மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருவது தென்மண்டல மொழிகளின் மையம் இம்மையத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் இம்மொழிகளை தாய்மொழியாக கொண்டிராதவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன. இம்மையத்தின் முக்கிய நோக்கம் இந்திய ஆட்சிப்பணியாளர்கள் வேற்று மாநிலத்தில் பணி நிமித்தம் செய்யப்படும் போது அவர்களுக்கு அம்மாநில மொழி பயற்சி அளிககும்; நோக்கிலும் ஒவ்வொரு மாநிலத்தின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் பள்ளிகூடங்களில் பணிப்புரியும் ஆசிரியர்களுக்கும் மொழி பயிற்சி அளிக்கும் நோக்கில் இம்மையம் அமைக்கப்பட்டது. ஆட்சிப் பணியாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வேற்று மொழி அதாவது அம்மாநில மொழியையும், பண்பாட்டையும, ; இலக்கியத்தையும் அறிமுகபபடுத்துவதன் மூலம் அம்மாநில மக்களின் தேவைகளை குறிப்பறிந்து பூர்த்தி செய்ய முடியும். மேலும் வேறுபட்ட மொழி பேசும் மக்களிடையை புரிந்துணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை வலுபடுத்த முடியும் என்ற உயரிய இலக்கோடு அன்றைய பாரத பிரதமர் மாண்புமிகு ஜவஹர்லால் நேரு அவர்களால் 1969 இல் தொடங்கப்பட்டது.

 மைசூரில் உள்ள தென்மண்டல மொழிகளின் மையத்தைப் போல பாட்டியாலாவிலுள்ள வடக்கு மண்டல மொழிகளின் மையம், பூனாவிலுள்ள மேற்கு மண்டல மொழிகளின் மையம், புவனேஸ்வரிலுள்ள கிழக்கு மண்டல மொழிகளின் மையம், கௌகாத்தியிலுள்ள வடகிழக்கு மண்டல மொழிகளின் மையம் ஆகிய ஐந்து மையங்களும் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. இம்மையங்களின் மூலம் இந்திய அட்டவணைப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பதினெட்டு மொழிகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. வொவ்வொரு மொழிக்கென்றும் குறிபிட்ட அளவு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் மொழியைப் பயில்வதற்காக வொவ்வொரு வருடமும் நாற்பத்து நான்கு நபர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. நாற்பத்தி நான்கில் எட்டு இடங்கள் இலங்கையிலிருந்து வரும் மொழி ஆசிரியர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இம்மொழிப் பயிற்சி பத்து மாதங்கள் நடைபெறுகிறது. ஜூலை முதல் தேதியில் தொடங்கி ஏப்ரல் இறுதியில் முடிவடைகிறது.

 கடந்த இரண்டு ஆண்டுகளாக தென்மண்டல மொழிகளின் மையத்தில் நான் தமிழ் மொழி பயிற்றுனராக பணியாற்றி வந்தேன. ; சென்ற கல்வி ஆண்டும் சிங்கள மொழியை தாய்மொழியாக கொண்ட எட்டு அரசாங்க ஆசிரியர்கள் இலங்கையிலிருந்து வந்திருந்தனர். அவர்கள் இம்மையத்தில்; பயிற்சிளர்களாக இருக்கும்போது “இலங்கையில் தமிழ் மொழியின் நிலைப்பாடு குறித்தும், எதற்காக தமிழ் கற்றுகொள்கிறீர்கள்; என்பது குறித்தும் ஓரிரு பக்கங்களில் கட்டுரை எழுதித் தரும்படி அவர்களிடம் கேட்டுக்கொண்டேன். அவர்கள் கொடுத்த அக்கட்டுரைகளை படித்தபோது இலங்கையில் தமிழ் மொழிக்குறிய முக்கிததுவத்தையும் வேறுபட்ட இனங்கள் ஒரு நாட்டில் வாழும்போது அவ்வினங்களின் மொழி மற்றும் பண்பாடு குறித்து அரசாங்கத்திற்கும் மற்றும் மக்களுக்கும் தெளிவின்மையால், தமிழ் - சிங்கள மக்கள் முகங்கொடுத்த யுத்தமும் யுத்தத்தின் முடிவும் ஓரு கசப்பான வரலாற்று சம்பவமாக அவர்கள் ஆழ்மணதில் பதிந்துள்ளதைக் காணமுடிந்தது. அவர்கள் கொடுத்த அக்கட்டுரைகளை இந்திய ஆட்சியாளர்கள் மற்றும் மக்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டுமென்ற எண்ணத்தில் பொக்கிசமாக நினைத்து பாதுகாத்து வந்தேன். அக்கட்டுரைகளில் யசந்தி பிரியதர்சினீ, அஜித் அத்துகோரள, ஆர். ஏ. ஜே. ரூபசிங்ஹ ஆகிய மூவரின் கட்டுரைகளை உங்களின் பார்வைக்கு எவ்வித மாற்றமும் இன்றி தொகுத்தளித்திருக்கிறேன்:

