சுயமரியாதை இயக்கத்தின் தலைவர் பெரியார் ஈ.வெ. இராமசாமி 1931 திசம்பர் மாதம் அய்ரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்வதற்காகப் புறப்பட்டார். அய்ரோப்பாவில் தன்னுடைய ஓராண்டுக்காலச் சுற்றுப்பயணத்தின்போது சோவியத் இரஷ்யா, செருமனி, பிரிட்டன், °பெயின், போர்ச்சுக்கல் முதலான நாடு களுக்குச் சென்றார். அந்நாடுகளில் அப்போதிருந்த முற்போக்கு இயக்கங்களுடன் பெரியார் தொடர்பு கொண்டார்.

சோவியத் நாட்டில் மூன்று மாதங்கள் தங்கியி ருந்து பயணம் செய்தார். அப்போது உலகில் பெரும் பொருளாதார மந்த நிலையால் முதலாளித்துவ அய் ரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் கடுமையான நிதி நெருக்கடியில் திணறிக் கொண்டிருந்த போது, சோவியத் சோசலிசக் குடியரசில் எல்லாத் துறைகளிலும் சாதனை படைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு வியந்து மகிழ்ந் தார். செருமனியில், உலகில் காலனிய ஆட்சியின்கீழ் இருந்த பல நாடுகளின் தேசிய இயக்கங்களுக்கு ஆதரவளித்துக் கொண்டிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தினரைப் பெரியார் சந்தித்தார்.

periyar to kill a mocking bird 600 பெரியார் தன் சுற்றுப்பயணத்தின்போது, அய் ரோப்பியக் கண்டத்தில் இருந்த பல்வேறுபட்ட புரட்சிகர இயக்கத்தினரைச் சந்தித்துப் பேசி னார். அவர்களுள் நிர்வாணச் சங்கம், சுதந்தர சிந்தனையாளர் கழகம், நாத்திகர்கள், புலம் பெயர்ந்த புரட்சியாளர்கள், கம்யூனி°டு கள், சோசலி°டுகள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இச்சந் திப்புகள் பெரியாரை மனஎழுச்சி கொள்ளச் செய்தன. பெரியாரின் அய்ரோப்பியப் பயணத்தின் போது, பெரியார் முதன்முதலாகச் சந்தித்த மரபினப் பாகுபாடு சிக்கல் (Race Question) குறித்த செய்தி இதுவரை வெளிவரவில்லை.

1932இல் பெரியார் பிரிட்டனில் கோடைக்காலத் தில், இருபது நாள்களுக்கும் மேலாக, சப்புராஜ் சக்லத் வாலா, கிளிமென்சு பாம் தத் மற்றும் பல தலைவர் களுடன் நாள்தோறும் அளவளாவிக் கொண்டிருந்தார். சக்லத் வாலா, பிரித்தானிய நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது கம்யூனிஸ்ட் உறுப்பின ராவார். கிளிமென்சு பாம் தத் என்பவர் பிரிட்டனில் கம்யூனி°ட் கட்சியை நிறுவியவர்களில் ஒருவர்.

மேலும் புகழ்பெற்ற ரஜினி பாம் தத்தின் அண்ணன் இவர். இங்கிலாந்தில் வாழ்ந்த ரஜினி பாம் தத் இந்தியாவில் கம்யூனி°ட் கட்சியின் செயல்பாடுகளில் மிகுந்த அக்கறை செலுத்த வந்தார் (ரஜினி பாம் தத் எழுதிய ‘இன்றைய இந்தியா’ எனும் நூல் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும் - மொழிபெயர்ப்பாளர்).

கம்யூனிசக் கொள்கை கொண்ட பல்வேறு அமைப்புகளின் அலுவலகங்களுக்குச் சென்று பார்வை யிட்டார் பெரியார். ஏகாதிபத்திய எதிர்ப்புக் கழகம், தொழிலாளர்களின் பன்னாட்டு உதவி மய்யம், பிரித் தானிய கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடான ‘டெய்லி ஒர்க்கர்’ (Daily Worker) அலுவலகம் ஆகியவை பெரியார் பார்த்தவைகளுள் குறிப்பிடத்தக்கவை யாகும்.

