கடந்த ஆண்டு முஸ்லிம்களின் தியாகத் திருநாள் (பக்ரீத்) முடிந்த சில நாட்களில் ஹைதராபாத் தைச் சேர்ந்த சில முஸ்லிம்கள் மீது இந்துத்துவா அமைப்பான ஹிந்து வாஹினியைச் சேர்ந்த குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். செகந்தராபாத் துக்காராம் கேட் அருகே முஸ்லிம் ஆட்டோ டிரைவர் ஒருவரையும் படு கொலை செய்தனர்.

ஹிந்து வாஹினி அமைப்பைச் சேர்ந்த சதானந்த் என்பவரின் தலைமையில் ஷக்தி வினோத் உன்னி கிருஷ்ணா,, பார்க்கவா, சூரிய வன்ஷி, சந்தோஷ் என்கிற பண்டுகா கல்யாண் ஆகியோர் தான் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்று கண்டுபிடித்த போலீஸார், அவர்கள் மீது இபிகோ 307ன் கீழ் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி ஹைதராபாத் நம்பள்ளி கிரிமினல் கோர்ட் 6 பேருக்கும் பிணை வழங்கி விடுதலை செய்திருக்கி றது.

முன்னதாக மாஜிஸ்ட்ரேட்டின் அனுமதி பெற்று செர்ரபள்ளி சிறையில் அடையாள அணி வகுப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர் போலீஸார். மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.

ஆயினும், நம்பள்ளி குற்றவியல் நீதிமன்றத்தின் ஏழாவது மெட் ரோபாலிடன் மாஜிஸ்ட் ரேட் குற்றவாளிகளுக்கு பிணை வழங்கியிருப்பது பாதிக்கப்பட்ட தரப்பிற்கு ஏமாற்றத்தை அளித்துள் ளது.

முன்னதாக ஆறு பேரையும் கைது செய்த மாநகர காவல் துறை 307வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த நிலையி லும், அவர்கள் மீதான குற்றப் பத்திரிகையை 90 நாட்களுக்குள் தாக்கல் செய்யாமல் வேண்டுமென்றே தாம தப்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாகத் தான் குற்றவாளிகள் எவ்வித எதிர் ப்பும், ஆட்சேபனையும் இல்லா மல் பிணையில் வெளியே வந்திருக் கின்றனர்... என்கின்றனர் பாதிக் கப்பட்ட முஸ்லிம் தரப்பினர்.

ஹைதராபாத் காவல்துறை முஸ்லிம்களுக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகிறது என்பதற்கு மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல வழக்குகள் சான் றாக உள்ளன.

காவி சிந்தனை கொண்ட அதிகாரிகள், இந்துத்துவாவினர் சம்பந்தப்படும் வழக்குகளை நீர்த்துப் போகச் செய்வதிலும், முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட வழக் குகளில் அதை வலுவாக உறுதிப் படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இது ஹைத ராபாத்தில் மட்டுமல்ல... ஒட்டு மொத்த இந்தியாவிலும் இதுதான் நிலை.

Pin It