கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பொருளாதார ஆய்வு நூல்களில் உற்பத்திக்கான நான்கு காரணிகள் சுட்டப்படுகின்றன. நிலம், உழைப்பு, மூலதனம், கூட்டமைப்பு ஆகியன முதலாளித்துவ அல்லது சமதர்மப் பொருளாதார அமைப்பாக இருந்தாலும் இந்தக் காரணிகள் செயல்பட்டுக்கொண்டு தான் உள்ளன.  இத்தகைய காரணிகளைப் பெரும் பான்மையான மக்களின் நன்மைகளை ஒட்டி, ஓர் அரசு மேலாண்மை செய்து, உற்பத்தியைப் பெருக்கலாம்; பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உருவாகாமல் தடுக்கலாம்.

மேற்கூறப்பட்ட நான்கு காரணிகளில் நிலம் மட்டும் உலகம் தோன்றி, மக்கள் உழைப்பை நாடி, பொருள் உற்பத்தியில் ஈடுபட்ட காலத்திலிருந்து அளவில் அதேநிலையில்தான் உள்ளது. உழைப்பு, மூலதனம், கட்டமைப்பு  ஆகிய காரணிகள் உற்பத்திப் பெருக்கத்திற்கு ஏற்ப மாறி மாறி அமைந்துள்ளன. தொழிற் புரட்சிக்குப் பிறகு தொழில்நுட்பப் புரட்சியால், தகவல் தொலைத்தொடர்பு வளர்ச்சியால், தொழில்துறை, பணித்துறைகளின் வளர்ச்சி, பெருமளவில் மாற்றங்களை உருவாக்கியிருந்தாலும் நிலம் சார்ந்த உழவுத் தொழில்தான் உலக மக்கள் அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு அளிக்கிறது.

இன்றளவும்கூட,  தேசிய வருமானத்தைக் கணக்கிடும்போது வேளாண்மைத் துறை  உற்பத்தியை  முதன்மை நிலையிலும், தொழில் துறை உற்பத்தியை இரண்டாம் நிலையிலும், பணித்துறை உற்பத்தியை மூன்றாம் நிலையிலும் வைத்து நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியைக் கணக் கிடுகின்றனர். வரலாற்று அறிஞர்களின் பார்வையில் இந்திய வரலாற்றினை ஆய்வு செய்தால் நிலம் கடந்த 2500 ஆண்டுகளாக அரசர்கள் கையிலும், பின்பு ஆதிக்கச் சக்திகளின் பிடியிலும்தான் இருந்து வந்துள்ளது. 

வரலாற்று  ஆசிரியர்களின் கருத்துப்படி பண்டையச் சமுதாயத்தில்  முடியாட்சி முறை   தோன்றிய போது பெரும்பான்மையான  நிலம்  அரசர்கள் கையிலும் மற்றும் அரசர்களுக்கும் அரசுக்கும் உதவியாக இருந்த உயர் சமுதாயப் பிரிவினரிடம்தான் இருந்தது. இந்திய வரலாற்றை மிகச் சிறப்பான முறையில் ஆய்வு செய்த ஆய்வாளர்கள் கே.அன்டொனொவா போன்கார்டு, லெவின் கோடோவஸ்கி ஆகியோர் ஆய்வின்படி  அரசு நிலங்கள், சமுதாய நிலங்கள், தனியார் நிலங்கள் என மூன்று பிரிவுகளாக நிலங்கள்  இருந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். 

ஊரக சமுதாய அமைப்பில்  ஊர்ப்புறங்களில் வாழ்ந்த வேளாண் தொழிலாளர்கள், கைவினைஞர் கள் எல்லோரும் இணைந்து உழைப்பை அளித்து  உற்பத்தியில் ஈடுபட்டனர். இந்த ஊரக சமுதாய நிலங்களிலும்  குத்தகைக்கு எடுத்து மக்கள் வேளாண் மையை மேற்கொண்டனர்.

அசோகர் காலம் முதல் ஒளரங்கசீப் காலம்வரை நிலவுடைமையாளர்களும் ஆட்சியாளர்களும் வேளாண் தொழிலாளர்களைக் கொடுமைப்படுத்தி உழைப்பை உறிஞ்சி நில வரு வாயில் பெரும் பங்கினை வரியாகவும் பெற்றுக் கொண்டு வளமான வாழ்க்கையை வாழ்ந்தனர். ஓளரங்கசீப் வீழ்ச்சிக்குப் பிறகு நிலவுடைமையாளர் களின் கொடுமை பெருகிற்று. முகலாயர்களின் பேராதிக்கம் முகலாயப் போர்ப் படைத் தளபதிகளால் உடைக்கப்பட்டது.

