இருந்த கல்வி உரிமையை. 1977இல் பறித்தனர்; இன்றுவரை அதை மீட்க, யார் என்ன செய்தார்கள்?

விடுதலை பெற்ற இந்தியாவில் கல்வி உரிமை அடிப்படை உரிமையாக அளிக்கப்படவில்லை. “அரசு நெறிகாட்டும் கொள்கைகள்” (Directive Principles of State Policy) என்று மட்டுமே கல்வி உரிமை அழைக்கப்பட்டது.

வெள்ளையன் காலத்தில், 1937-இல் எழுதி வெளியிட்ட இந்திய அரசுச் சட்டம் என்பதில் Government ofIndia Act 1937, கல்வி மாகாண அரசின் உரிமையாக இருந்தது. அந்த உரிமை கூட அரசமைப்புச் சட்டத்தில் மாகாணத்தின் குடிமக்களின் அடிப்படை உரிமையாக ஆக்கப்படவில்லை.

இன்றைய கல்வி அளிக்கும் உரிமை முழுவதுமாக இந்திய அரசிடம் சென்று விட்டது. தமிழ் மாநிலத்தில் ஒரு இடைநிலைப் பயிற்சிப் பள்ளியைத் தொடங்க வேண்டுமானாலோ, ஒரு கல்லூரியைத் தொடங்க வேண்டுமானாலோ, அதற்கான அதிகாரம் 1977-க்குப் பிறகு  இந்திய அரசிடம் முழுவதுமாகச் சென்று விட்டது. இதுபற்றி எந்த மாநில அரசும் இன்றுவரை கவலைப்படவில்லை; மீட்டெடுக்க முயற்சிக்கவில்லை.

இன்றைய மோடி அரசு, 2019-இல் பொறுப்புக்கு வந்தவுடன், “இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கை”யை வெளியிட்டது. அதில் தாய்மொழி, ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளும் எல்லா மாநிலங்களிலும் 6ஆம் வகுப்பு முதல் கற்பிக்கப்படும் எனக் கல்வியில் மும்மொழித் திட்டத்தை அறிவித்தது.

ஏற்கெனவே, 1956-இல் மொழிவாரி மாநிலப் பிரிவினை ஏற்பட்ட பொழுது, தமிழகம் மட்டும் இறுதிவரை இந்தியை எதிர்த்து நின்றது. மற்ற தென் மாநிலங்கள் எல்லாம் மும்மொழிப் பாடத் திட்டத்தை ஏற்றுக்கொண்டன. தமிழகம், அப்போது 1956-இல் புறக்கணித்தது போலத் தொடர்ந்து புறக்கணிக்க முடியுமா என்று சிந்திக்க வேண்டும்.

ஏன்?

  1. அஞ்சல் துறை, 2. தொடர் வண்டித் துறை, 3. தொலைப்பேசித் துறை,
  2. வருமான வரித்துறை, 5. நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவற்றில், “இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 17ஆம் பகுதியில் உள்ள 343 முதல் 349 முடிய உள்ள விதிகளில் 343(1) என்ன கூறுகின்றது?”

“இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழியாகத் தேவநாகரி வரிவடிவிலான இந்தி இருக்கும்” என்று திட்டவட்டமாகக் கூறுகிறது.

இந்த நிலையை இன்றுவரை அதிகாரப்பூர்வமாக எந்த மாநிலமும் எதிர்க்கவில்லை.

தமிழகம், 1963-இல் இந்தி இந்தியாவின் அலுவல் மொழிகள் சட்டம் (Indian Official Languages Act, 1963) என்பதை ஆதரித்தது. ஆங்கிலம் தொடர்ந்து, அலுவல் மொழியாக, எல்லா இந்திய அரசு அலுவலகங்களிலும் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியது.

ஆனால், 1963 சட்டத்தில் பிரிவு 2-இல் சொல்லப் பட்டது எதுவாக இருப்பினும், அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட 15 ஆண்டுகள் கழித்து, குறிப்பிட்ட நாளில் இருந்து இந்தியுடன் ஆங்கிலமும் தொடர்ந்து பயன் பாட்டில் இருக்கலாம் என்று கூறுகிறதே தவிர, இருக்கும் என்று முடிந்த முடிவாகக் கூறவில்லை.

அப்பொழுது  மாநிலங்களவையின் உறுப்பினராக இருந்த அறிஞர் சி.என்.அண்ணாதுரை அவர்களுக்கும் பிரதமர் நேரு அவர்களுக்கும் நடந்த வாக்குவாதம் வருமாறு :

பிரதமர் நேரு, இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பி ஏற்கும் வரை ஆங்கிலமே தொடரலாம். இந்தி திணிக் கப்பட மாட்டாது என்ற வாக்குறுதியை அளித்தார்.

அதற்கு அறிஞர் அண்ணாதுரை பிரதமர் நேருவிடம், “தொடரலாம்” என்று கூறுகிறீர்களே தவிர, “தொடரும்” என உறுதிபடக் கூறவில்லையே என்று வாதிட்டார். ஆனால் நேரு ஒருபோதும் உறுதிப்படக் கூறுவதில் அக்கறை காட்டவில்லை. இந்தச் சொற்களில் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை என்று நேரு சமாதானம் சொல்லிவிட்டார்.

