ஒரு தேசிய இனத்தின் பண்பாடு, மொழி, கலாச் சாரம், உணவுப் பழக்கவழக்கம் இவற்றை அழித்தால் போதும், அந்தத் தேசிய இனம் அழிந்து போகும். தமிழ்த்தேசிய இனத்தின் மொழி அழிக்கப்படுவது எப்படி?
1. பிறமொழி ஆதிக்கம் :
இந்தி, சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் பெற்றோர்கள் விரும்பாமலேயே மறைமுகமாக இந்தித் திணிக்கப்படுகிறது. சமசுகிருதம் திணித்தல் (இந்தியா முழுவதிலும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 14135 பெயர்கள் மட்டுமே) பெயரால், வாஸ்து என்ற மிகப்பெரிய சமசுகிருத மொழி ஊடுருவல் நடைபெறு கிறது. தமிழ்க் குடும்பங்களில் பெயரால், தமிழ்க் குடும்பங் களில் தமிழ்ப்பெயரை மாற்றுதல், அவன் வணங்கும் தெய் வங்களின் பெயர்களை மாற்றுதல், அவன் பண்டிகையின் தன்மைகளை மாற்றுதல்.
2. கலாச்சார அழிப்பு :
உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றம் அடையச் செய்தல், தமிழக உணவகங்களில் இட்லி கிடைக்கிறதோ இல்லையோ, பரோட்டா, பீட்சா, பர்க்கர் கிடைக்கும். நம் முன்னோர்கள் மசாலா உணவுகளை இரவில் உண்ண மாட்டார்கள். அல்லது தவிர்த்து வந்தார்கள். இப்போது அதிக மசாலா பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. உடையில் மாற்றம் - வேட்டி சென்றது ஜீன்ஸ் வந்தது. (ஒரு ஜீன்ஸ் பேன்ட் உருவாக்க 10,999 லிட்டர் தண்ணீர் தேவைப்படு கிறது). சுடிதார் பள்ளியின் வாயிலாகத் திணிக்கப்படுகிறது. அதையே பொதுமக்களும் பின்பற்றுகிறார்கள். பாவாடையும் தாவணியும் ஒழிந்தது. சேலை, கிராமங்களில்கூட மறைந்து போகும் நிலையில் உள்ளது. அவன் வணங்கும் முருகன்-சுப்பிரமணியன் ஆனான். அவன் வணங்கும் அண்ணா மலைiயார்-ஸ்ரீஅருணாச்சல ஈஸ்வரர் ஆனார். அவன் வணங்கும் பிள்ளையார் விக்னேஸ்வரன் ஆனான். இப்படி பல தெய்வங்களின் பெயர்கள் மாற்றப்பட்டன.
அவன் தமிழ்மொழியின்மேல் உள்ள பற்றால் இனிய தமிழில் செந்தமிழன், செந்தமிழ்ச்செல்வி, இப்படி தமிழ்ப் பெயர்களே வைத்து அழகுபார்த்தான். ஆனால் இன்றோ அவன் பெயரன் பெயர்த்திகளுக்கு பெயர் வைக்க வந்துவிட்டது, வாஸ்து. அதனால் ரமேஷ், சுரேஷ், ஷாலினி, பிரிதிஷா, மோனிஷா இப்படி பொருளற்ற, விளங்காத பெயர்களை வைத்திருக்கிறார்கள். வாஸ்துவைப் பற்றி சொல்லவரும் ஒரு நபர் வாஸ்துவைச் சொல்லி அதைப் படித்தவர், படிக்காதவர் கள் மற்றும் பாமர மக்களை நம்பவைத்து வீட்டையே இடித்து நாசம் செய்துவிடுகிறார். அவன் வாஸ்து சொல்லுவதால் தான் வேண்டுமானாலும் செல்வந்தராகலாம்; ஆனால் அதைப் பின்பற்றுவோர் ஓட்டாண்டியாகத்தான் போகிறார்கள். அது மட்டுமா, அவன் அணியும் உடையின் நிறம், உண்ணும் உணவு, குடிக்கும் பானம், வைக்கும் பொட்டு, எந்தப் பக்கம் வேலைக்குப் போக வேண்டும், அதற்கு மாற்று இவை அனைத்தும் வாஸ்துவில் அடக்கம். உலகிற்கே வழிகாட்டி யாக வீடுகட்டி வாழ்ந்த இனம் தமிழினம் (சிந்துவெளி, அரப்பா நாகரிகம், மதுரை அருகே கீழடி நாகரிகம்). இவனுக்கு வாஸ்து வழிகாட்டுகிறது.