யசந்தி பிரியதர்சினீ : இந்து மகா சமுத்திரத்தில் அமைந்துள்ள இலங்கை, உலகத்தில் புகழ்பெற்ற ஓர் அழகான சிரிய நாடு. இங்கே சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய இனங்கள் காணப்படுகின்றன. அவை மட்டுமின்றி பௌத்தம், இந்து, இஸ்லாம் ஆகிய மதங்களும் இருக்கின்றன. சிங்களமும் தமிழும் இலங்கை மக்களது முக்கிய தொடர்பு மொழிகளாகும். நமது நாட்டிலே சிங்கள மொழி தாய்மொழியாக ஏற்றுக்கொள்கிறோம். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பேசுகின்ற தமிழ் மொழியை இரண்டாம் தேசிய மொழியாக அங்கீகறிக்கப்பட்டுள்ளது.

 இந்தியாவின் வட தென் பிரதேசங்களில் இருந்து குடிபெயர்ந்தோர் இலங்கையைத் தாயகமாகக் கொண்டு இரண்டாயிரம் ஆண்டுகளாக இலங்கையின் வரலாற்றைக் கட்டி எழுப்பினார்கள் எனத் தொல்பொருள் ஆய்வுகளும் வரலாற்று தரவுகளும் சான்று பகருகின்றன. அவர்களுள் வட இந்திய பரம்பரையினர் எனக் கருதும் சிங்களவர் ப+ரண சுதந்திரத்தைப் பெற்றிருந்த போதிலும் இலங்கைத் தமிழர்கள் தென் இந்திய சோழ மன்னர்களுடன் தொடர்புக் கொண்டிருந்தமையினாலே அவர்களின் ஆதிக்கத்திலிருந்து மீள முடியாதவராயினர் சிங்களவர்கள். வரலாற்றுக்காலம் முழுவதிலும் இந்நாட்டுத் தமிழர் வாயிலாகவும் இந்தியாவிலிருந்து நேரடியாகவும் கலாச்சார ஆதினத்தைப் பெற்றார்கள். இதன் பயனாக இந்த இரு இன மக்களும் பேனிக்காத்து வரும் மதவழிபாடுகள், இலக்கிய ரசனைகள், வாழ்க்கை முறைகள், சம்பிரதாயங்கள், பண்பாடுகள் போன்ற இன்னோரன்ன துரைகளில் ஒருமைபாடுடைய ஓர் இலங்கைக் கலாச்சாரம் தோன்றியது. வரலாற்றின் ஆரம்ப காலத்தில் இருந்து சிங்கள தமிழ் மக்கள் வாழ்வும் சிங்கள தமிழ் மொழிகளும் ஒன்றையொன்று போதனை செய்து மேம்பட்டு வந்தன. சிங்களவர்களின் கல்வெட்டுக்கள் தமிழ் மொழியில் எழுதப்பட்டன. தமிழ், வடமொழி, பாலிமொழி படிக்காதவர்கள் மூடர் ஆவார் என அழகியகவண்ணமுகவெட்டி எனும் புகழ் பெற்ற கவிஞர் கூரினார். தனது தாய்மொழியோடு வேறுபல மோழிகளை அறிந்திருப்பது பாண்டித்திய இலட்சனம் என அவர் கருதினார்.

