பெரியார் இன்றும் என்றும்

கழகங்கள் இல்லாத தமிழகம் என காவிகள் வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டார்கள் பெரியாரியம், திராவிடம் எல்லாம் காலாவதியாகிப் போச்சு என திராவிடக் கட்சிகளின் அரசியலை மேற்கோள்காட்டி ஆங்காங்கே பேச்சு எழுந்து கொண்டிருக்கிற இக்காலகட்டத்தில் அதெல்லாம் தவறு என காட்டியுள்ளது ஒர் நிகழ்வு.

இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் அதிக அளவில் விற்ற புத்தகம் விடியல் பதிப்பகத்தாரின் வெளியீடாக வந்துள்ளது ‘பெரியார் இன்றும் என்றும்’ என்ற பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புப் புத்தகம்.… இணையப் பயன்பாடு அதிகரித்துள்ள காலத்தில் படிக்கும் பழக்கம் குறைந்து பார்க்கும், கேட்கும் வடிவில் செய்திகளை கொண்டு போய்ச் சேர்க்கிறது பெரும்பாலான வெகுஜன பத்திரிக்கைகள்..

இப்படிப்பட்ட சூழலில் நடந்த புத்தகக் கண்காட்சியில் 2500 படிகள் விற்று முதலிடத்தை பிடித்திருக்கிறார் பெரியார். ஏ4 அளவில் நல்ல கட்டமைப்புடன் உருவாக்கப்பட்ட புத்தகம் இளைய தலைமுறையினரிடம் பெரியாரைப் பெருமளவில் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது..

திருப்பூர் புத்தகக் கண்காட்சிக்கு பிப்ரவரி 9 ம் தேதி போனபோது விடியல் ஸ்டாலில் தோழர் இராமச்சந்திரன் அவர்கள் சொன்னார். இதுவரை இங்கு 85 படிகள் ( 2ம் பதிப்பு) இந்நூல் விற்பனை ஆகி உள்ளது. பெரியாரியல் தோழர்களுக்கு இது புதிய செய்தி இல்லை. அதனால் சென்னையில் இளைஞர்கள் மத்தியிலேயே இந்நூலை அதிகம் விற்பனை செய்தோம் என்றார்.

காவி இருள் சூழ்ந்திருக்கிற இந்நேரத்தில் தமிழக இளைஞர்களுக்கு பெரியார் என்ற விடியல் தேவை என்பதை உணர்ந்து இப் பணியை செய்திருக்கிற விடியல் பதிப்பகத்தாருக்கு வாழ்த்துகள்.…

ரூ. 500 மதிப்புள்ள இந்நூல் ரூ. 400 க்குக் கிடைக்கிறது. நூல் பெற நீங்கள் செய்ய வேண்டியது 9789457941, 9443468758, 0422- 2576772 இந்த எண்களுக்கு அழைப்பது மட்டுமே.

ops modi 400மிக்சரும் தயிர்சோறும்…

வீட்டில் வெறும் சோறும் தயிரும் மட்டும் இருக்கும் ஒரு மதிய வேளையில் கடுப்பில் தின்று கொண்டிருக்கும் போது வந்து விட்டார் கலைக் குழு நாரயணன்.… அடடே .சாப்பிடுவதில கூட அரசியல் என்றார் தட்டை பார்த்தபடி.. ஏற்கனவே சோறும் தயிரும் இருக்கிற கடுப்பில் மிக்சர் வைச்சு தின்னுட்டு இருக்கிகேன். இதுல நீங்க வேற கிண்ட வேண்டாம் என்றேன். உங்க தட்டுல இருக்குங்க தமிழக அரசியல் என்றார்.

எனக்கு உங்க அளவுக்கு அரசியல் அறிவு இல்லை. தெளிவாச் சொல்லுங்க என்றேன்.…நீங்க என்ன சாப்பிடுறீங்களோ...அதுதாங்க இன்னிக்கு சூழல், அதுல பாருங்க மக்கள் சைடிஷ்சைப் பார்த்த அளவுக்கு மெயின் டிஷ்சைப் பார்க்கலைங்கறதுதான் இங்கே பிரச்சனை.

என் தட்டின் வழியே தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தாங்கள் சொல்ல வருவதுதான் என்னவோ சொல்லுங்க இல்லை என்னைச் சாப்பிட உடுங்க என்றேன்.

