தமிழகத்தில் இந்துத்துவா அமைப்பினர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்தி அதன் மூலம் கலவரங்களை உருவாக்குவதைப் போலவே பீகார் மாநில இந்துத்துவாவினர் ராம நவமி ஊர்வலத்தை நடத்தி வகுப்புக் கலவரங்களை உருவாக்கும் முயற்சிகளை அண்மைக்காலங்களாக மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் பள்ளிவாசல்களைக் கடந்து செல்லும் விநாயகர் ஊர்வலத் தினர் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி அவர்களை வம்புக்கிழுப்பதைப்போல பீகாரிலும் இதே முறையைக் கையாண்டு கடந்த வாரம் பெரும் கலவரத்தை நிகழ்த்தியுள்ளனர் இந்துத்துவாவினர்.

பீகார் மாநிலம் நவாடா நகரில் ராம நவமி ஊர்வலத்தை கடந்த 3ம் தேதி நடத்த ஏற்பாடு செய்த உள்ளூர் இந்துத்துவாவினர், நவாடா நகரில் இருக்கும் மொக்லகர் பெரிய பள்ளிவாசல் வழியாக ஊர்வலமாகச் சென்றபோது முஸ்லிம்களுக்கு எதிராக ஆபாச கோஷங்களை எழுப்பினர். இதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிக்க... இரு தரப்பிற்குமிடையே மோதல் நிகழ்ந்துள்ளது.

ராம நவமி ஊர்வலத்தினர் கலவரக்காரர்களாக மாறி பள்ளிவாசல் மீதும், அருகிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள் மீதும் கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுவாகவே காவித்துறையினருக்கு மட்டுமே காவல் படையாக இருக்கும் காவல்துறை, ராம நவமி ஊர்வலத்திற்கு பாதுகாப்பு கொடுத்த படியே வந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட இந்துத்துவா வினரை கட்டுப்படுத்தாமல் அவர்கள் தாக்குலில் ஈடுபட்ட போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர் முஸ்லிம்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்தாத காவல் துறையினர், இரு தரப்பினரும் கல் வீச்சில் ஈடுபட்ட சூழலில் ஊர்வலத்தினரின் பக்கம் நின்று கொண்டு எதிர் தரப்பில் இருந்த முஸ்லிம்களை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர்.

போலீஸôர் 500 ரவுண்டுகள் சுட்டதாக பீகார் மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

காவல்துறையினர் கலவரத்தை தடுக்கவோ, தாக்குதலில் ஈடுபட்டவர்களை கலைக்கவோ முயற்சி செய்யாமல் முஸ் லிம்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்துவதில் குறியாக இருந்துள்ளனர் என்பதற்கு பள்ளிவாசல் சுவர்களில் துப் பாக்கி குண்டுகள் துளைத்திருக்கும் அடையாளங்களே சான்றுகளாக இருக்கின்றன.

பள்ளிவாசலுக்குள் சென்று பதுங்கிய முஸ்லிம்களை குறி வைத்து காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதை இதன் மூலம் தெளிவாக விளங்க முடிகிறது.

இத்தாக்குதலில் அப்பாவி மக்கள் 5 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கலவரம் குறித்த தகவல் கிடைத்தவுடன் கலவரத்தை கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகளான வினய் குமார், பாபுராம், ராகேஷ் குமார், பி. குமார் ஆகியோர் கலவரக்காரர்களின் கல்வீச்சு தாக்குத லில் படுகாயம் அடைந்துள்ளனர்.

அன்றைய தினம் இரவு அப்பகுதியில் முகாமிட்ட டி.ஐ.ஜி. என்.கே. கான், விவேக் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலவரத்தைக் கட்டுப்படுத்தியிருந்த போதிலும் நவாடா பகு தியில் வகுப்பு பதட்டம் நிலவி வருவதால் 144 தடை உத்தர வைப் போட்டிருக்கிறது காவல்துறை.

