annaimuthu 300“நாங்கள் வெளியேறிய பிறகு இந்தியாவைப் பார்ப்பனர்களே ஆளுவார்கள்” என்று, பிரிட்டிஷ் தலைமை அமைச்சராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் 1945-இல் சொன்னார்.

“வெள்ளையர்கள் பார்ப்பனரிடமும், பனியா விடமும் நம்மை ஒப்படைத்துவிட்டு வெளியேறு கிறார்கள்” என்று தந்தை பெரியார் 1946 முதலே சொன்னார்.

பிரதமர் பண்டித நேரு, அவருடைய மகள் பிரியதரிசனி இந்திராகாந்தி இருவரும் 1946 முதல் 1984 வரையில் உள்ள 38 ஆண்டுகளில் 34 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்,

அது பச்சைப் பார்ப்பன - பனியா - மார்வாரி ஆட்சியாகவே நடந்தது. எப்படி?

நேரு, சாஸ்திரி, இந்திரா, சரண்சிங் முதலான பிரதமர்கள் பிறந்த உ.பி. 67 ஆண்டுகளுக்குப் பிறகும் எழுத்தறிவு இல்லாதவர்களை அதிகமாகக் கொண்ட பகுதியாக இருப்பதே அதற்குச் சான்று.

21 கோடி மக்களைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில், 21 விழுக்காடு தீண்டப் படாத வகுப்பினர்; 52 விழுக்காடு உள்ள இந்து-இஸ்லாமியர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். இவர்களில் அதிகம் பேர் 2014லும் எழுத்தறிவு மறுக்கப்பட்டவர்கள்.

12 கோடி மக்கள் உள்ள பீகாரிலும் இதே நிலைதான்.

இன்று 7.21 கோடி மக்கள் உள்ள வள்ளுவன் பிறந்த-பெரியார் வாழ்ந்த தமிழகத்திலேயே 15 விழுக்காடு மக்களுக்கு எழுத்தறிவு இல்லை. 47 ஆண்டுக் கால திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழ்மொழியையும், கல்வியையும், தமிழக வேளாண்மையையும் சீரழித்துவிட்டு, மதுக்குடியும், கற்பழிப்பும், வழிப்பறியும், கொலையும், பகற்கொள்ளையும் பெருகிய நாடாக ஆக்கிவிட்டது.

15 ஆண்டுகளாக குசராத்தைக் கட்டி ஆண்டு, அங்கு ஆர்.எஸ்.எஸ் வளர்த்தெடுத்த நரேந்திர தாமோதர தாஸ் மோடி, அங்கு கள்ளச் சாராயம் கரை புரண்டு ஓடுவதைத் தடுக்காமல். சிறுபான்மை இஸ்லாமியரை அஞ்சி நடுங்க வைத்துவிட்டு - டாட்டா, பஜாஜ், கௌதம் அதானி, முகேஷ் அம்பானி ஆகியோர் அள்ளித்தந்த பல ஆயிரம் கோடி ரூபாய்களைச் செலவு செய்து, எல்லா ஊடகங்களிலும், டுவிட்டரிலும், இணைய தளத்திலும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டு விளம்பரப்படுத்தி - கிழடு தட்டிப்போன கத்திரி சாதி அத்வானி யையும், சோதிடக் கல்வியைப் புகுத்திய ஜோஷியையும் பின்னுக்குத் தள்ளி விட்டு, இந்தியாவை இந்துத்துவா நாடாக ஆக்கிடப் போதிய வலிமை பெற்ற எண்ணிக்கையுடன் நாடாளு மன்ற மக்களவையில் தனிப்பெரும்பான்மை பெற்றுத் தலைமை அமைச்சராகி விட்டார்.