பன்னீர்செல்வம் மிக்சர் சாப்பிடுறாரு, மிக்சர் சாப்பிடுறாரு அப்படின்னு சொன்னீங்களே... அந்த மிக்சர் தயிர் சோத்துக்கு தொட்டுக்கத்தான் அப்படிங்கறது புரியலையே என் தமிழ்ச்சமூகமே...… என்றபடி ஒரு குத்து மிக்சரை அள்ளிப் போட்டபடி கிளம்பி விட்டார்.…புறாவுக்குப் போரா? அக்கப் போராக அல்லவா உள்ளது?

என்னது நீங்க எம்.எல்.வா….

கூவத்தூரில் சொகுசுப் பேருந்தில் இந்நாள் எம்.எல்.ஏ க்கள் பவனி வரும் இந்த வேளையில்… அரசு விரைவு??!! பேருந்திலிருந்து பஸ் பாஸ் சொல்லாது என்ற காரணத்திற்காக இறக்கி விடப்பட்டிருக்கிறார் திண்டுக்கல் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தோழர்.பால பாரதி அவர்கள்.. தோழர்கள் விரைந்து சென்று புகார் செய்து உள்ளார்கள்..

இப்போது என் நினைவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கோவை சூலூர் பாவேந்தர் பேரவையினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு தோழர் பாலபாரதி அவர்களை அழைத்து இருந்தார்கள் அப்போது அவர் திண்டுக்கல் சட்ட மன்ற உறுப்பினர்.

பேருந்தில் தான் வந்திருந்தார் திண்டுக்கல்லிருந்து. நிகழ்வுக்கு வந்ததற்காக தோழர்கள் வழிச்செலவுக்கு கொடுத்த பணத்தை… கவரில் இருந்ததை அப்படியே வாங்கி சென்றுவிட்டேன் 5000 ரூபாய் இருக்கிறது. வழிச்செலவுக்கு எனக்கு இவ்வளவு ஆகாது. உங்கள் வங்கிக் கணக்கு எண் தாருங்கள் திருப்பிப் பணத்தை அனுப்பி விடுகிறேன் என்றாராம்.

அனுப்ப வேண்டாம் தொகை அதிகமா இருந்தால் எங்கள் சார்பில் உங்களுக்கான புத்தகங்களை வாங்கிக் கொள்ளுங்கள் என சொல்லி விட்டர்கள் பேரவை நண்பர்கள்.…ஆனாலும் நாம் அந்த நடத்துனரைச் தவறு சொல்ல முடியாது.. வார்டு கவுன்சிலர்களே ‘ஆடி’ காரில் வலம் வரும் காலத்தில் சட்ட மன்ற உறுப்பினர் அட்டையை நீட்டிய பின் மயக்கம் வராமல் இருந்ததே பெரிய மன உறுதி….

மணியாட்டப் போன மாமக்கள்…

என்ன தான் இருந்தாலும் மோகன் பகவத் இப்படிச் சொல்லி இருக்க கூடாது.. இந்தியாவில் வாழுகிற கிறிஸ்துவர்கள், இசுலாமியர்கள் அனைவரும் இந்துக்களே என்றிருக்கிறார்.…

இவர் இப்படிச் சொன்னது மயிலாப்பூரில் நிறையக் குடும்பங்கள் ஆடிப்போய் விட்டன. இருக்காத பின்ன.. ஏற்கனவே டிரம்ப்ட் போடுகிற போட்டில் இருந்தே மீண்டு வரலை. அதுக்குள்ள இவரு வேற இப்படி ஒரு குண்டை தூக்கி போட்டால்...

போன வருஷம் மடியில் மண் உருண்டையைக் கட்டிண்டு வாஷிங்டன் விநாயகர் கோவிலுக்கு மணியாட்டப் போன மாமா, அப்புறம் நாலு மாசத்துக்கு முன்னாடி ஐ.ஐ.டியில் படிப்ப முடிச்சுண்டு கையோட விசாலம் மாமி பொண்னை கல்யாணம் பண்ணின்டு கம்ப்யூட்டர் வேலைக்கு அமேரிக்காவுக்குப் போன பார்த்தா இவா கதி?…

மாமா பகவத் சொன்னது போலவே டிரம்ப்ட்டும் அமெரிக்காவில் வாழ்ற எல்லா இந்தியர்களும் கிறித்துவர்கள் தான்னு சொல்லிட்டா.... அதுக்குக்கூட அம்பிகள் அனுசரிச்சுக்கலாம். இந்தியாவுக்கே திருப்பி அனுப்பிட்டா என்ன செய்யறது அப்படிங்கறது தான் ஆத்துல கோலம் போட்டுண்டிருக்க விசாலம் மாமியோட கவலை.. இயேசப்ப்ப்ப்ப்ப்பா..

veeramani 340கொள்கையில் நிமிர்ந்த குனியமுத்தூர்….