இங்கிலாந்து பயணத்தின் நான்காவது நாளில் பெரியார் சக்லத்வாலாவைச் சந்தித்தார். அதன்பின் பெரியார் பிரிட்டனில் தங்கியிருந்த காலம் முழுவதும் சக்லத்வாலாவுடனே இருந்தார். பெரியார், தொழிலாளர்களின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றி னார். அக்கூட்டத்தில் இங்கிலாந்தின் தொழிற்கட்சித் தலைவர் ஜார்ஜ் லான்பெரியைக் கடுமையாக விமர் சனம் செய்தார்.

இங்கிலாந்தில் பெரியார் தன் பயணத்திற்கு இடை யில், புகழ்பெற்ற ‘ஸ்காட்ஸ்பொரா வழக்கின்’ (Scottsboro Case) தீரம்மிக்கப் பெண் போராளி அதா ரைட் (Ada Wright) அவர்களைச் சந்தித்தார். இந்த வழக்கை மய்யப்படுத்தி 1960இல் ஹாப்பர் லீ என்கிற புகழ்பெற்ற எழுத்தாளர் “To Kill a Mocking Bird” என்ற நாவலை எழுதினார்.

(ஸ்காட்ஸ்போரோ வழக்கின் பின்னணி) அமெரிக் காவில், டெனேசி மாநிலத்தில், சட்டநூகா என்ற இடத் தில் 1931 மார்ச்சு 25 அன்று ஆப்பிரிக்க-அமெரிக்க (கருப்பின) இளைஞர்கள் ஒன்பது பேர் தொடர் வண்டி யில் ஏறினர். சிறிது நேரத்தில், தொடர்வண்டியில் ஆண்கள்போல் உடையணிந்து வேலையில்லாமல் சுற்றிக் கொண்டிருந்த இரண்டு பெண்களைக் கற் பழித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் அந்த ஒன்பது கருப்பின இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.

அப்போது அமெரிக்காவில் வெள்ளை இனவெறி மேலோங்கியிருந்தது. அதனால் குற்றஞ்சாட்டப்பெற்ற ஆப்பிரிக்க-அமெரிக்கர்களுக்கு வெள்ளை இன நீதிபதி களால் நியாயமான முறையில் விசாரணை நடத்தா மல், மரண தண்டனை விதிக்கப்படுவது இயல்பான நடைமுறையாக இருந்தது. எனவே கைது செய்யப்பட்ட ஒன்பது கருப்பின இளைஞர்களில் எட்டுப் பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் களைந்திட அமெரிக் காவின் கம்யூனிஸ்ட் கட்சி ஒப்பரிய வகையில் செயல்பட்டது.

மரணதண்டனை விதிக்கப்பட்ட 14 அகவை ராய், 17 அகவை ஆண்டி ஆகியோரின் தாய் அதா ரைட் என்பவரைப் பொதுவுடைமைக் கட்சியினர் அணுகி, சட்ட வழியில் அவருடைய மகன்களைக் காப்பாற்றப் போராடுமாறு ஊக்குவித்தனர். இக்கருப்பின இளைஞர் களைக் காப்பாற்றுமாறு உலக அளவில் ஆதரவான குரல்கள் ஓங்கி ஒலித்தன. இந்த வழக்கு பற்றிய விவரங்களைச் சூசன் டி. பென்னிபெக்கர் என்பவர் “ஸ்காட்ஸ் பொரோ முதல் மூனிஞ் வரை : 1930களில் பிரிட்டனில் மரபினம் மற்றும் அரசியல் கலாச்சாரம்” என்கிற தன்னுடைய ஆய்வு நூலில் விளக்கியிருக் கிறார்.

அதா ரைட் 1890இல் சிர்தாவில் பிறந்தார். இவரு டைய பாட்டி அடிமையாக ஒரு வீட்டில் வேலை செய்த வர். தன் மகன்களுக்கு மரண தண்டனை விதிக்கப் படும் வரை அரசியல் பற்றி ஏதும் அறியாதிருந்தவர். எட்டு ஆண்டுகளுக்கு முன் கணவனை இழந்தவர். தன் மாநில எல்லையைத் தாண்டிப் பயணம் செய்யா திருந்த அதா ரைட் தன் மகன்களைக் காப்பாற்ற ஆதரவு திரட்டுவதற்காக அய்ரோப்பாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.

