முக்காலமும் உணர்ந்து

எக்காலமும் உயர்ந்து

எழுத்தாளுமையில் சிறந்து

கருத்தாளுமையில் தெளிந்து

காவியத் திருக்குறளை அளித்த நம்

காவிய நாயகன் வள்ளுவருக்கு

காவி உடை அணிவித்து

கறைப்படுத்தவும்

களவாடவும் முயல்கிறது

காவி உடைக் கயவர் கூட்டம்!

 

காவிகளின் சதிச்செயலை

கண்டு கொண்டிராமல்

நாவில் சூடு வைத்து அந்தப்

பாவிகளுக்குச் சொல்லுவோம்

வள்ளுவர் எங்களின்

வரலாறு அடையாளம் என்றும்

வையகமெங்கும் பாயும் முதல்

பகுத்தறிவுப் பெரியார்(று) என்றும்

கருப்பு உடைத் தமிழர் கூட்டம்!

Pin It