 அரசியலமைப்புக்கு 1987 இல் கொண்டுவரப்பட்ட பதின்மூன்றாம் திருத்தத்தின் வண்ணம் சிங்களம், தமிழ் ஆகிய இருமொழிகளும் அரச கரும மொழிகளாக்கப்பட்டது. ஆங்கிலம் இணைப்பு மொழியாக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பாக அரசாங்க ஊழியர்கள் நிருவாக மொழிகளில் புலமை பெற வேண்டுமெனக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இலங்கை வாழ் மக்கள் இவ்விரண்டு மொழிகளில் புலமை பெறுவது காலத்துக்கு இண்றியமையாத தேவையாக மாறியுள்ளது.

 சிங்கள மக்களும் தமிழ் மக்களும் பல்லாண்டு காலமாக இலங்கையில் வாழ்ந்து வந்தனரெனினும் சிங்களம் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமைப் பெற்றவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களாக இருப்பது வருந்தத் தக்கது. இதன் காரணமாக இவ்விரு இனங்களின கலாசகாரங்களைப் புரிந்து கொல்வதிலும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதிலும் நிலவிய வேறுபாடு இனமோதல் வரை வளர்ச்சியுற்றமை முழு நாட்டினையும் பாதித்துள்ளது.

சிங்கள மொழியின் சால்பினைக் குறித்து நாங்கள் பெருமைப்பட வேண்டியவர்கள் ஆவோம். அதே நேரத்தில் பழம்பெருமையும் பண்டைய பண்பாடும் கொண்ட தமிழ் மொழியினையும் போற்றவேண்டியவர்களாக இருககின்;றோம். எனவே சிங்கள மக்கள் தமிழ்மொழியும் தமிழ் மக்கள் சிங்கள மொழியும் கற்கும் அதே நேரத்தில் இரண்டு இன மக்களும் ஆங்கில மொழியையும் கற்றல் இன்றைய தேவையாகும். இது நாம் வாழும் சமுகம் வளம் பெற துணைபுரியும்.

அஜித் அத்துகோரள : “நான் எதற்காக தமிழ் கற்றுக்கொள்கிறேன்?” என்ற கேள்விக்கு பதிலாக பின்வரும் காரணங்களை படிப்படியாக எழுதுகிறேன். 04. 02. 1948 ஆந் திகதி நமது நாடு சுதந்திரத்தை பெற்றது. அதற்கு பின் சிங்கள, தமிழ், மற்றும் முஸ்லிம், நாங்கள் பெற்ற விடுதலையின்கீழ் சந்தோசமாக வாழ்ந்தோம். ஆனால், 1980 ஆம் ஆண்டு முதல் நாங்கள் ஓர் இருண்ட காலத்திற்கு முகம் கொடுத்தோம். அது வேரொண்ணுமில்ல, சிங்கள-தமிழ் யுத்தம்எங்களால் புரிந்துகொள்ள முடியாத ஒரு சிரிய காரணத்தின் அடிப்படையில் இது ஏற்பட்டுள்ளது. அதற்கு பிறகு இந்த பிறச்சனையை சமாளிப்பதற்காக பல அரசியல் தலைவர்கள் முயற்சி எடுத்தாலும் கடைசியில் கிடைத்த முடிவு அவ்வளவு வெற்றிகரமாணதாக இல்லை.

 இலங்கை இன முரண்பாட்டின் வரலாற்றை ஆய்வுச் செய்தபோது, அவரவரது மொழித் தொடர்பாக இருந்த தெளிவின்மையை அதற்கு முக்கிய காரணம் என்பது தெளிவாகிறது. அதன்படி நாட்டில் அனைத்து மக்களும் தனது இரண்டாம் மொழியைத் தெறிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டுள்ளது.

