1. தந்தை பெரியார் அவர்கள் ஒரு திருமணத்தில் உணவு உண்ட பிறகு கையை கழுவ அருகில் இருந்தவரிடம் தண்ணீரை ஊற்றக் கேட்டுள்ளார். அவரும் ஒரு குவளைத் தண்ணீரை ஒரே தடவையில் ஊற்றிவிட்டார். பெரியார் சிறிதும் தாமதிக்காமல் தண்ணீரை ஊற்றியவரை கன்னத்தில் அறைந்து விட்டார். அறைவாங்கியவரும் என்ன தவறு நடந்து விட்டது என்பதை அறிய அமர்ந்திருந்த அய்யாவிடம் பயந்து, பயந்து “அய்யா நான் என்ன தவறு செய்துவிட்டேன்” என்று கேட்டார். பெரியாரும் “நெய் கிடைக்கும்; தண்ணீர் கிடைக்காது; சிக்கன மாகப் பயன்படுத்த வேண்டும்” என்று கூறினார். பால் தடையின்றிக் கிடைக்கிறது; தண்ணீர் கிடைப்பது சிரமமாக உள்ளது. இச்செய்தியை பெரியாரின் உறவினர் காலம்சென்ற சேலம் எம். இராசு என்னிடம் கூறினார்.

2. 1967இல் காமராசர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த பொழுது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மக்கள் எழுந்து அடுத்த தெருவுக்கு ஓடினர். காமராசர் கூட்ட ஏற்பட்டாளரிடம் கேட்டார் : “ஏன் சனங்க ஓடுறாங்க? என்ன விசயம்னு?” கேட்டார். “பக்கத்து தெருவுக்கு எம்.ஜி.ஆர். வராராம். அதான் ஓடுறாங்க.” அதற்கு காமராசர் கூட்ட ஏற்பாட்டாளரிடம் சிரிச்சுக்கிட்டே “ஓடுறாங்க, ஓடுறாங்க, கூத்தாடி பின்னாடி ஓடினா அவன் கூத்தியாகிட்ட நாட்டை கொடுத்துட்டுப் போவான்” என்று 1967இல் சொன்னது 1987இல் பலித்தது.

3. நேருவின் பேரன் ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் தமிழர்களுக்கு செய்த துரோகங்களைக் கண்டித் துத் தன்னுடைய ஆதங்கத்தைத் தமிழறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ராஜீவ் காந்தியை கவிதையில் “நீ சின்னாபின்னமாக உடல் சிதறி இறப்பாய்; எம் தமிழர்களுக்குத் துரோகம் செய்து விட்டாய்” என்று சொன்னதும், ராஜீவ் காந்தி இறந்ததும் சரிதானே. இச்செய்தியை 15.9.2017இல் ஒரு தமிழர் கூறியதைக் கேட்டதாகும்.

Pin It