அவர் பொறுப்பேற்ற பிறகு குடிஅரசுத் தலைவர் ஆற்றிய முதலாவது உரை - “ஒரே பாரதம், ஒளிரும் பாரதம்” என்பதை மட்டுமே அடிப்படையாகக் கொண்டி ருந்தது, மொத்தத்தில் இந்தியாவையும் - குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களையும் கல்வி இன்மையிலும், வறுமையிலும் ஆழ்த்திவிட்டு, அமெரிக்காவின், அந்நிய மற்றும் இந்திய கார்ப்பொரேட் நிறுவனங்களின் கை யாள்களாக விளங்கிய இத்தாலிய சோனியா காந்தியும், அமெரிக்க அடிமை மன்மோகன் சிங்கும் தொடர்ந்து பத்தாண்டுகள் சீரழித்த நலிந்த பொருளாதாரத்தில் இருந்து, 2014-15ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை முதலாவதாக 10.7.2014இல் அளித்த நரேந்திர மோடி அரசு, காங்கிரசின் ஆட்சிப் பாதையிலிருந்து சிறிதும் மாறவில்லை. அத்துடன் இந்துத்துவா கொள் கையை வளர்த்து, மவுடிகப் பாதையில் இந்தியாவை அழைத்துப் போகவே வழிகோலிவிட்டது.

இந்திய அரசின் 2014-2015ஆம் நிதி ஆண்டுக் கான மொத்தச் செலவு 17,94,892 இலட்சம் கோடி ரூபா.

இதில் 8இல் ஒரு பங்கான 2.29 இலட்சம் கோடி ரூபா இராணுவச் செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தை நவீனப்படுத்துவது என்கிற பேரால், 2013-2014 ஆண்டைவிட 12.5 விழுக்காடு நிதி கூடு தலாக ஒதுக்கப்பட்டுள்ளது. காட்டாக 60 ஆயிரம் கோடி ரூபா. 126 இராணுவ வானூர்திகளை வாங்குவதற்கு என ஒதுக்கப்பட்டுவிட்டது.

இந்த இடத்தில் நாம் எல்லோரும் ஒன்றைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.

நாடு விடுதலை பெற்ற 67 ஆண்டுகளுக்குப் பிறகு கூட, இந்திய இராணுவத்துக்கு வேண்டிய போர்க் கருவி களையும் வானூர்திகளையும் இங்கேயே உற்பத்தி செய்வதற்கான இராணுவத் தொழில்நுட்பத்தை இவர் கள் ஏன் வளர்த்தெடுக்கவில்லை?

ஏனென்றால். இந்தியாவின் பாதுகாப்புத் துறை (னுநகநnஉந) அமைச்சராக இருந்த எவருக்கும் துப்பாக்கிக்குத் தலை எது, வால் எது என்பதே தெரியாது. இது ஒன்று.

அடுத்து முப்படைகளிலும் தலைமை தாங்கும் இடங் களில் இருப்பவர்கள் இன்றும் மேல்சாதிக்காரர்களே,

மூன்றாவதாக 1947இல் வெள்ளையன் வேண்டு மென்றே விட்டுவிட்டுப்போன - இந்தியா - பாக்கிதான் எல்லைத் தகராறு, பாதுகாப்புச் செலவில் ஒரு நல்ல பகுதியை விழுங்கிவிடுகிறது.

நான்காவதாக 1971க்குப் பிறகு உண்டான இந்தியா -பங்களாதேஷ் எல்லைத் தகராறு இன்னொரு பகுதி யை விழுங்கிவிடுகிறது.

மதநம்பிக்கை ஊட்டப்பட்ட இராணுவ வீரர்கள் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் காலங்களில் கூட. மனமாரக் கடமைகளைச் செய்வது இல்லை.

நம் பட்டாளம் ஆண்டின் பெரும் பகுதி நாள்களில் வெறும் பேன் குத்தும் பட்டாளம். அந்நிய நாட்டுத் தொழில் நுட்பத்தைக் கற்றுவந்து, இங்கேயே கருவிகளைச் செய்யத் திட்டமிடாத-ஆயுத இறக்குமதித் தரகுக் கொள்ளைப் பட்டாளம்.

இந்த அழகில் நேற்றுவரை இராணுவத் தளவாட உற்பத்தியில் 26 விழுக்காடாக இருந்த அந்நிய நேரடி முதலீட்டை இன்று 49 விழுக்காடாக உயர்த்தியிருக் கிறது மோடி அரசு. இது கடுங்கண்டனத்துக்கு உரியது.

