அரியலூர் மாவட்டம் மதனத்தூர், தஞ்சை மாவட் டம் நீலத்தநல்லூர் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் நீளத்தில் நாற்பது கோடி ரூபாய் செலவில் அரசின் சார்பாக பாலம் கட் டப்படுகிறது. ஆனால் இது முழுமை பெறாமல் இருப்பதால் மக்கள் சொல்லென்னா துயரத்திற்கு ஆளாகியுள்ள னர்.

இந்தப் பாலம் கட்டுவதற்காக தொடர்ந்து குரல் கொடுத்தும், பல போராட்டங்களை முன் நின்று நடத்தியவருமான திமுக எம்.எல்.ஏ. காசோ கணேசன் தற்போது உயிருடன் இல்லை. ஆயினும், 50 வருடங்களாக மக்களுக்காக உழைத்த கா.சோ. கணேசனின் பெயரை இந்தப் பாலத்திற்கு சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் மக்கள்.

இந்தப் பாலம் கட்டுவதற்கு எம்.ஜி.ஆர். ஆட்சியின்போதே அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் வேலை நடைபெற வில்லை. ஒருவழியாக சுமார் முப் பது வருடங்களுக்குப் பிறகு சென்ற திமுக ஆட்சியில் இந்தப் பகுதி மக்களின் பல்வேறு போராட்டத்தின் காரணமாக பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு வேலைகளும் ஆரம்பிக்கப்பட் டன. ஆரம்பிக்கப்பட்ட வேலை முறையான வேகத்தோடு இன்று வரை தீவிரமாக நடந்து வருகிறது.

இப்படி தீவிரமாக வேலை நடப்பதற்கு என்ன காரணம் என்று நாம் விசாரித்தபோது மத் திய மந்திரி அ.ராசா அரியலூர் தொகுதியில் நின்றுதான் முதலில் ஜெயித்தாராம். அப்போதே “இந் தப் பாலத்தை நான் கட்டுவதற்கு முயற்சி மேற்கொள்வேன்'' என்று வாக்குறுதி அளித்தாராம். அதன் அடிப்படையில் அ.ராசா இந்தப் பாலம் கட்டுவதற்காக பெருமளவு நிதி ஒத்துழைப்பு அளித்தது தானாம்! இதனால் கொடுத்த வாக்குறுதிப்படி அ.ராசா நடந்து கொள்ளக் கூடியவர் என்று இப்பகுதி மக்கள் அவரை மிகவும் பாராட்டுகிறார்கள்.

ஐம்பது வருடங்களாக இந்தப் பாலம் வரும், வரும் என்ற ஏக்கத் தோடு இருந்த மக்களின் கனவை கலைப்பதுபோல் பரவியது ஒரு வழக்கு. "பாலத்தை திறக்க தடை விதிக்க வேண்டும். என்னுடைய சம்பந்தம் கேட்காமல் என் நிலத்தின் மேல் பாலத்திற்கு செல் வதற்கான சாலை அமைப்பட் டுள்ளது. இது சட்டப்படி தவறு'' என்று அறியலூர் மாவட்டத்தில் தத்தநூரில் வசிக்கும் தம்பிதுரை என்பவர் வழக்கு ஒன்றை தொடுத் துள்ளார். இதுதான் பிரச்சினை.

இது விஷயமாக உண்மை நிலையை அறிய அரியலூர் - பெரம்பலூர் மாவட்டத்தின் பல கிராமங்களுக்கும் சென்று உண்மை நிலையை அறிய விசார ணையில் நாம் இறங்கினோம்.

“தத்தனூர் தம்பிதுரையிடம் கேட்காமல் சாலை அமைக்கும் வேலை களை துவக்கியது தவறுதான். அதை காரணம் காட்டி பாலத்தின் திறப்பு விழாவை தாமதப்படுத்தக் கூடாது. வேண் டுமென்றால் எங்கள் ஊர் முக்கிய பிரமுகர்களுடன் சென்று தத்தனூர் தம்பிதுரை யிடம் வருத்தம் தெரி வித்து வழக்கை வாபஸ் வாங்கக் கோரி கேட்க உள்ளோம். அரசாங்கம் சாலை வசதிக்காக எவ்வளவு இடம் எடுத் துள்ளதோ அதை விட பெரிய இடமாக வேண்டு மானாலும் தம்பி துரைக்கு வாங்கிக் கொடுக்க தயாராக உள்ளோம். அதனால் தம்பி துரை வழக்கை வாபஸ் பெற வேண்டும்'' என்றனர் ஊர் பெரியவர்களும், இளைஞர்களும்.

இது தொடர்பாக அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் இருக்கும் சப் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரித்தோம். நாம் சென்றபோது சப் கலெக்டர் இளங்கோவன் பாலம் தொடர்புடைய முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் அரியலூர் கலெக்டருடன் இருப்பதாக தகவல் வந்தது.

நாம் வந்திருக்கும் தகவல் அறிந்த சப் கலெக்டரின் உதவியாளர் வைத்திய நாதன் நம்மை வரவேற்று, பாலத்தின் வேலை தொடர்ந்து நடைபெற, அதன் திறப்பு விழாவில் உள்ள சிக்கலை தீர்க்க அதிகாரிகள் எடுக்கும் முயற்சிகளை நம்மிடம் விளக்கினார்.

வைத்தியநாதன் தந்த தகவல்களின் அடிப்படையில் பாலம் கட்டும் பணியை மேற்பார்வையிடும் உதவி கோட்ட பொறி யாளரைத் தொடர்பு கொண்டு, கும்பகோணம் முதல் நீலத்தநல்லூர்வரை உள்ள சாலைகள் இரு வழிச்சாலையாக மாற்று வதற்கான வேலை துவங்காமல் இருக்கி றதே ஏன்? என் றோம்.

