அதிகபட்சமாக முறியடிக்க முயலும். இதே நோக்கில் தமிழர்களாகிய நாம், நமக்கான தேசியப் போராட்டத்தினை தீவிரப்படுத்தியாக வேண்டும். அதற்கு நமக்குள்ளிருக்கும் சில முரண்களைக் களைந்து, தமிழர்களாக ஒன்றிணைய வேண்டும். நட்பு முரணை மட்டுமே நாம் தூக்கிப் பிடித்துக் கொண்டுள்ள நாம், இனியாவது பகை முரணை அறிந்து அதனைத் தூக்கிப் பிடித்து, பாசிச சக்திகளை முறியடித்து, நம் சொந்தங்களையும், மண்ணையும் காப்போம், தமிழர்களாக.

-‍ பழனி ஷஹான் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It