பிப்ரவரி 11 ம் தேதி சனிக்கிழமை தோழர் பெரியார்செல்வத்து குனியமுத்தூர் பொதுக் கூட்டத்தில் திருமணம் கண்டிப்பா வந்துடுங்க என்றார் கோபியிலிருந்து மாமா குணசேகரன்.. சரி போகலாம் என குடும்பத்தோரு கிளம்பியாச்சு..

பெரியார் செல்வமும், நதியாவும் கட்டிடப்பொறியாளர்கள். 2015 ம் ஆண்டு பிப்ரவரியில் கருந்திணை சார்பில் திண்டுக்கல்லில் நடந்த காதலர் நாள் விழாவில் காதலர்களாகக் கலந்து கொண்டவர்கள் இன்று வாழ்விணையர்களாக அதுவும் ஆசிரியர் தலைமையில் பொதுக்கூட்டத்தில் எளிய முறையில் மகிழ்வுடன் சென்றோம் கூட்டத்திற்கு.…

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி தலைமையில் கோவை மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டு மிகச்சிறப்பாக நடைபெற்றது பொதுக்கூட்டமும், கருத்தரங்கமும்.. புதிய கல்வி கொள்கை, நீட் தேர்வு என காவி அரசின் தமிழர் விரோதப் போக்குகளைச் சுட்டிக் காட்டினர்கள் பேச்சாளர்கள்..

ஆசிரியர் வருகைக்கு பின் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. மணமக்கள் இருவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மணமகனின் பெற்றோருக்கே தான் திருமணம் செய்து வைத்த நிகழ்வை, நினைவு கூர்ந்தார் ஆசிரியர் அவர்கள்.…

கோவை குனியமுத்தூர் பகுதி பெரியார் காலத்திலிருந்து அதிக அளவில் தோழர்களைக் கொண்ட பகுதியாகத் திகழ்ந்து வருகிறது. இந்தக் கூட்டம் நடக்க அனுமதி கேட்ட போது காவல் துறை அனுமதி மறுத்ததையும், அவர்களுக்கு குனியமுத்தூர் பகுதியின் திராவிடர் கழகப் பங்களிப்பைப் பற்றி விளக்கும் விதமாக, அப்பகுதியில் பெரியாரும், நடிகவேள் எம்.ஆர்.இராதாவும் பங்கெடுத்த நிகழ்வுகளின் கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள் அடங்கிய பெரிய தட்டியைச் சுட்டிக்காட்டி ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.

அப்போது தான் நடந்தது அந்த நிகழ்வு. இந்தத் தலைமுறை இளைஞர்களுக்கு அதிகம் அறியப்படாத நிகழ்வு. பொள்ளாச்சி கொள்ளுப்பாளையம் தோழர்கள் முத்து - வீரமணி இணையர்கள் மேடைக்கு வந்தார்கள். தோழர் வீரமணி அவர்கள் தான் கட்டியிருந்த இந்து மதத்தின் இழிவான பெண்ணடிமை தனத்தின் அடையாளமான தாலியை அறுத்து ஏறிந்தார்.…

யாருடைய கட்டாயமும் இல்லாமல் தானே உணர்ந்து தாலியை அகற்றியதாக தோழர் வீரமணி அவர்கள் மேடையில் அறிவித்தார்.…பொதுக்கூட்ட வடிவங்கள் பழமையாகிப் போன இணைய கால கட்டத்தில் ஒரு சுயமரியாதை திருமணம். ஒரு தாலி அகற்றுதல் என மிகச்சிறப்பாக இருந்தது இந்தப் பொதுக்கூட்டம். பெயரில் குனியமுத்தூர். கொள்கையில் நிமிர்த்து நின்றது.

Pin It