“பாலம் கட்டு வது மட்டுமே எங் களுடைய அலுவல கப் பணியாகும். சுமார் ஒரு மாத கால த்திற்குள் பாலம் திறக்கப்படும்'' என் றவர் பாலத்தின் திட்ட மதிப்பீடு, நடைபெறும் வேலைகள். அது தொடர்பு டைய விஷயங்களை நம் மோடு பகிர்ந்து கொண்டார்.

அரியலூர் மாவட்டம் மாத்தூர் முதல் ஜெயங் கொண்டம், விருதாச்சலம் வரை சாலைகளை செப்ப னிடும் பணி நடைபெற்று முடியும் தருவாயில் உள் ளதை நம்மிடம் தெரிவித் தார் அவர். நாமும் நீண்ட தூரம் நேரில் சென்று பார்வையிட்டு வேலை திருப்திகர மாக நடைபெறுவதை உறுதி செய்து கொண்டோம். 

ஆயினும் கும்பகோணம் முதல் நீலத்த நல்லூர்வரையுள்ள சாலைகளை இரு வழிச்சாலையாக மாற்றுவதற்கான வேலை துவங்கவே இல்லை. என்ன கார ணம் என்று விசாரித்தால், கும்பகோணம் முதல் நீலத்தநல்லூர்வரை உள்ள சாலையை மேம்படுத்த நிதி ஒதுக்கவே இல்லை என்பது தெரிய வந்தது. “நீலத்த நல்லூர் - மதனத் தூர் பாலம் திறக்கப்பட் டால் திருவாரூர், தஞ்சை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிடையே முக் கியப் போக்குவரத்து சாலையாக இது இருக்கும். ஆகவே தமிழக அரசு நிதி ஒதுக்கி நீலத்தநல்லூர் முதல் கும்பகோ ணம் வரை உள்ள ஒரு வழிச்சாலையை இரு வழிச்சாலையாக மேம்படுத்த வேண் டும்...'' என்கிறார் அணைக்குடம் கிராமத் தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தை முகாம் பொறுப்பாளர் பரமசிவம்.

மதனத்தூர், பா.ம.க கிளைச் செயலாளர் எஸ். ராஜாவோ, “இந்தச் சாலை கும்ப கோணம் சேலம் வழியாக மைசூர்வரை செல்லக் கூடியது. பல பெரிய நகரங் களை இணைக்கும் இந்த நேர்வழிச் சாலையை இரு வழிச் சாலையாக மாற்றா விட்டால் இப்பகுதியில் அதிக விபத்துகள் நடைபெறும். கும்பகோணம் அரூர் பைபா சில் ஒரு மேம்பாலத்தையும் அமைத்து சாலைகளை உடனே அரசு செப்பனிட வேண்டும்...'' என்றார்.

அதிமுகவின் மதனத்தூர் கிளைச் செயலாளரான சுவாமிநாதன், “பாலம் திறந்த உடன் கும்பகோணம் முதல் அரிய லூர்வரை அதிக பேருந்துகளை இயக்க வேண்டும். இந்திய தேசிய காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ஆசைத் தம்பி அரசு ஜெயங்கொண்டம் நிலக்கரி சுரங்க வேலை திட்டத்தை நிறைவேற்றி தமிழகத் தில் பின்தங்கிய மாவட்டங்களான அரிய லூர், பெரம்பலூர் மாவட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்...'' என்று கூடுதல் கோரிக்கை வைத்தார்.

கடைசியாக நாம் கண்ட காட்சி நம் மனதை உலுக்குவதாக இருந்தது. மதனத் தூர் முதல் நீலத்தநல்லூர் வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் பச்சிளம் குழந் தைகள் காலில் செருப்பு இல்லாமல் கடும் வெயிலில் நடந்தே செல்கின்றனர். இவ்வ ளவு தூரத்திற்கும் இருபத்தி ஐந்து கிலோ, ஐம்பது கிலோ என சுமைகளை சுமந்து கொண்டு நடக்கும் காட்சி நம்மை கவலை அடைய வைத்தது.

ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் இந்த 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமைகளை தூக்கி செல்லும் காட்சி நெஞ்சைப் பிழிவதாக உள்ளது.

திறக்கப்படாத இந்தப் பாலத்தின் வழியே தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் நடை பயணமாக செல்வதும் உடனே பாலத்தை திறந்து விடச் சொல்லி பேரணி நடைபெறுவதுமாக உள்ளது இப்பகுதி. இந்த மக்களின் ஐம்பது வருட வேதனைகளை உணர்ந்து உடனே பாலத்தை திறக்க தமிழக அரசு முன் வர வேண்டும் .

கடைசி செய்தி :

அரியலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் சப் கலெக்டர் இளங்கோவன் ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குழு வழக்கு தொடர்ந்திருக்கும் தம்பிதுரை நேரில் சந்தித்து சமாதானப்படுத்தும் முயற்சியில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருவதுடன், சாலை தரத்தை மேம்படுத்தும் பணி, பால வேலை விரைவில் முடிய தீவிர ஆர்வம் என பலமுனைகளில் களம் இறங்கி வேலை பார்த்து வருவது பாராட்டுக்குரி யது. இதே ஆர்வம் தொடர்ந்து இருக்க வேண்டும். துன்பப்படும் மக்களின் துயரத்தை துடைக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பு! இதுவே நமது எதிர்பார்ப்பு.

கள தொகுப்பு : நாச்சியார்கோவில் ஜாபர் & செய்தி குழுவினர்

Pin It