இந்திய - வங்க தேச எல்லைப் பகுதியான முர்ஷிதாபாத் மாவட்டமே கடந்த 25ம் தேதி அந்த சம்பவம் அறிந்து பரபரப்பில் ஆழ்ந்தது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்திய அரசும், இந்திய இராணுவமும் அதிர்ச்சியில் உறைந்தது. இந்திய எல்லைப் பாதுகாப்புப் (Border Security Force ) படை செய்த எல்லை மீறிய காட்டுமிராண்டித்தனம்தான் இத்தனைக்கும் காரணம்!

வங்காள தேசத்தைச் சேர்ந்த அப்துல் ஷேக் என்பவரைப் பிடித்து இந்திய எல்லைப் பாதுகாப்பு படை நடத்திய அநாகரீக சித்திரவதை சர்வதேச அளவில் இந்தியாவை தலைகுனிய வைத்திருக்கிறது. சித்திரவதையில் ஈடுபட்ட 8 இராணுவ வீரர்களும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் மீது தீவிரமான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு.

இந்தியா - வங்காளதேசம் இடையிலுள்ள எல்லைப் பகுதியில் வியாபாரச் சந்தை கூடுவ தும், அங்கு இரு நாட்டைச் சேர்ந்தவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுவதும் வழக்கமான நிகழ்வுகள். மேற்கு வங்க மக்களும், வங்காள மொழி பேசுபவர்கள் என்பதால் மொழிவழிச் சகோதரர்களான வங்காள தேச மக்களுடன் இந்திய வங்காளிகளுக்கு எல்லைப் பகுதியில் வியாபாரப் பரிவர்த்தனை இருந்து வருகிறது.

பங்களாதேஷைச் சேர்ந்த அப்துல் ஷேக், கடந்த 25ம் தேதி சக கிராமத்தவர்கள் சில ரோடு தனது மாட்டு வண்டியில் கால்நடை களை ஏற்றிக் கொண்டு, அதை விற்பனை செய்ய வேலியிடப்படாத, எல்லை அடையா ளக் குறியீடுகளும் இல்லாத இந்திய - வங்க தேச எல்லையைத் தாண்டியிருக்கிறார். இப் படி வேலியிடப்படாத திறந்த வெளி எல் லையை தாண்டிச் செல்வது இரு நாட்டு மக்க ளுக்கும் வழக்கமான ஒன்றுதான்.

எல்லையைத் தாண்டி வந்த அவர்களை பிடித்த இந்திய எல்லைப் பாதுகாப்பு படையி னர், அப்துல் ஷேக்கை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு மற்றவர்களை வங்காள தேசத்திற்குள் விரட்டி விட்டனர்.

அப்துல் ஷேக் மூலம் மற்றவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்த படையினர், அவரது உடைகளை உருவி நிர்வாணப்படுத்தி தடிகளைக் கொண்டு கொடூரமாகத் தாக்கியுள்ளனர். உதவி கிடைக்காமல் கதறித் துடித்திருக்கிறார் அப்துல் ஷேக். இந்த சித்திரவதைத் தாக்குதலில் ஈடுபட்ட இராணுவ வீரர்களில் ஒருவர் இக்காட்சியை அப்படியே தனது மொபைலில் படமெடுக்க... பின்னர் அதைப் பார்த்து எல் லோரும் ரசித்திருக்கின்றனர்.

இந்தக் காட்சியைப் படமெ டுத்த இராணுவ வீரரே அதை எம்.எம்.எஸ். மூலம் தன் நண் பர்களுக்கு அனுப்ப... அது அப்படியே பரவி யு.டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டதில் இந்தியா உள்பட உலகமே பார் த்து அதிர்ச்சியில் உறைந்து போனது.

மேற்கு வங்க மாநில எல்லைப் பகுதி மாவட்டமான முர்ஷிதாபாத் ராம் நகர் பாரா கிராமத்தில் இச்சம்பவம் நடை பெற்றுள்ளதால்... உடனடியாக இதில் தலையிட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பாணர்ஜி, எல்லைப் பாதுகாப்புப் படையினரின் மனிதாபி மானமற்ற காட்டுமிராண்டித்தனமான சித்தி ரவதையைக் கண்டித்திருப்பதோடு, எல்லைப் பாதுகாப்புப் படையின் உயரதிகாரிகளோடு தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி விசாரிக்க அம்மாநில டி.ஐ.ஜி. நபராஜித் முகர்ஜிக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில், இணையதளங்களில் இந்த சித்திரவதைக் காட்சியைப் பார்த்த இராணுவ உயர் அதிகாரிகள் அவர்கள் பங்கிற்கு, இந்திய அரசை தலைகுனிய வைக்கும் கொடூரச் செயலில் ஈடுபட்ட 8 வீரர்களை சஸ்பெண்ட் செய்திருக்கின்றனர்.

“இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் இதுபோன்ற சித்திரவதை மற்றும் கொடூர வன்முறைத் தாக்குதலில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல...'' என்று கூறும் ராம்நகர் பாராவாசியான முஹம்மது முல்லா, “இந்தியா - பங்களாதேஷ் எல்லைப் பகுதி வேலி அடைத்து எல்லை வரையறுக்கப்படாமல் திறந்த வெளியாக இருக்கிறது. உள்ளூர் விவசாயிகள் இங்கு விவசாயம் செய்வதற்கு பல்வேறு பிரச்சினைகளையும், இன்னல்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது.

எல்லைப் பகுதியில் வேலியிடப்படாததின் காரணமாக பாதுகாப்புப் படையினரின் தொல்லைகள் எல்லை மீறுகின்றன.

இதுபோன்ற சம்பவங்களின் போது நாங்களே பஞ்சாயத்தைக் கூட்டி பிரச்சினைக்கு தீர்வைத் தேடுகிறோம். தவிர இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை யின் உயர் அதிகாரிகளுக்கு படை வீரர்களின் தொல்லைகள் குறித்து பல முறை புகார் அளித் துள்ளோம். அவர்கள் எங்கள் புகார்களை அலட்சியம் செய்தே வந்திருக்கின்றனர். அதே நேரத் தில் சமீபத்திய அப்துல் ஷேக் சித்திரவதை குறித்து நாங்கள் எவ்வி தப்புகாரும் அளிக்கவில்லை. ஆனாலும் இச்சம்பவம் பெரிதாக வெடித்து விட்டது...'' என்று செய்தி இணையதளம் ஒன்றிக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தி ருக்கிறார்.

இந்திய எல்லைப் பகுதியைத் தாண்டும் வங்காள தேசத்தினர் ஆடு, மாடு போன்ற கால்நடை களை விற்பனை செய்ய முர்ஷிதா பாத் பகுதிக்கு வருகின்றனர். இப் பகுதியில் அடிக்கடி கால்நடை திருட்டும் நடைபெறுகிறது.

வங்காள தேசத்தவர்கள்தான் இந்தத் திருட்டில் ஈடுபடுகிறார் கள் எனக் கருதும் எல்லைப் பாது காப்புப் படையினர், யாரையா வது பிடித்து அவர்களை நையப் புடைத்து, சித்திரவதை செய்து, அந்தக் காட்சிகளை புகைப்பட மாகவும், வீடியோ காட்சிகளாக வும் ஆக்கி உள்ளூர் மொபைல் கடைக்காரர்கள் மூலம் பரவ விடும் டெக்னிக்கை வழக்கமாகக் கடைபிடிக்கின்றனர்.

இந்தக் காட்சிகளைப் பார்க் கும் கால்நடைத் திருடர்கள் திருட்டில் ஈடுபட மாட்டார்கள் என்பதால் இந்த வகை டெக் னிக்கை கையாளுகின்றனர் இரா ணுவ வீரர்கள். இப்பகுதி அடிப் படை வசதிகளற்ற எல்லைப் பகுதி என்பதால், எல்லைப் பாது காப்புப் படையினர் வழக்கமாக மேற்கொள்ளும் மொபைல் டெக் னிக் சித்திரவதை மீடியாக்களில் ஃப்ளாஷ் ஆவதில்லை.

இதனால் எல்லைப் பாதுகாப் புப் படையினரின் அட்டூழியங்க ளும், மனித உரிமை மீறல்களும் வெளி உலகத்திற்கும் தெரிய வருவதில்லை. ஆனால் அப்துல் ஷேக் விவகாரம் மட்டும் எப்படியோ மீடியாக்கள் வரை சென்றடைந்து விட்டது.

முர்ஷிதாபாத் மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவுத் தலைவ ரான ஜைனுல் ஆபிதீன்தான் உளவுத்துறையையும் முந்திக் கொண்டு இச் சம்பவம் குறித்து முதல்வர் மம்தா பாணர்ஜியிடம் தெரி வித்திருக்கிறார்.

பல்வேறு தொண்டு நிறுவனங் களும், மனித உரிமை அமைப்புகளும் எல் லைப் பாதுகாப்புப் படைக்கு எதிராக அப்பகுதியில் கண் டன ஆர்ப்பாட் டத்தை நடத்தியிருக் கின்றன. அமெரிக்க மனித உரிமை கண்கா ணிப்பகமும் கடும் கண்டனம் தெரிவித் திருக்கிறது.