1963-ஆம் ஆண்டின் இந்தச் சட்டம், அரசமைப்புச் சட்டத்தில் ஒரு பகுதியாகச் சேர்க்கப்படவில்லை. இது இன்றுவரை ஒரு குறைபாடு. இந்தக் குறைபாடு சரி செய்யப்படாத வரையில் அரசமைப்பு சட்டத்தின் 343 முதல் 349 வரையுள்ள பிரிவுகளில் என்ன சொல்லப் பட்டுள்ளதோ, அதுதான் நடப்பாக நீடிக்கும்.

இப்போது நம்முன் உள்ள சிக்கல் என்ன?

6ஆம் வகுப்பு முதல் தாய்மொழி, ஆங்கிலம், இந்தி மூன்றும் கட்டாயம் கற்க வேண்டும் என்பதற்கு மாறாகத் தாய்மொழி, ஆங்கிலம், ஏதாவது ஒரு இந்திய மொழி கற்க வேண்டும் என்று பா.ச.க. அரசு கல்விக் கொள் கையை மாற்றியிருக்கிறது. இதுவும் தீர்வாகாது. ஏன்?

ஆங்கிலம் தொடர்ந்து நீடிக்கிற வரையில் எந்த இந்தியத் தாய்மொழியும் எல்லாக் கலை அறிவியல் பாடங்களையும் கற்பிக்கிற வலிமையைப் பெறமுடியாது.

ஒவ்வொரு இந்தியனும் அவனவன் தாய்மொழி யில் எல்லாக் கலைகளையும் கற்க வேண்டும். அதற்கு இப்போது வாய்ப்பில்லை. அந்த வாய்ப்பை நாம் உண்டாக்க வேண்டும். அது எப்போது முடியும்?

  1. கல்வி அளிக்கும் உரிமை அந்தந்த மாநிலத்துக்கு வந்துசேர வேண்டும்.
  2. ஒவ்வொரு மாநிலத்திலும், உள்ள மய்ய அரசு அலுவலகங்கள், மாநில அரசு அலுவலகங்கள் எல்லா வற்றிலும் அந்தந்த மாநிலத் தாய்மொழியே அலுவல் மொழியாக இருக்க வேண்டும். ஆங்கிலமோ, இந்தியோ அலுவல் மொழியாக இருக்கக்கூடாது.

இப்போது, அண்மையில் தமிழகத்தில் உள்ள தொடர் வண்டி நிலையங்களில், அதிகாரிகளுக்கு இடையேயோ, அதிகாரிகளுக்கும் பொது மக்களுக்கும் இடையேயோ தமிழில் பேசுவது கூடாது என்று இந்திய அரசு ஆணை பிறப்பித்தது. தமிழ்நாட்டில் எல்லாத் தலைவர்களும் ஒன்றுதிரண்டு அந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

அது நிரந்தரமாக முறியடிக்கப்பட வேண்டுமானால், அரசமைப்புச் சட்டத்தில் ஏற்கப்பட்டுள்ள 22 மொழிகளையும் இந்திய அரசு அலுவல் மொழிகளாக ஆக்கி அரசமைப்புச் சட்டம் திருத்தம் செய்யப்பட்டாலொழிய, இதை நிரந்தரமாக முறியடிக்க முடியாது. நிற்க.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பகுதியில், பிறவி அடிப்படையிலான நால்வருணம் விதி 13(3b), விதி 372(3) பிரிவுகளில் உள்ள கருத்துப்படி, 2019-இலும் உண்டு.

வடஇந்தியாவில் தாய பாகப் பிரிவுச் சட்டப்படி பிராம ணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகிய 4 பிரிவுகள் உண்டு.

தென்னிந்தியாவில் மித்தாட்சரப் பிரிவுச் சட்டப்படி - பிராமணன், சூத்திரன் ஆகிய 2 பிரிவுகள் மட்டுமே உண்டு.

இதுபற்றித் தந்தை பெரியார் அவர்கள், 1922 முதல் பரப்புரை செய்தார்; போராடினார்; அரசமைப்புச் சட்டத்தில் உள்ள பிரிவுகளைக் கொளுத்தினார். ஆனால் அரச மைப்புச் சட்ட விதி 13(3க்ஷ), விதி 372(3) ஆகியவை நீக்கப்படவில்லை.

இந்தி எல்லா வகையிலும் பாதுகாக்கப்பட என்ன ஏற்பாடு அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறது என்பதை முழுவதும் தெரிந்தவரையில் எழுதியிருக்கிறோம். அத்துடன் 2019 சிந்தனையாளன் பொங்கல் மலரின் தலையங்கத்தில் கட்டுரை “இந்தி அலுவல் மொழி என்பதை  இன்றேனும் எதிர்க்க வேண்டாமா?” என்பதையும் படியுங்கள்.

நாம் தனித் தமிழ்நாடு பிரிக்க முடியவில்லையென் றாலும், இந்தியாவை மொழிவழி மாநிலங்கள் ஒன்றி ணைந்த கூட்டாட்சி இந்தியாவாக மாற்றி அமைத்தா லொழிய, இத்தலையங்கத்தில் சொல்லப்பட்டுள்ள கேடுகள் நீங்கமாட்டா.

இந்தி, எல்லா வகைகளிலும் பயன்பாட்டில் வர, அரசமைப்புச் சட்டத்தில் என்ன பாதுகாப்பு இருக்கிறது என்பதை இத்தலையங்கத்தில் எழுதி இருக்கிறோம்.

அத்துடன், இத்தலையங்கத்தை அடுத்து வெளியிடப் பட்டுள்ள, “சிந்தனையாளன் 2019 பொங்கல் மலர் தலையங்கக் கட்டுரையையும்” முதுவதுமாகப் படியுங்கள்.

Pin It