இணைந்த பாச மலர்கள்

என் வாழ்க்கையை அக்காவுக்கு அர்ப் பணித்து விட் டேன். அக்காவுக்கு துரோ கம் புரிந்தவர்களின் தொடர் புகளை துண்டித்து விட் டேன். அக்காவுக்கு பணி செய்வதையே பெரும்பே றாக கருதுகின்றேன் என்ற ஒற்றை அறிக்கையின் வாயி லாக போயஸ் தோட்டத்தில் வலது கால் வைத்து மீண் டும் நுழைந்துவிட்டார் முதல்வரின் உடன்பிறவா சகோதரி சசிகலா.

முதல்வரோடு நகமும் சதையு மாக 24 ஆண்டுகள் ஒரே வீட் டில் வசித்த சசி, நாளடைவில் போயஸ் தோட்டத்தின் அதிகார மையங்க ளாக தனது உறவினர்களை கொண்டு வந்தார். போயஸ் தோட் டத்தின் ஆளுமையை மட்டுமல்ல; கட்சியிலும் ஆட்சியிலும் ஆளுமை செலுத்துகிறார்.

ஜெயலலிதாவை கட்சியினர் இவர் மூலமாகவே அன்றி அணு கவோ, கட்சி நிலவரங்களை ஜெய லலிதாவிடம் சொல்லவோ முடி யாத நிலை.

கட்சியின் மாவட்டச் செயலா ளர் தேர்வு முதல், வேட்பாளர் தேர் வுவரை சின்னம்மாவின் கடைக் கண் பார்வையில் தான் நடக்கிறது. சின்னம்மாவின் உறவினர்கள் மண் குவாரி தொடங்கி மதுபான ஏலம்வரை கமிஷன் பெற்றுத் தான் கட்சியினருக்கு செய்து தருகிறார் கள் என்பது போன்ற பொருமல் கள் அதிமுக தொண்டர்கள் மட்டு மன்றி, அதிமுகவில் இருந்து வெளி யேறிய மேல்மட்ட நிர்வாகிகளின் வார்த்தைகளில் வெளிப்பட்டது.

இந்நிலையில் யாரும் எதிர்பாரா வண்ணம், டிசம்பர் மாதம் கட்சி யில் இருந்து சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன், மற்றும் மன்னார் குடியை சேர்ந்த சசியின் நெருங்கிய உறவி னர்களான ராவ ணன், தினகரன், திவாகரன், சுதாக ரன், உள்ளிட்ட 13 பேரை கட்சியிலி ருந்து நீக்குவதாக அதிரடியாக அறிவி த்தார் ஜெயலலிதா.

இதைத் தொடர் ந்து போயஸ் கார் டனை விட்டு வெளியேறினார் சசிகலா. அதோடு சசிக்கு வேண்டியவர்கள் மீது நில அபகரிப்பு மற்றும் மோசடி வழக்கு கள் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது. இதைக்கண்ட அதிமுகவினர் அம்மாவுக்கும் நமக் கும் மத்தியில் இருந்த மிகப்பெரிய இரும்புத்திரை உடைக்கப்பட்டதாக கருதி நிம்மதிப் பெருமூச்சு விட்ட நிலையில், மூன்று மாதங்கள் கடந்த நிலையில் சசிகலா, "என் வாழ்க்கையை அக்காவுக்கு அர்ப்ப ணித்து விட்டேன். அக்காவுக்கு துரோகம் புரிந்தவர்களின் தொடர்பு களை துண்டித்து விட்டேன். அக்காவுக்கு பணி செய்வதையே பெரும்பேறாக கருதுகின்றேன்...'' என்ற ஒரு அறிக்கை வெளியிட, போயஸ் தோட்டத்தின் மிகபெரிய கதவு திறந்து மீண்டும் சசிகலாவை உள்வாங்கிக் கொண்டது.

கடந்த டிசம்பர் மாதம் சசி மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவ டிக்கை ரத்து செய்யப்படுவதாக வும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இந்த நிகழ்வு ஜெயலலிதா எப் போதும் எந்த முடிவையும் எதற் கும் அஞ்சாமல் எடுப்பவர் என்ற அவருக்குள்ள பெயரை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

சசியுடனான உறவை முதல்வர் புதுப்பித்துக் கொண்டது புரியாத புதிராக இருந்தாலும், சசி கட்சியிலி ருந்தும் தோட்டத்திலிருந்தும் வெளியேற்றப் பட்ட பின்பும் பெங்களூருவில் நடந்துவரும் சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வருக்கு எதிராக மூச்சு விடாதது தான் முதல்வரின் இந்த மனமாற்றத்திற்கு காரணம் என்று அரசியல் விமர்சகர் கள் கருதுகிறார்கள்.

எது எப்படியோ சசியின் மறு பிரவேசம் கட்சிக்கும் ஆட்சிக்கும் சாதகமா? பாதகமா? என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.

- முகவை அப்பாஸ்

Pin It