முர்ஷிதாபாத் ஆதி வாசி கிராம் ஜன கல் யாண் சமிதி அமைப் பின் செயலாளரான ஜஹாங்கிர் ஃபக்கீர், எல்லைப் பாதுகாப் புப் படையினரின் நட வடிக்கைகள் குறித்து புரஃபைல் தயாரித்து தேசிய மனித உரிமை கமிஷனுக்கும், மத் திய உள்துறை அமைச்சகத்துக்கும் அனுப்பிருப்பதாகக் கூறுகிறார்.

தான் விரித்த வலையில் தானே மாட்டிக் கொள்வதுபோல, கால் நடைத் திருடர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தங்களின் காட்டுமிராண்டித் தனத்திற்கே சாட்சியாக மாறி இந்தியாவிற்கு தலை குனிவையும், நாட்டு மக்கள் காறித் துப்பும் நிலையையும் ஏற்படுத்தி விடும் என்பதை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கொஞ்சம் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

இந்திய அரசு வெட்கப்பட வேண்டும்!

எல்லைப் பாதுகாப்புப் படையினரின் சித்திரவதையைக் கண்டித்திருக்கும் அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமை கண்காணிப்பகம், "சித்தி ரவதையில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் மீது விசாரணை மேற்கொண்டு சித்திர வதை என்பது ஏற்றுக் கொள்ளத்தக்க தல்ல என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

யு.டியூபில் வெளியிடப்பட்டுள்ள காட்சிகள் சித்திர வதை நடந்ததற்கான தெளிவான சான்றுகளைக் கொண்டிருந்தும் - அந்தப் படையினர் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்பது வருத்தம ளிக்கிறது' என இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

கடந்த டிசம்பர் 2010ல் எல்லைப் பகுதியில் இந்திய மற்றும் வங்காளதேச மக்களை எல்லைப் பாதுகாப்புப் படை சித்திரவதை செய்வது குறித்து வீடியோ காட்சியை கொல்கத்தாவைச் சேர்ந்த தொண்டு நிறுவனத்தின் உதவியோடு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது மனித உரிமை கண்காணிப்பகம். இதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த மத்திய அரசு, தற்காப்பு சூழல்கள் தவிர்த்த மற்றசந்தர்ப்பங்களில் ஆயுதங்களை பிரயோகிக்கக் கூடாது என இராணுவத் திற்கு உத்தரவிட்டது. இதன் பிறகு எல்லைப் பகுதியில் கொல்லப்படும் அப்பாவி மக்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் படுகொலைகள், சித்திரவதைகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்ந்தபடியேதான் இருக்கிறது.

மனித உரிமை மீறலைப் பொறுத்தவரை இந்தியா வின் வடகிழக்கு மாநிலங்களில் இவை அன்றாட நிகழ்வுகளாகவே இருக்கின்றன. எல்லைப் புறத்தில் வாழும் மக்கள் பொதுவாகவே படிப்பறிவற்றவர் களாக, நாட்டு நடப்பை உணராதவர்களாக, சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதால் கேட்பார் யாரு மில்லை என அவர்கள் மீது அதிகார துஷ்பிரயோகம் செய்யும் இராணுவப் படையினர் படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள், வன்முறை, கொடூரத் தாக்குதல் என மனித உரிமை மீறலின் அனைத்து வடிவங்க ளையும் பிரயோகிக்கின்றனர்.

இந்தியாவில் மனித உரிமை மீறலுக்கு எதிராக எவ்வித உத்தரவாதமும் இல்லை என்பதால் சர்வதேச நாடுகளில் பல இந்தியாவோடு கைதிகள் பரிமாற் றத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூட தயக்கம் காட்டி வருகின்றன.

மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் ஆயுதங்கள் வீசியதாக கைது செய்யப்பட்ட டென்மார்க்கைச் சேர்ந்த கிம் டெவி விவகாரத்தில் அவரை இந்தியா விற்கு அழைத்து வர முயற்சிகள் நடந்தபோது, இந்தியாவில் மனித உரிமைக்கு பாதுகாப்பு இல்லை என்று பட்டவர்த்தனமாகக் கூறி கிம் டெவியை இந்தியாவிற்கு அனுப்ப மறுத்து விட்டது டென்மார்க் நீதிமன்றம்.

டென்மார்க் நீதிமன்றத்தின் இந்த செயல் இந்தியக் குடிமக்கள் என்ற வகையில் நம்மை வெட்கப்பட வைக்கிறது. ஆனால் அந்த வெட்க உணர்வு இந்திய அரசுக்கு ஏற்பட்டதாகத் தெரியவில்லை!

Pin It