நவாடா நகரின் வகுப்புப் பதட்டம் நிறைந்த பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க 400 ரேபிட் ஃபோர்ஸ், 355 பீகார் மிலிட்டரி போலீஸ், 3 கம்பெனி கலவரத் தடுப்பு போலீஸ் படை, மாவட்ட காவல் படை என பெரும் பாதுகாப்பு படைகள் நவாடா நகரில் நிறுத்தப்பட்டிருக் கிறது. (இக்கட்டுரையை கடைசி யாக 7ம் தேதி இரவு நாம் எழுதி முடிக்கும்வரை இதே நிலை நீடிக்கிறது)

இதற்கிடையில் மொக்லாகர் பெரிய பள்ளிவாசலுக்கு வந்த உள்ளூர் போலீஸ் மற்றும் சிவில் நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரி களைக் கொண்ட டீம், பள்ளி வாசல் சுவர்களில் பதிந்துள்ள குண்டுகள் துளைத்த அடையா ளங்களை மறைக்கும் வகையில், காவல்துறையின் துப்பாக்கிக் குண்டுகளால் சேதமடைந்த பள்ளி வாசல் சுவர்களை சிமெண்ட் பூசி சீர் செய்து உடனடியாக பள்ளி வாசலுக்கு வெள்ளையடிக்கும்படி பள்ளி வாசல் நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதற்கு பள்ளிவாசல் நிர்வாகிக ளும், உள்ளூர் முஸ்லிம்களும் ஆட் சேபனை தெரிவிக்க... அப்படியே ஒதுங்கி விட்டது அதிகாரிகள் டீம்.

கடந்த ஒரு மாதத்திற்குள் நவாடா மாவட்டத்தில் பள்ளிவா சல் மீது நடத்தப்பட்ட நான்கா வது தாக்குதல் இது. கடந்த மாதம் ஹோலி பண்டிகையின்போது தான் முதல் தாக்குதல் நிகழ்ந்தது. அப்போது பாட்டா, ஜாஸத், தத்ரால் கிராமங்களில் இருந்த பள்ளிவாசல்கள் மீது இந்துத்து வாவினர் தாக்குதல் நடத்தினர் என்கின்றனர் உள்ளூர் முஸ்லிம் கள்.

ராம நவமி ஊர்வலத்தினருக்கு பாதுகாப்பு கொடுத்தபடி காவல் துறையினர் வந்த நிலையில், பள்ளிவாசல் அருகே வந்த ஊர்வ லத்தினர் முஸ்லிம்களை கோபப் படுத்தும் வகையில் ஆபாச வார்த் தைகளைப் பேசியபோதே அவர்க ளைக் கட்டுப்படுத்தியிருந்தால் கல வரம் நிகழாமல் இருந்திருக்கும்.

ஆனால் கலவரக்காரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் நடந்து கொண்டிருக்கின்றனர் பீகார் காவல்துறையினர். காவல்துறை யில் காவிச் சிந்தனையின் ஆதிக் கம் நிறைந்திருப்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

முஸ்லிம்கள் கொல்லப்பட்டால் அது சிறு சம்பவம்! - பீஹார் அரசின் திமிர்வாதம்!!

ஜூன் 3, 2011ல் பீகார் மாநிலம் ஃபார்பெஸ் கஞ்ச் நகரில் ஒரு கர்ப்பிணிப் பெண் உள்பட நான்கு முஸ்லிம் இளைஞர்களை சுட்டுக் கொன்றது காவல்துறை.

ஃபார்பெஸ் கஞ்சில் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வரும் உள்ளூர் பாஜக பிர முகர் தனது தொழிற்சாலையை விரிவுபடுத் துவதற்காக பொது மக்களின் நிலத்தை ஆக் கிரமித்திருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரி வித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட் டம் நடத்தினர் ஃபார்பெஸ் கஞ்ச் முஸ்லிம்கள்.

அப்போது காவல்துறை நடத்திய துப் பாக்கிச் சூட்டில்தான் நான்கு முஸ்லிம்க ளும், 10 மாதக் குழந்தை ஒன்றும் கொல்லப் பட்டிருக்கின்றனர். 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சம்பவத்தை அப்போது நேரில் பார்த்த சாட்சிகள் போலீசார் நடத்திய கொலை வெறித் தாக்குதலை மீடியாக்களிடம் லைவாக சொல்லியிருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை அவர்களின் வீடுகள் வரை துரத்திச் சென்ற போலீசார் அதன் பின் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள னர். அதாவது, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்ல வைத்த பின்பும் வேண்டு மென்றே துரத்திச் சென்று சுட்டுக் கொன்றி ருக்கின்றனர் காவல்துறையினர்.

