ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டு

                இந்தியாவின் உச்சத்தில் ஏறிக் கொண்டு

சாமான்ய மக்கட்கே கொஞ்ச மேனும்

                சரியான மதிப்பேதும் தருகின் றாரா?

சீமான்போல் உலகத்தைச் சுற்றிக் கொண்டு

                சீரழித்து இந்தியாவைக் கெடுத்து கொண்டு

கோமான்போல் அதிபரென நினைத்துக் கொண்டு

                குரங்கைப்போல் விளையாட்டு காட்டு கின்றார்!

அடங்காத மதவெறிதான் சாதிச் சண்டை

                அளவின்றி வடக்கேதான் நடத்திக் கொண்டு

மடமைதரும் மந்திரங்கள் சொல்லிக் கொண்டு

                மக்களையே மேலுந்தான் அழித்துக் கொண்டு

அடங்காத பார்ப்பனியம் சூழ்ந்து கொண்டு

                அழிக்கிறதே வடவர்களை! அய்யோ பாவம்!

வடக்கினிலே ஒருபெரியார் பிறக்க வில்லை

                வந்ததுவே அதனாலே பெரிய தொல்லை!

இனத்தைத்தான் அழிக்கத்தான் வேண்டும் என்றால்

                இனம்பேசும் மொழியைத்தான் அழித்தால் போதும்

இனமெல்லாம் அதுவாக அழிந்து போகும்

                இதையறிந்தே இந்தியினை நுழைத்துக் கொண்டு

பனங்காட்டு நரிபோல கூச்சல் போட்டு

                படிப்பினிலே “நீட்”டென்று நுழைத்துக் கொண்டு

குணங்கெட்ட மோடிதான் ஆளு கின்றார்

                கொள்கைவழி பெரியாரியம் முழக்கம் செய்வோம்

கொடியினிலே அண்ணாவின் படத்தைப் போட்டு

                கோலோச்சும் இங்கிருப்போர் பெரியார் சொல்லி

நடிக்கின்றார்! மழைக்காக யாகம் என்று

                நாடகத்தை ஆடுகின்றார் பெரியார் தந்த

தடியெடுத்து அடித்தாலும் திருந்த மாட்டார்!

                தமிழரென சொல்லுகின்றார் அதுதான் வெட்கம்!

விடியாதே இவரெல்லாம் ஆட்சி செய்தால்

                விடியும்வரை போராடு வெற்றி காண்போம்.

Pin It