 கூடுதலாக இதை கல்வித்துறைமூலம் வெற்றிகரமாகச் செய்யமுடியும் என்ற எண்ணத்தில் சிங்களம் கற்கிற மாணவர்களுக்கு இரண்டாம் தேசிய மொழி தமிழும் தமிழ் கற்கிற மாணவர்களுக்கு சிங்களமும் கற்பிப்பதற்காக இலங்கை அரசாங்கம் முடிவு எடுத்தது. அதன்படி இந்த முறையில் பாடசாலைகளில் கல்வி கற்பிப்பதற்காக தகுதியுள்ள ஆசிரியர்கள் தேவைப்பட்டுள்ளது. இதற்காக வொவ்வொரு பாடசாலையிலிருந்தும் தமிழ் மொழியை கற்பதற்காக விரும்பிய ஆசிரியர்களை தெரிவு செய்து அவர்களுக்கு வி;சயத்தை பற்றி பயிற்ச்சி கொடுப்பதற்காக தேவையான வசதிகள் கல்வி அமைச்சகத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. அதனால் சின்னபருவத்தில் இருந்து தழிழ் படிக்கறத்திற்காக என் மனதிலுள்ள ஆசைக்கு இது ஒரு நல்லச் சந்தர்பம். இதனால் நான் நன்றாக தமிழ் படித்தப்பிறகு நமது நாட்டிலுள்ள மாணவர்களுக்கு சிறந்த முறையில் தமிழ் கற்பிப்பதற்கு நான் எதிற்பாhகிறேன். இதை போல நமது நாட்டின் அபிவிருத்திக்காக சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இது ஓர் அரசாங்க ஆசிரியராகிய எனது கடமை.

மேலும், நமது நாட்டில் வசிக்கிற தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் கலாச்சாரங்கள், சம்பிரதாயங்கள் மற்றும அவரவரது மத வழிபாடுகள், இலக்கிய ரசனைகள், வாழ்க்கை முறைகள், பண்பாடுகள் ஆகியவற்றை தெரிந்துக்கொள்ள எனக்க ரொம்ப விருப்பம். அவர்களிடம் கருத்துகளை பரிமாரிக்கொள்ள எனக்கு தமிழ் முக்கியம்.

 அதுமட்டுமன்றி, நமது நாட்டில் பலமுக்கியமான இடங்கள் தமிழ் மக்கள் வசிக்கின்ற பிரதேசங்களில் அமைந்து இருக்கின்றன. உதரணமாக, கண்ணியா என்ற தமிழ் ஊரில் இருக்கிற வெந்நீர் ஊற்றுகள், கிண்ணியா கடற்கரை, முன்னேஸ்வரன் கோவில், திருகோணமலையில் இருக்கிற புனித திரு கோனேஷ்வரன் கோவில் மற்றும் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள மடு ஆலயம் ஆகிய இடங்களை காணச் செல்கிற போது தமிழ் தெரிந்திருக்க வேண்டும். நான் ஆசிரியராக சேவை செய்வதால் நமது பாடசாலை மாணவர்களோடு இந்த பிரதேசத்திற்கு கல்விச்சுற்றுலா போக வேணும். அதற்காகவும் தமிழ் எனக்கு அவசியமாகிறது. தமிழ் மொழியை கற்பதற்கு அதிகம் கஸ்டப்பட தேவையில்லை. தமிழ் ஓர் இனிமையான மொழி, அதனால் இளகுவாக படிக்க முடியும். அதைபோல் சிங்களம்-தமிழ் மொழிகளிடையே பரந்த ஒற்றுமை காணப்படுகிறது. அதனால் சிறந்த முறையில் தமிழ் கற்க எனக்கு ஆசை சுரந்துது.