இன்றைய இந்திய மக்கள் தொகை 122 கோடி. இதில் 60 விழுக்காடாக உள்ள 73 கோடி மக்கள் வேளாண்மையையும், வேளாண்மை சார்ந்த ஆடு, மாடுகள் வளர்த்தல் முதலான தொழில்களையும் செய் பவர்கள். இவர்கள் பெரிதும் கீழ்ச்சாதிக்காரர்களும், பட்டியல் வகுப்பினரும் ஆவர்.

இன்று வேளாண்மை நசிந்திட முதல் காரணம் நீர்ப்பாசன வசதி இன்மை; இரண்டாவது மின்வசதி தடைப்படுவது; மூன்றாவது பருவத்தில் பயிர் செய்யப் பணம் கிடைக்காதது.

வேளாண்மைப் பின்னணி இல்லாத பிரதமர் மோடிக்கும், இன்றைய நிதி அமைச்சர் ஜெட்லிக்கும் இது தெரிந்திருந்தால், இந்த ஆண்டுக்கு வேளாண் மைக்கு வெறும் 1,700 கோடியை மட்டும் ஒதுக்கிவிட்டு, இதில் 1,000 கோடியை பாசன வசதிப் பெருக்கத்துக்கு என்று-பிரதமரின் தனித்திட்டத்திலிருந்து ஒதுக்கியிருப்பது எவ்வளவு பெரிய மோசடி?

இந்துக்களின் புனிதமான ஆறான கங்கையை - வெள்ளக் காலத்தில் பிணங்களை இழுத்துச் செல்லும் கங்கையைத் தூய்மைப்படுத்திட ரூபா 2037 கோடியை ஒதுக்கிய மோடி அரசு, வேளாண்மைப் பாசனத்துக்கு ரூபா 1000 கோடி மட்டும் ஒதுக்கியது எப்படிச் சரியாகும்?

விவசாயிகளுக்கு 8 இலட்சம் கோடி ரூபா கடன் தரப் போவதாக மோடி அரசு அறிவித்திருப்பது ஒரு உள்நோக்கம் கொண்டது. 2015-2016ஆம் ஆண்டு களில் நடைபெறப்போகும் சட்டமன்றங்களுக் கான தேர்தலிலும் பாரதிய சனதாக் கட்சி பெற்றி பெற இப்போதே வீசப்படும் வெல்லக்கட்டி இது.

இவர்களுக்குத் தொலைநோக்குப் பார்வை இருந் தால் வேளாண்நிலப் பாசன வசதிக்காக 2 இலட்சம் கோடியையும், கதிர்மின் ஆக்கத்துக்கு (ளுடிடயச யீடிறநச) 2 இலட்சம் கோடியையும் ஒதுக்கி, இவற்றை வெற்றி யாக நிறைவேற்றிட வழிவகுத்திருக்க வேண்டும். அதைவிடுத்து எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்து கதிர் மின் ஆக்கத்துக்கு வெறும் 1000 கோடி ரூபா ஒதுக் கியிருப்பது, எல்லா மக்களையும் - குறிப்பாக வேளாண் மக்களையும் எள்ளி நகைப்பது ஆகும்.

அடுத்து, ஒட்டுமொத்ததக் கல்விக்கு ஒதுக்கப்பட்டி ருப்பது ரூபா 83,771 கோடி. இதில் எல்லோருக்கும் எழுத்தறிவு தர (சர்வ சிக்ஷா அபியான்) 28,635 கோடி ரூபா ஒதுக்கிவிட்டு, இந்துத்துவா பாடத்திட்டத்தைக் குழந்தைகளுக்குக் கற்பிக்க வழி செய்திருக்கிறது, அரசு. மீதியை நேரே உயர் தொழில்நுட்பக் கல்விக்கு ஒதுக்கி, மேல்சாதி-மேல்தட்டு மக்கள் வயிறு வளர்க் கும் உயர்கல்வி பெற வழிகோலியிருக்கிறது.

8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை யில் எல்லோருக்கும் இலவசக் கல்விதர எந்தத் திட்டமும் இல்லை.

