10-09-2012 ம் தேதி அணு உலைக்கு எதிராக கூடங்குளம் இடிந்தகரையில் போராடிக் கொண்டிருந்த மக்கள் மீது காவல் துறை நடத்திய தாக்குதலை வன்மையாக மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டிக்கிறது. இத்தாக்குதல் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். கடந்த 390 நாட்களுக்கும் மேலாக அமைதியான வழியில் போராடிக் கொண்டிருக்கின்றனர். கூடாங்குள பகுதி மக்களுக்கு சனநாயக வழியில் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் உரிமை உள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்தில்  கூடாங்குள அணுமின் நிலைய வழக்கு தள்ளுபடியான  நிலையில் அத்தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் உரிமை உள்ளது. ஆனால் மேல் முறையீடுக்கு கால அவகாசம் தராமல் உடனடியாக எரிபொருளை அணு உலையில் நிரப்புவது சனநாயக விரோதமானது. பல்வேறு விதிமீறல்கள், சர்வதேசதரத்துக்கு ஏற்ப செய்யாத அணுஉலையாக  கூடங்குளம் அணுஉலை உள்ளது.

சனநாயக அகிம்சை போராட்டத்தை அரச வன்முறை மூலம் நசுக்குவதும், குழந்தைகள், பெண்கள், உள்ளிட்ட பொதுமக்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு தாக்குதல், போராட்ட தலைவர்களை குறி வைத்து தாக்குவது, மீனவ கிராமங்களில் அரச வன்முறை அச்சுறுத்தலை மத்திய மாநில அரசுகள் இணைந்து கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த நிகழ்வு தாமிரபரணி மற்றும் மேற்கு வங்கத்தின் நந்தி கிராம் நிகழ்வுகளுக்கு இணையானது. இந்த மனித உரிமை மீறல்கள் கண்டிக்க தக்கது. உடனே தடுக்கபட வேண்டியது. காவல் துறை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தபட வேண்டும்.ச.பாலமுருகன்மாநில செயலாளர்மக்கள் சிவில் உரிமை கழகம்.10-09-2012 ம் தேதி அணு உலைக்கு எதிராக கூடங்குளம் இடிந்தகரையில் போராடிக் கொண்டிருந்த மக்கள் மீது காவல் துறை நடத்திய தாக்குதலை வன்மையாக மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டிக்கிறது. இத்தாக்குதல் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். கடந்த 390 நாட்களுக்கும் மேலாக அமைதியான வழியில் போராடிக் கொண்டிருக்கின்றனர். கூடங்குளப் பகுதி மக்களுக்கு சனநாயக வழியில் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் உரிமை உள்ளது. சென்னை உயர்நீதி மன்றத்தில்  கூடங்குள அணுமின் நிலைய வழக்கு தள்ளுபடியான  நிலையில் அத்தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் உரிமை உள்ளது. ஆனால் மேல் முறையீட்டுக்கு கால அவகாசம் தராமல் உடனடியாக எரிபொருளை அணு உலையில் நிரப்புவது சனநாயக விரோதமானது. பல்வேறு விதிமீறல்கள், சர்வதேசதரத்துக்கு ஏற்ப செய்யாத அணுஉலையாக  கூடங்குளம் அணுஉலை உள்ளது.

சனநாயக அகிம்சை போராட்டத்தை அரச வன்முறை மூலம் நசுக்குவதும், குழந்தைகள், பெண்கள், உள்ளிட்ட பொதுமக்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு தாக்குதல், போராட்ட தலைவர்களை குறி வைத்து தாக்குவது, மீனவ கிராமங்களில் அரச வன்முறை அச்சுறுத்தலை மத்திய மாநில அரசுகள் இணைந்து கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த நிகழ்வு தாமிரபரணி மற்றும் மேற்கு வங்கத்தின் நந்தி கிராம் நிகழ்வுகளுக்கு இணையானது. இந்த மனித உரிமை மீறல்கள் கண்டிக்க தக்கது. உடனே தடுக்கபட வேண்டியது. காவல் துறை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தபட வேண்டும்.

ச.பாலமுருகன்
மாநில செயலாளர்
மக்கள் சிவில் உரிமை கழகம்.

Pin It