 இன்று நாம் இருபத்தோராம் நூற்றாண்டை நோக்கி வீறு நடைபோட்டுக்கொண்டிருக்கிறோம் இத்தருனத்தில் எமது இளம் பரம்பரையினரை வருங்காலத் தேவைகட்கேற்ப பயிற்சியளிக்கும் பொருப்புடையவர்கயாகின்றோம். இந்நாட்டில் அன்னியோன்னிய பாலத்தைக் கட்டியெழுப்பும் ஒரு சிறந்த மார்கம் சிங்களம் - தமிழ் மொழிகளைப் பயில்வதே என யாவரும் நன்குணர்ந்துள்ளனர்.

 இதன்படி மேலேச்சொல்லப்பட்ட காரணங்கள் அடிப்படையில் பார்கிறபோழுது நான் தமிழ் கற்றுக்கொள்வது என் வாழ்வின் இன்றியமையாத ஒன்றாகும்.

ஆர். ஏ. ஜே. ரூபசிங்ஹ: நான் சிங்கள மைய பாடசாலையிலே இரண்டாம் தேசிய மொழி-தமிழ் கற்பிக்கும் ஆசிரியராக வேலை செய்கிறேன். ஒரு நாட்டிலே பல்வேறு இனங்கள் வாழ்கிற காரணமாக சில பிரச்சனைகள் ஏற்படும். அதற்கு காரணம் அவரவரது உணர்ச்சிகள் அவரவரக்கு புரிவில்லாத காரணமாக ஏற்படும். மக்களின் உணர்ச்சிகளை தெரிந்துக்கொள்ள வேண்டுமானால் அனைத்து மக்களின் இடையில் தொடர்பு ஏற்பட வேண்டும். இதற்கு மொழி மிக முக்கியம்.

 அதற்காக இலங்கை கல்வி வெளியீட்டு தினைக்களம் பதில் ஒழுங்கமைக்கப்பட்டது. இலங்கை அரச பாடச்சாலைகளில் முதலாம் தரத்திலிருந்து பன்னிரண்டு தரம்வரை(1-12) தமிழ் மொழி இரண்டாம் மொழியாக படிப்பிக்கப்படுகின்றது. . சிங்கள மாணவர்களுக்கு இரண்டாம் மொழியாக தமிழ் மொழியும் தமிழ் மாணவர்களுக்கு இரண்டாம் மொழியாக சிங்கள மொழியும் படிக்கவேணடும் சிங்கள மாணவர்களுக்கு தமிழ் படிப்பிப்பதற்காக ஆசிரியர் மிக குறைவாகும். சிங்கள ஆசிரியர்கள்தான் சிங்கள மாணவர்களுக்கு தமிழ் படிப்பிக்கின்றனர்.

 சிங்கள தாய்மொழி மாணவர் தமிழ்மொழியும் தமிழ் தாய்மொழியாக படிக்கின்ற
மாணவர்கள் சிங்கள மொழியும் படிக்கிறபோழுது, இளமையில் இருந்து மாணவர்களுக்குள் இனத்தவர்களைப் பற்றி நற்சிந்தனை வளரும். இளமையிற் கல்வி சிலையில் எழுத்து. 

 இலங்கையில் தமிழ் மொழி இரண்டாம் தேசிய மொழி என்ற அரச மகுடத்தை சூடி சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளதைக் இதன் முலம் நம்மால் காணமுடிகிறது. இலங்கையில் மட்டுமா சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் போன்ற நாடுகளிலும் தமிழ் மொழி அங்கிகரிக்கப்பட்டு அந்நாட்டு ரூபாய் நோட்டுகளிலும் இடபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் உலகத்தின் பல்வேறு பல்கலைக் கழக பாடத்திட்டத்திலும் தனக்குறிய இடங்களைப் பிடித்து வளந்துக்கொண்டே வருகிறது தமிழ் மொழி. உலக மொழிகளில் ஆங்கில மொழிக்கு அடுத்து தமிழ் மொழியைத் தவிற வேறு எந்த உலக மொழிக்கும் . இச்சிறப்பு இல்லை என்பது இதன்மூலம் உறுதியாகிறது.

