உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர் (கு.1033, அதி.104)

உலக அளவில் நிலக்கடலை உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் அதிகம். நிலக்கடலை உற்பத்தி உழவுத் தொழிலில் சிறந்த உற்பத்தியாகும். தென் இந்தியாவில் அதிகம் உற்பத்தியாகின்றது. குறைந்த அளவு நீர் இருந்தாலே கடலை சாகுபடிக்கு போதுமானது. நெற்பயிர் போல் நீர் அதிகம் தேவையில்லை.

நிலக்கடலையில், நார்ச்சத்து, வைட்டமின்கள், மாங்கனீசு, பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு போன்ற தாதுச் சத்துக்களும் உள்ளன. பித்தப்பைக் கல்லைக் கரைக்கும். இதயம் வலுப்பெறும். நிலக்கடலையில் ஆன்டி ஆக்சிடென்ட் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. மூளை வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள் உள்ளதால் நினைவாற்றல் அதிகம் நிலைக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கும். அமினோ அமிலம் அதிகம் உள்ளது. மனிதர்களுக்கு நன்மை பயக்கும். நல்ல கொழுப்பு அதிகம் உள்ளது.

நிலக்கடலை, பாதாம், பிஸ்தாவை விட சிறந்த சக்தி மிகுந்தது. கருப்பைக் கோளாறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தாதுக்களும் சத்தும் நிறைந்துள்ளது. தொடர்ந்து நிலக்கடலை சாப்பிடும் பெண்களுக்குக் கருப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாது. கருவுற்றலுக்கு நன்கு துணை நிற்கும். மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சிக்கு நன்றாகப் பயன்படும். கருத்தரிப்பதற்கு முன்பும், கருவுற்ற பின்பும் நிலக்கடலையைப் சாப்பிடலாம்.

நிலக்கடலைச் சாகுபடியாகும் காலங்களில் எலிகள், பறவைகள், ஆடு, மாடு, முயல்கள் போன்ற உயிரினங்கள் இனப்பெருக்கம் அதிகரிக்கின்றன. எனவே இயற்கை முறையில் உற்பத்தியாகும் நிலக்கடலையை உண்டு, அதை உற்பத்தி செய்யும் உழவர்களுக்குத் துணை நிற்போம், தலை வணங்குவோம்.

Pin It