கிராமங்களில் மண்பாண்டத்தில் சமைத்துச் சுவை யுடனும், கெடாமலும் நோய்த்தடுப்பும் உள்ள மண்பாண்டத்தை மறந்து, அலுமினிய, எவர்சில்வர் பாத்திரங்களில் உணவைச் சமைத்து உடலைக் கெடுத்துக் கொள்கின்றனர். மேலை நாட்டு மோகத்தால் அடிமை விளையாட்டான கிரிக்கெட்டைப் பிடித்துக் கொண்டான். நம் தமிழ்நாட்டுப் பாரம்பரிய விளையாட்டுகள் கிட்டிபுல், பம்பரம், சடுகுடு, சிலம்பம், வாள்சண்டை மற்ற தற்காப்புப் பயிற்சிகள் போன்ற வையும் சல்லிக்கட்டு, எருது பிடித்தல், எருதாட்டம் போன்ற வையும் அழியும் தருவாயில், சட்டுக்கட்டு மட்டும் மீட்டுரு வாக்கம் பெற இலட்சக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் போராடி வருகின்றனர்.
இயற்கையாக விளைவித்த அல்லது விளைந்த உணவுப் பொருள்களை மண்பாண்டத்தில் இட்டு சமைக்கும் பொழுது அத்தெரு முழுக்க மணம் வீசும். இன்று கோழிக்குழம்பு கூட வாசம் வருவதில்லை. ஏனென்றால், இன்று வேதிப்பொரு ளால் வளர்க்கப்பட்ட இனம் சிறுவணிகரை அழித்து, பெருவணிகரையும் அழித்து பன்னாட்டு வணிகம், சிறு விவசாயத்தை அழித்து, பெரு விவசாயத்தையும் அழித்துக் கார்ப்பரேட் நிறுவனங்கள் வந்துவிட்டன. சிறு, குறு விவசாயிகள் நிலத்தை இழந்து கார்ப்பரேட் நிறுவனத்திடம் வேலை கேட்டுப் படையெடுக்கின்றனர். இதெல்லாம் எதனால்? கிராமத் தொழில் அழிக்கப்பட்டதும், அவன் செய்த இயற்கை விவசாயம் அழிந்ததும், கிராமத் தொழில்கள் அழிந்ததும், கிராம வணிகம் அழிந்ததுமே ஆகும்.
விவசாயி இயற்கையை விட்டதால், விவசாயம் அழிந்தது. சிறுவணிகம் கிராம மக்களிடம் உள்ள பொருள்களைச் சந்தை விலைக்கு வாங்கி விற்காமல் அப்பொருள்கள் நகரத்திற்குச் சென்று மீண்டும் கிராமங்களுக்கே வருகின்றன. அதை வாங்கி விற்பதால் அந்தப் பொருளின் தன்மை மாறுகிறது. விவசாயி நலிவடைகிறான். கிராமத்தான் என்று ஏமாற்றாமல் “வாங்குவதும் மிகைகொளாது விற்பதும் குறைகொளாது” என்று பண்டைய கால வணிகர்கள் வாழ்வைப் பின்பற்றி நடந்தால் வீடும் நாடும் செழிக்கும்; கிராமப் பொருளாதாரம் மேம்படும்; நகரமும் வாழும்; மக்களும் மகிழ்ச்சி அடைவர். இல்லையேல் இனி மெல்லச் சாவோம்.