 உலக அலவில் இன்று பரந்துபட்டு வாழ்ந்து வரும் ஒரு இனம் தமிழினம். ஆனால் தனக்குறிய பூர்விக மண்ணையும் இழந்து வரும் இனமும் தமிழினமே. இதற்கு வரலாற்று ஆவனங்களும் சம்பவங்களுமே சாட்சி. தமிழினத்திற்கு எதிரான வன்முறைகள் வெளிநாடுகளில் மட்டுமின்றி உள்நாட்டிலும் தொடர்ந்த வாறே உள்ளன. தமிழின மக்கள் தமது உரிமைக்காக போராடினார்களே தவிர வேற்று இனத்தவரை இனவெரி கொண்டு தாக்குதல் நடத்தியதை இதுவரை வரலாறு கண்டதில்லை;;. இதற்கு முக்கிய காரணமாக அமைவது தமிழ் மொழிதான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. . தமிழ் மொழியில் இருந்து பிரிந்துச் சென்ற கன்னடம், தெழுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளைப் பேசும் மக்கள்கூட தமிழினத்தை இனவெரி கொண்டு தாக்கும் போதேல்லாம் தமிழர்கள் பொருமை காப்பதும் திராவடம் என்ற பொது உடமை அவன் உதிரத்திலே இருப்பதாலும் தமிழ் மொழி தன்னுள்ளில் கொண்டுள்ள மனித மாண்பும், அறக்கருத்துகளுமே இதற்கு காரணமாக அமைகிறது. இதற்கு உலகப் பொதுமறையாம் திருக்குறளே சான்று.

 அதேபோல் புதிய சிந்தனைகளையும் அறிவியல் கருத்துகளையும் வேற்றுமொழி இலக்கியங்களையும்-சிந்தனைகளையும் அவ்வப்போது உள்வாங்கி தன்னினத்தை பண்பட்ட இனமாகவே வளர்த்து வருகிறது தமிழ்மொழி என்பது வரலரறு கண்ட உண்மை. ஆனால் தமிழ் மொழி உள்வாங்கியதைப்போல இந்தியாவில் வேறு எந்த மெழியும் வேற்று மொழி சிந்தனைகளையும் கருத்துகளையும் முழுமையாக உள்வாங்கிக் கொள்ளவில்லை; என்பதற்க்கு சாண்றுகளும் சம்பவங்களும் ஏராளம். இந்தியவிலும் இத்தகைய இன முறண்பாடுகள் நீடிப்பதற்க்கு இந்தியாவின் மொழிக்கொள்கையும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது எனலாம். மொழிக் கொள்கையில் மாற்றம் என்பது மக்களின் தேவையாக உள்ளது. எனவே வளம் பொருந்திய செம்மொழியாம் தமிழ் மொழியை இந்தியாவின் இரண்டாம் தேசிய மொழியாக அங்கிகரிப்பது காலத்தின் கட்டாயம். தமிழ் மொழி இந்திய அளவில் மட்டுமல்லாது உலக மக்களிடையேயும் ஒருமைப்பாட்டுணர்வையும் அறநெறியையும் வளர்க்கும் என்பதில் ஐயமில்லை.

எனவே ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இந்தியா நிறந்திர உறுப்பு நாடு என்ற அங்கிகாரத்தை பெறும்போது இந்திய மொழி ஒன்றை ஐ. நா வின் அலுவலக மொழியாக ஏற்றுக்கொள்ளும். தற்போது. மண்டாரியன், (சீனமொழி), ப்ரன்ஸ், ஜெர்மன், ருசியமொழி, ஜாப்பனிஸ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் உள்ளன. இவ்வரிசையில் தமிழ் மொழியையும் இடம்பெற செய்வது இந்திய மற்றும் தமிழக அரசாங்கத்தின் கடமையாக உள்ளது.

நன்றி : உயிர் எழுத்து, மே 2011

- முனைவர் கு.சிதம்பரம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It