சிலர் குண்டடிபட்டு காயமடைந்த நிலை யிலும் தொடர்ந்து அவர்களை காவல்துறை யினர் தாக்கியுள்ளனர். இந்த தகவல்கள் எல் லாம் வீடியோக்களாகவும் பதிவாகியுள் ளன.

சட்ட நெறிமுறைகளை மீறி, சட்ட விரோத காரியத்தில் ஈடுபட்ட காவல்துறை யினர் மீது பீகார் அரசு இதுவரை நடவ டிக்கை எடுக்கவில்லை.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது எவ்வித காரணமுமில் லாமல் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட மாவட்ட கண்காணிப்பாளர் உள்பட சட்டத்தை மீறிய காவல்துறை அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் கூட எடுக்கப்படவில்லை.

மாநில காவல்துறை இவ்வழக்கை விசா ரிக்கும் என பீகார் அரசு அறிவித்திருந்த நிலையில் அம்மாநில முஸ்லிம்களும், சமூக ஆர்வலர்களும் இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என குரல் எழுப்பி வந் தனர். மாநில அரசு இதற்கு உடன் படாத தால் சி.பி.ஐ. விசாரணை கோரி உச்ச

நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பீகார் மாநில அரசுக்கு சி.பி.ஐ. விசாரணையை மறுப்பதற் கான விளக்கத்தைக் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீசுக்கு கடந்த 3ம் தேதி பதி லளித்த பீகார் அரசு தனது உறுதிப்பத்திரத் தில், ஃபார்பெஸ் கஞ்ச் துப்பாக்கிச் சூடு ஒரு சிறு சம்பவம்தான். அதனால் சி.பி.ஐ. விசா ரணை தேவையில்லை என கூறியுள்ளது.

பீகார் அரசின் திமிர்த்தனமான இந்த பதில் சமூக ஆர்வலர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

ஒரு கர்ப்பிணிப் பெண் உள்பட நான்கு பேர் மற்றும் 10 மாதக் குழந்தை கொல்லப் பட்ட சம்பவத்தை சிறு சம்பவம்; சாதாரண சம்பவம் என ஒரு அரசாங்கத்தால் எப்படி சொல்ல முடியும்? முஸ்லிம்களின் உயிர் என்ன அத்தனை மலிவா பீகார் அரசாங்கத்திற்கு?

சட்டத்தை மீறி கொலை வெறியில் ஈடுபட்ட போலீஸôரை காப்பாற்றத் துடிக் கிறது பீகார் அரசு. இந்த லட்சணத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டாம்; மாநில காவல்துறையே இந்த வழக்கை விசாரிக்கும் என அரசு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடி யுமா?

உச்ச நீதிமன்றத்திற்கு பீகார் மாநில அரசு அளித்துள்ள பதிலை கண்டித்து கடந்த 4ம் தேதி அறிக்கை வெளியிட்டுள்ளது இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் (ஐஅஙஇ) என்ற அமைப்பு.

அந்த அறிக்கையில், “காவல்துறையினர் புரிந்த அட்டூழியங்களுக்கான தெளிவான ஆதாரங்கள் இருக்கும் நிலையிலும் குற்றத் தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்த பீகார் அரசு தவறி விட்டது; பாதிக்கப்பட்ட மக்களுக்காக நஷ்ட ஈடு கேட்டு எழும் குரல்களை அலட்சியப் படுத்துகிறது...'' என்று தெரிவிக்கும் கவுன் சிலின் துணைத் தலைவரான அஹ்சான் கான், “ஃபார்பெஸ் கஞ்ச் துப்பாக்கிச் சூடு சிறு சம்பவமே என்று சொல்வதன் மூலம் பீகார் அரசு அதன் குடி மக்கள் கொல்லப்ப டுவதை வெட்கமில்லாமல் அங்கீகரிக்கி றது...'' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

5 பேர் கொலையை சிறு சம்பவம் என்று சொன்ன ஒரே அரசாங்கம் பீகார் அரசு தான். அதற்கு எங்கே வெட்க உணர்வு இருக் கப் போகிறது!

- ஃபைஸல்

மோதிக் கொள்ளும் பீகார் அரசும் சிறுபான்மை கமிஷனும்!