இங்கிலாந்தில் பொதுவுடைமைக் கட்சியினர் மற்ற இயக்கங்களின் துணையுடன் அதா ரைட்டுக்கு பெருமளவில் ஆதரவு தெரிவிக்க ஏற்பாடு செய்தனர். சக்லத் வாலா இம்முயற்சியில் முதன்மையானவராகத் திகழ்ந்தார். அதா ரைட் இலண்டனுக்கு வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடான ‘டெய்லி ஒர்க்கர்’ (Daily Worker) ஏட்டில், 1932 மே 7ஆம் நாள் ஸ்காட்ஸ்பொரோ நிகழ்ச்சி நடைபெறும் என அறிவித்தது.

1932 சூன் 19 அன்று டிராஃபால்கர் சதுக்கத்தில் அதா ரைட்டுக்கு ஆதரவாக மாபெரும் பேரணி நடத்திட திட்டமிடப்பட்டது. ஆனால் பிரித்தானிய அரசின் அயலுறவு அமைச்சகம் அதா ரைட் இங்கிலாந்தில் நுழைவதற்கு அனுமதி மறுத்து விட்டதால், மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் அவரால் கலந்துகொள்ள இயலாது போயிற்று. அதன்பின் அயலுறவு அமைச்சக நிர்வாகம் தன் முடிவை மாற்றிக்கொண்டு, அதா ரைட் பத்து நாள்கள் மட்டும் இங்கிலாந்தில் இருக்க இசைவு தந்தது.

பிரிட்டனிலிருந்து பெரியார் வெளியேற வேண்டும் என்று காவல் துறை கெடுபிடி செய்வதற்கு முன், பெரியார் இலண்டனில் இருந்தபோது தான், அதா ரைட் இங்கிலாந்தில் பத்து நாள் இருப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. 1932 சூன் 28 அன்று அதா ரைட் பாரிசு நகரத்திலிருந்து இலண்டனுக்கு வந்து சேர்ந்த அன்றே, இலண்டனில் கிளர்க்கன்வெல் அரங்கில் அதாரைட் மகன்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சி பற்றி 1932 சூன் 30 நாளிட்ட ‘டெய்லி ஒர்க்கர்’ நாளேட்டில் விரிவான செய்தி இடம்பெற்றிருந்தது. கூட்ட மேடையை நோக்கி அதா ரைட் நடந்து சென்ற போது, ‘நீக்ரோ மற்றும் இந்தியத் தோழர்கள்’ அவருக்குப் பாதுகாவலர்களாக உடன் சென்றனர். அரங்கத்தில் இருந்த அனைவரும் தொடர்ந்து கையொலி எழுப்பி அவரை வரவேற்றனர். வேலை தேடிச் சென்ற தன் மகன்களுக்கு எவ்வாறு அநியாயமாக மரண தண்டனை விதிக்கப்பட்டது என்பதை விளக்கி உரையாற்றியதை ‘டெய்லி ஒர்க்கர்’ ஏடு வெளியிட்டிருந்தது.

500 பேர் கூடியிருந்த அந்த அரங்கில், அப்போது 53 அகவையினராக அழகிய தாடியுடன் இருந்த பெரியார் சக்லத்வாலாவுடன் அமர்ந்து, அதா ரைட் ஆற்றிய உரையை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டி ருந்தார். அதாரைட், “என்னுடைய இரண்டு மகன் களையும் மற்ற ஏழு இளைஞர்களையும் விடுதலை செய்வதற்கு இந்த இரவில் இங்கே கூடியுள்ள நீங்கள் ஆவன செய்ய வேண்டும். நீங்கள் ஸ்காட்ஸ்பொரோ சிறுவர்களுக்காகப் போராடுவது என்பது உலகம் முழுவதும் சிறைகளில் இருக்கும் ஒடுக்கப்பட்ட வர்க்க சிறையாளிகளுக்காகப் போராடுவதாகும்” என்று கூறியபோது அரங்கிலிருந்த அனைவரும் நெஞ்சம் நெகிழ்ந்தனர்.