இந்திய ஆட்சி இயந்திரத்தில் முதல் நிலைப் பதவிகளில் இன்று ஒரு இலட்சம் பேர் இருக் கிறார்கள். இவர்களுள் 75,000 பேர் மேல்சாதிக் காரர்கள்; இவர்கள் மொத்த மக்கள் தொகை யில் 17.5 விழுக்காட்டுப் பேர்களே. அதே நேரத் தில் 57 விழுக்காட்டுப் பேராக உள்ள எல்லா மதங்களையும் சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், 25 விழுக்காட்டுப் பேராக உள்ள பட்டியல் வகுப்பி னரும் பழங்குடியினரும் ஆக 82 விழுக்காட்டு மக்கள் வெறும் 25,000 பேரே இருக்கிறார்கள். இதுபற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

122 கோடி மக்களின் மொத்த மருத்துவத்துக்கும் 35,163 கோடி ரூபா மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்தச் செலவில் ஒரு சிறு பகுதியே ஆகும்.

எல்லோருக்கும், எல்லா வகை மருத்துவமும் சொந்த ஊராட்சி ஒன்றியத்து அளவு மருத்துவமனையிலேயே கிடைக்கச் செய்ய இது போதாது.

வாழ்நாள் காப்பீட்டு நிதித்துறை - பெரிதும் அரசுத் திட்டங்களுக்கு நிதி உதவி தரும் வணிகவியல் துறை ஆகும்.

இதில் நேற்றுவரை அயல்நாட்டு நேரடிப் பண முதலீடு 26 விழுக்காடாக இருந்தது. மோடி அரசு இதை 49 விழுக்காடாக உயர்த்திவிட்டது.

இராணுவத் துறையிலும், காப்பீட்டு நிதித் துறையிலும், மொத்த வணிகத்திலும், சில்லறை வணிகத்திலும் அயல்நாட்டார் நேரடி முதலீட்டை நுழையவிட்டதை மன்மோகன் அரசு செய்தது; அதைவிடப் பெரியதாக மோடி அரசு செய்கிறது.

மன்மோகன் சிங் அரசு கிடப்பில் போட்டிருந்த தொடர் வண்டித் துறைக் கட்டணங்கள் உயர்வுத் திட்டத்தை, மோடி அரசு சந்தடி செய்யாமலே அறிவித்துவிட்டது.

சரக்குத் தொடர் வண்டிகளுக்கு உயர்த்தப்பட்ட ஒவ் வொரு ரூபா கட்டணமும் அற்றைக் கூலிக்காரர் முதல் கோடானுபதிகள் வரையில் உள்ள எல்லோரையும் பண்டங்களின் விலை ஏற்றத் தண்டனைக்கு ஆளாக்கு வது ஆகும்.

கங்கையின் புனிதத் தன்மையைக் காப்பாற்றவும், அழுக்கை அகற்றவும் பெருந்தொகையைத் தத்தம் செய்யப் போகும் மோடி அரசு, எல்லோருக்கும் நல்ல குடிநீர்தரப் போர்க்கால விசையில் முனைய வேண் டும். அதுபற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

மோடி அரசு மொத்தத்தில் இந்துத்துவக் கொள்கை யையும், இந்தியை ஆட்சிமொழியாக உடனே ஆக்கும் திட்டத்தையும் முதன்மை இடம் தந்து நிறைவேற்றப் போகிறது. இடையில், இந்தியா முழுவதிலும் சமஸ் கிருத வாரம் கொண்டாட மோடி அரசு ஆணை யிட்டுள்ளது.

இந்தியா முழுவதிலும் உள்ள இளைஞர்களுக்கு இந்துத்துவ வெறியை ஏற்றிட முயலுகிறது.

அவரவரும் தங்கள் தங்கள் தாய்மொழி, தாய்நாடு, தனித்தனிப் பண்பாடு என்பவற்றைக் காப்பது இனி பெரும் போராட்டமாகவே இருக்கும்.

போராட்டமே மானிட வாழ்க்கை.

நாம் போராடிட அணியம் ஆவோம், வாருங்கள்!

Pin It