ஃபார்பெஸ் கஞ்ச் துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் பீகார் அரசுக் கும் தேசிய சிறுபான்மை ஆணையத் திற்குமிடையே மோதல் போக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவரான வஜாஹத் ஹபீபுல்லாஹ், சிறு பான்மை விவகாரத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு ஜன 5, 2012ல் எழுதிய கடிதத்தில்,

“இந்த சம்பவத்திற்குப் பின் பீகார் மாநில சிறு பான்மையினர் அரசின் மீது நம்பிக்கையற்று இருக் கின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று அதிகமான பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. இழப்பீடு கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு மத்தியில் நம்பிக் கையை ஏற்படுத்த முடியும்...'' எனக் குறிப்பிட்டி ருந்தார்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து 2011 செப்டம் பர் மாதம் தேசிய சிறுபான்மை கமிஷன் விசாரணை செய்து அதன் அறிக்கையை மத்திய சிறுபான்மை விவகார அமைச்சகத்துக்கு அனுப்பியிருந்தது. இந்த அறிக்கைக்குப் பின் எழுதிய கடிதத்தில்தான் மேற்கண்டபடி குறிப்பிட்டிருந்தார் சிறுபான்மை கமிஷன் தலைவர் வஜாஹத் ஹபீபுல்லாஹ்.

வஜாஹத் ஹபீபுல்லாஹ்வின் கடிதத்தை மத்திய சிறுபான்மை அமைச்சகம் அப்படியே பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாருக்கு அனுப்பி வைத் தது.

இதற்கு பதிலளித்த பீகார் அரசு, துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நீதித்துறைகமிஷன் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது என பதிலளித்தது.

இந்த பதிலுக்கு ஆட்சேபனை தெரிவித்த சிறுபான்மை கமிஷன் தலைவர் ஹபீபுல்லாஹ், “துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது பீகார் அரசு நிர்வாகம் செயலற்றுக் கிடந்ததை மூடி மறைக் கும் முயற்சிதான் இந்த நீதித்துறை கமிஷன்...'' என்று பதிலளித்திருந்தார்.

மீண்டும் மத்திய சிறுபான்மை அமைச்சகத் துக்கு கடிதம் எழுதிய பீகார் அரசு, காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தில் கோபால்கரில் முஸ்லிம்கள் மீது மோசமான தாக்குதல் நடைபெற்ற சம்பவத்திற்கு (பீகார் ஃபார்பெஸ் கஞ்ச் துப்பாக்கிச் சூட்டிற்கு 2 மாதங்களுக்கு முன் கோபால்கர் சம்ப வம் நடைபெற்றது.) பீகார் அரசின் வருத்தத்தை சிறுபான்மை கமிஷன் தலைவர் வஜாஹத் ஹபீபுல் லாஹ்விற்கு தெரிவிக்கும்படி அவரை குத்திக் காட்டும் தோரணையில் கூறியது.

இந்த கடிதத்தை சல்மான் குர்ஷித் வஜாஹத் ஹபீபுல்லாஹ்விற்கு அனுப்பி வைத்தவுடன் பீகார் அரசின் கடிதத்திற்கு கவுண்ட்டர் கொடுத்த வஜாஹத் ஹபீபுல்லாஹ், ராஜஸ்தான் அரசு கோபால்கர் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் தனது செயலற்றதன்மையை (பீகார் அரசைப்போல்) மறைப்பதற்காக நீதித்துறைகமிஷன், சி.பி.ஐ. என்கொயரி என்று படம் காட்டவில்லை. அது சட்டத்தின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண் டிருக்கிறது...'' என "பஞ்ச்' பதிலை பீகார் அரசுக்கு கொடுத்திருந்தார்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு குறித்த இறுதி முடிவு மாநில அரசு நியமித்துள்ள கமிஷன் அறிக்கை தந்தபின் தீர்மானிக்கப்படும் என்று பீகார் அரசு மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்திற்கு பதிலளித் துள்ள சிறுபான்மை கமிஷன் தலைவர் வஜாஹத் ஹபீபுல்லாஹ்,

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற ஃபார்பெஸ் கஞ்சில் மாவட்ட அளவில் அபிவிருத்தி திட்டங்களை மேற் கொண்டு முஸ்லிம்களின் நம்பிக்கையை உறுதிப்ப டுத்த வேண்டும் என்பது போன்ற சிறுபான்மை கமிஷனின் பரிந்துரைகளை பிகார் அரசு தவிர்த்திருக் கிறது என குறிப்பிட்டுள்ளார்.

மாநில அரசுக்கும் சிறுபான்மை கமிஷனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதலில் யார் கை ஓங்குகி றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Pin It