அந்த அரங்கக் கூட்டத்தில் சக்லத்வாலா உரை யாற்றியபோது, “ஸ்காட்ஸ்பொரோ சகோதரர்கள்” போன்ற நிலையில் இந்தியாவில் பலர் இன்னலில் இருக்கின்றனர் என்று கூறினார். மேலும் சக்லத்வாலா கருப்பின தொழிலாளர்களைத் தொழிற்சங்கத்தில் சேர்க்க மறுக்கும் அமெரிக்காவின் சீர்திருத்தவாத தொழிற் சங்கங்களைச் சாடினார் கம்யூனிஸ்ட் தொழிற்சங் கங்கள் மட்டுமே இன வேறுபாடு இன்றி, எல்லாத் தொழிலாளர்களையும் சேர்த்துக் கொள்கின்றன என்று பெருமிதத்துடன் கூறினார். பிரிட்டன் பொதுவுடை மைக் கட்சியைச் சேர்ந்த பலரும் அந்த அரங்கக் கூட்டத்தில் உரையாற்றினர்.

அக்கூட்டத்தில் அமெரிக்க இளைஞர்களை விடுதலை செய்யுமாறு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலண்டனில் இருந்த அமெரிக்கத் தூதரகத்தில் அளிப்பதற்கான ஒரு குழுவை அமைத் தனர். அக்கூட்டத்தில் உரையாற்றியவர்களில், பன்னாட்டுத் தொழிலாளர்களின் நிவாரண அமைப்பைச் சேர்ந்த இசபெல் பிரவுன் என்பவரின் பேச்சுதான் பெரி யாரைப் பெரிதும் கவர்ந்தது. இறுதியில் உரை யாற்றிய இசுபெல் பிரவுன், தொழிற்சங்கங்களின் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற் கான நடைமுறை சார்ந்த வழிமுறைகளை விளக்கினார்.

அக்கூட்டதுக்கு இலண்டன் கடல் பணியாளர் அமைப்பைச் சேர்ந்த ஜிம் ஹெட்லி தலைமை வகித் தார். அவர் நன்கொடை வழங்குமாறு பார்வை யாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். மொத்தம் 13 கினியா (guineas - அப்போது 1 கினியா என்பது தற்போது 1.05 பவுண்ட்) திரட்டப்பட்டது. அதன்பின் ஏலம் விடுதல் தொடங்கியது. செலவிடுவதில் எப்போ தும் கஞ்சத்தனமாக இருக்கும் பெரியார், அந்த அரங்க நிகழ்ச்சியால் நெகிழ்ந்து, செருமனியின் வெள்ளி கழுத்தணியை (Chain) அரை பவுண்டுக்கு ஏலம் எடுத்தார். அது அன்று சிறிய தொகை அல்ல.

பெரியார், ஓரண்டுக் காலம் அய்ரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் குறிக்கோள், பல நாடுகளிலும் செயல்பட்டுக் கொண்டிருந்த முற்போக்கு இயக்கங்களை நேரில் கண்டறிந்து, ஆய்வு செய்து, அந்த அனுபவங்களைக் கொண்டு அவர் தொடங்கியிருந்த சுயமரியாதை இயக்கத்தைச் செழுமைப் படுத்த வேண்டும் என்பதேயாகும்.

இலண்டனில் எதிர்பாராத வகையில் அதா ரைட்டைச் சந்திக்க நேர்ந்ததும், ஸ்காட்ஸ்பொரோ வழக்குப் பற்றி விரிவாக அறிந்துகொண்டதும், உலக அளவில் சமூகத்தில் புரையோடியிருக்கின்ற சமூக ஏற்றத்தாழ்வு களையும் கொடுமைகளையும் அறிந்து கொள்வதற்கு மேலும் ஒரு புதிய வாய்ப்பாக - அனுபவமாக பெரியாருக்கு அமைந்திருக்கும்.

(ஆ.இரா. வெங்கடாசலபதி, திராவிட இயக்க வரலாற்று ஆய்வாளர் - தமிழாக்கம் : க. முகிலன். நன்றி : The Hindu, 22.8.2015)

Pin It