சட்டமன்றம் என்பது சட்டங்களை இயற்றும் சபை மட்மல்ல... நாட்டு மக்களின் பிரச்சினைகள் அலசப்பட்டு, அது தீர்க்கப்படும் சபையும் கூட. இங்கு ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் இரு தரப்பிற்கும் மக்கள் நலன் சார்ந்த எண்ணங்களே மிகைத்திருக்க வேண்டும். இந்த மன்றத்திற்கு பிரதிநிதிகளை மக்கள் தேர்ந் தெடுத்து அனுப்புவது தங்களின் குறைகள் தீர்க்கப்படும்; அடிப் படை வசதிகள் உருவாக்கித் தரப்படும், அமைதியான வாழ்க் கைக்கு இந்த மன்றம் உத்திரவாதம் அளிக்கும் என்பதால்தான்.

ஆனால் சட்டமன்றங்கள் சத்த மன்றங்களாகவே திகழ்கின்றன. கூச்ச லும் குழப்பமும்தான் அங்கு மிகைத்தி ருக்கின்றன. சட்டமன்றத்தின் மாண்பு களை ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என இரு தரப்புமே அறியாதவர்களாகவே செயல் படுகின்றனர்.

அண்மையில் தேமுதிக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த்துக்கும் - முதல்வர் ஜெயலலிதாவுக்கும் சட்டமன்றத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் ரசிக்கும்படி யாக இல்லை.

ஏழை எளிய மக்களை பாதிக்கும் அதிமுக அரசின் பால், பஸ் கட்டணம் உள்ளிட்ட விலைவாசி உயர்வைக் குறித்து விஜயகாந்த் கேள்வியெ ழுப்ப... அதன் மீதான வாதப்பிரதிவா தங்கள் சூடாகி "ஒண்டிக்கு ஒண்டி வர்றியா?' என்று சிறுவர்கள் முண்டா தட்டுவது போல "சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் தனித்து நிற்கத் தயாரா?' என்று முதல்வர் கேட்க...

விஜயகாந்த் அதற்கு பதில் சவால் விட... சட்டமன்றம் சண்டைக்களமானது. தங்கள் பலத்தை நிரூபிப்பதற்கான அவையல்ல சட்டமன்றம் என்பதை இரு தரப்புமே அறியவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

அதே சமயம், ஆட்சியிலிருப்போருக்கு சகிப்புத்தன்மை அதிகம் இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் செய்யும் விமர்சனங்கள், குறைகளை தாங்கிக் கொள்ளும் பக்குவம் ஆளுங்கட்சிக்கு இருக்க வேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதிக்கப்பட வேண் டும்.

குறைகள் சுட்டிக்காட்டும்போது, அதனை சரி செய்ய கோரிக்கைகள் முன் வைக்கப்படும்போது அதனை செயல்படுத்தவல்ல பொறுப்பில் இருப்பது ஆளுங்கட்சி என்பதால் அதற்கு கூடுதல் பொறுப்புணர்வு இருக்க வேண்டும்.

ஆனால் முதல்வருக்கோ, அமைச்சர் பெருமக்களுக்கோ இந்த அரசியல் பக்குவம் இல்லை என்பதைத்தான் அன்றைய சபை நடவடிக்கைகள் வெளிப்படுத்தின.

விஜயகாந்த் எழுந்து பேசும்போது அவர் தனது பேச்சை முடிக்கும் முன்பே... “முதல்வரை பேச (பதிலடி கொடுக்க) அழைக்கிறேன்'' என விஜயகாந்த்தின் பேச்சுக்கு முட்டுக்கட்டை போட்டார் சபாநாயகர்.

“நான் பேசுவதை முழுமையாக கேளுங்கள்...'' என விஜயகாந்த் திரும்பத்திரும்ப கேட்டபோது - எதிர்தரப்பில் இருந்த அமைச்சர்கள் கூச்சல் போட்டு விஜயகாந்த் தொடர்ந்து பேச தடை ஏற்படுத்தியதில் கோபமான விஜயகாந்த் கையை நீட்டி "உட்காருங் கள்' என அமைச்சர்களைப் பார்த்து கடுமை காட்ட...

கைநீட்டிப் பேசி சபைக்கு குந்தகம் விளைவித்தார் என்ற காரணத்திற்காக விஜயகாந்த் 10 நாட்களுக்கு சபை கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டி ருக்கிறார்.

விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப் பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு விரோ தமானது என்று திமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் கருத்து தெரிவித்திருக்கின்றன.

கை நீட்டிப் பேசினார் விஜயகாந்த் - இது சபைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் என்பதை ஏற்க முடியாது. கை நீட்டிப் பேசுவதும், கையை உயர்த்திப் பேசுவதும் அவரவரது பாடி லாங்வேஜ் ஜைப் பொறுத்தது. தனது கருத்தை வெளிப்படுத்தும்போது ஒவ்வொருவ ரும் தங்களின் கை அசைவுகளில் மாறுபடுவார்கள்.

அதனால் இதைக் குற்றமாகக் கரு தக் கூடாது என தேமுதிக தரப்பினரும், கை நீட்டிப் பேசுவது சரியா? விஜய காந்த் அரசியல் பக்குவம் இல்லாதவர் என அதிமுகவினரும் எதிரெதிர் கருத்தை முன் வைக்கின்றனர்.

விஜய்காந்துக்கு பக்குவம் இல்லை என்று சொல்லும் அதிமுகவினர், திமுக ஆட்சியில் கருணாநிதி நிதி நிலை அறிக்கையை படிக்கும்போது ஜெயலலிதா அவர் கையிலிருந்து அறிக்கை யைப் பிடுங்கி கிழித்து எறிந்ததை நியா யப்படுத்தியவர்கள்தான்.

எதுவாக இருந்தாலும் எதிர்க் கட்சி யினர் எழுப்பும் கேள்விகளை உள் வாங்கிக் கொண்டு பதில் தருவ தற்கு மாறாக அவர்களின் பேச் சுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நிலை ஆளுங்கட்சிக்கு அழகல்ல...

கேள்வி கேட்கும் நிலையில் எதிர்க் கட்சிகள் இருக்கின்றன. அதனால் அவற்றுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படக் கூடாது. அதோடு கண்ணியக் குறை வான வார்த்தைகளை பயன்படுத்தா மல் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விக ளையும் குற்றச்சாட்டுகளையும் எதிர் கொள்ளும் பக்குவத்தை ஆளுங்கட்சி வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆளுங்கட்சியைத் தேர்ந்தெடுத்த அதே மக்கள்தான் எதிர்க்கட்சியையும் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். அதனால் மக்கள் நலனை இரு தரப்பும் கருத்தில் கொண்டால் சட்டமன்றங்கள் மக்கள் மன்றங்களாக கருதப்படும்.

Pin It