இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் கணக்கில் வராத கருப்புப் பணம் சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும், அவற்றை மீட்க வேண்டும் என்றும் அவ்வப்போது எதிர்க்கட்சிகள் குரல் எழுப் பும். ஊடகங்களும் பெரும ளவில் பரபரப்பு செய்திக ளாக வெளியிடும்.
சுவிஸ் நாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள கருப்புப் பணத்தின் மதிப்பு குறித்து ஊடகங்கள் ஒன்றரை லட்சம் கோடி டாலர் என்றும் அதைவிட அதிகம் என்றும் தங்கள் புலனாய்வுக்கு (கற்பனைக்கு) ஏற்ப தெரிவித்து நெருக்கடியை ஏற்படு த்தியதால் இந்திய அரசு இது பற்றிய ஆய்வு நடவடிக்கையில் இறங்கியது.
இந்திய அரசு கேட்டுக் கொண் டதை அடுத்து சுவிஸ் தேசிய வங்கி (எஸ்.என்.டி) 2010ம் ஆண்டு இறுதி வரை 250 கோடி டாலரை இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ. 11 ஆயிரம் கோடி.
இதில் 210 கோடி டாலர் சேமிப்பு, டெபாசிட் ஆகிய வகை களில் இந்திய தனி நபர்களும், நிறுவனத்தினரும் போட்டு வைத்துள்ளனர். 40 கோடி டாலரை இந்தியாவில் உள்ள தனி நபர்களுக்கான இடை நபர்கள் போட்டுள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் உள்ள யுபிஎஸ் மற்றும் கிரடிட் சசே ஆகிய வங்கிகளில் இந்தியர்கள் பெருமளவு டெபாஸிட் செய்துள்ளதாக சுவிஸ் தேசிய வங்கி தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்து வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்திய கருப்புப் பணத்தை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதால் கடந்த 3 ஆண்டுகளில் 50 கோடி டாலர்கள் சுவிஸ் வங்கிகளில் இருந்து சிங்கப்பூர், மொரீஷியஸ் ஆகிய நாட்டு வங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சுவிஸ் தேசிய வங்கி குறிப்பிட்டுள்ள தொகை பதுக்கி வைத்துள்ள பணத்தின் மதிப்பு மிகவும் குறைவாக உள்ளதாகவும், உண்மை மதிப்பு சுமார் 1500 கோடி டாலர் முதல் 2000 கோடி டாலர் வரை இருக்கலாம் என்றும் இந்திய பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சட்ட விரோதமாக சுவிஸ் நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்பதில் இந்திய அரசு காட்டி வரும் மெத்தனம் பதுக்கல்காரர்களுக்குத்தான் சாதகமாக அமையும். இதிலிருந்து அரசின் நோக்கத்தையும், செயலையும் புரிந்து கொண்டு சமூக நல ஆர்வலர்கள் இதற்கான போராட்டத்தை வேகப்படுத்துவது ஒன்றே உரிய வழியாகும்.
- சாலிஹா மைந்தன்