முகலாயப் போர்ப் படைத் தலைவர்களுடைய செல்வாக்கு மராட்டியர்களால் உடைக்கப்பட்டது. மராட்டியர்களின் அரசியல் அதிகாரம் ஆப்கன் நாட்டி னரால் உடைக்கப்பட்டது. இவ்வாறு அரசியல் அதி காரத்தைக் கைப்பற்ற நினைத்த எல்லோரும் ஒரு வருக்கு ஒருவர் போராடிக் கொண்டிருந்தபோது, இங்கிலாந்து இந்தியப் பகுதிக்குள் விரைந்தது. இவர்கள் அனைவரையும் அடக்கியது. (The paramount power of the Great Mogul was broken by the Mogul viceroys. The power of the viceroys was broken by the Marathas. The power of the Marathas was broken by the Afgans, and while were struggling against all, the Briton rushed in and was enabled to subdue them all. (Ref: Karl Marx and Fredrick Engels On the National and Colonial Questions- Selected Writings-edited by Aijaz Ahmed, 2001, p.70)  கிழக்கிந்தியக் குழுமங்களின் ஆட்சியிலும்  புதுவிதமான சுரண்டல் முறை தொடங்கியது. ராபர்ட் கிளைவ், வாரன் ஹே°டிங்சு ஆகியோர் மீது இங்கி லாந்தில் நடந்த விசாரணையின்போது சில உண்மைகள் வெளிப்பட்டன கிழக்கிந்தியக் குழுமக் காலத்தில் தேநீர், போதைப்பொருட்கள், வெற்றிலை மற்றும் பலவகை வேளாண் பொருட்கள் வழியாகப் பல கோடி ரூபாய்களைக் கொள்ளை அடித்தார்கள்.

நிலச்சட்டங்கள் - காரல் மார்க்சின் பார்வை

ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் குழுமம், அனை வருக்கும் தெரிந்தபடி, அரசியல் அதிகாரத்தை இந்தியா வில் பெற்றதோடு  தேயிலை ஏகபோக வணிகத்தையும் சீன நாட்டுப் பொது வணிகத்தையும் சரக்குகளை அய்ரோப்பாவிற்குக் கப்பலில் ஏற்றிச் செல்வதில் ஏகபோகத்தையும் பெற்றது. ஆனால் தீவுகளிடையே  கரையோர வாணிகத்தையும்  இந்தியாவின் உள்நாட்டு வாணிகத்தையும் கிழக்கிந்திய வணிகக் குழுமத்தின்  உயர்மட்ட அலுவலர்கள்தான் ஏகபோகமாக வைத் திருந்தனர். உப்பு, அபினி, வெற்றிலை மற்றும் சில சரக்குகள் தான் ஏகபோக வாணிகம் செல்வத்தின் வற்றாத சுரங்கங்கள் ஆகும்.

கிழக்கிந்திய வணிகக் குழுமத்தின் அலுவலர்களே விலைகளைத் தீர்மானித்து இந்தியர்களின் செல்வங்களைக் கொள்ளையடித்தனர். ஆளுநர் பெருந்தலைவன்; (Governor-General) தானும் தனிப்பட்ட வணிகத்தில் பங்கு கொண்டான். ஒரு நாளிலேயே  மழைக் காளான்கள் போல மாபெரும் செல்வங்கள் வணிகக் குழுமத்தினரிடம் குவிந்தன. ஒரு ஷில்லிங்கும் முன்பணமாக முதலீடு செய்யாம லேயே முதல் மூலதனக் குவிப்பு நடைபெற்றது. இத்தகைய தகவல்கள் வாரன் ஹே°டிங்சு  ஊழல் விசாரணை வழக்கில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. (க.ரா.ஜமதக்னி மூலதனம் தொகுதி 1 பக்.1129-30)

சான்றாக, போதைப் பொருட்கள் வணிகம் தொடர்பாக ஓர் ஒப்பந்தம் சுலைவன் என்பவருக்கு அளிக்கப்படுகிறது. சுலைவன் தான் பெற்ற ஒப்பந்தத்தைத் திரு.பின் என்பவருக்கு நாற்பதா யிரம் பவுண்டுக்கு விற்பனை செய்கிறார். அதே நாளில் திரு.பின் மற்றொருவருக்கு அறுபதாயிரம் பவுண்டுக்கு விற்பனை செய்கிறார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட ஒரு பட்டியலில் கிழக்கிந்தியக் குழுமமும் அதன் பணியாளர்களும் 1757 முதல் 1766 வரை இந்தியர்களிடமிருந்து பரிசாக, தானமாகப்  பெற்ற தொகை மட்டும் 6 இலட்சம் பவுண்டுகளாகும். இவ்வாறான செயல்களால்  1769 முதல்  1770 வரை  இந்தியா வில்  வறட்சியை உருவாக்கினார்கள். எவ்வாறெனில் விளைவிக்கப்பட்ட அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்து அவற்றை விற்காமல் பதுக்கி வைத்து, பிறகு மிக அதிக விலைக்கு விற்றனர் என காரல் மார்க்சு கூறுகிறார் (மூலதனம்-முதல் தொகுதி பக்.1129-30)

நிலச்சட்டம் - எங்கல்சின் கருத்து

இங்கிலாந்து, அயர்லாந்திலும் புதுப்புது நிலம் கையகப்படுத்தும் சட்டங்களை இயற்றித் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டியது. அயர்லாந்தில் நடந்த நிகழ்வை எங்கல்சு சுட்டிக்காட்டுகிறார். அயர்லாந்தில் கொண்டுவரப்பட்ட நிலச்சட்டங்கள் 1870, 1881 ஆகியன அயர்லாந்து முதலாளிகளையும் நில முதலைகளையும் உயர்தர வர்க்க கத்தோலிக்க குருமார்களையும் மகிழ்விக்கத்தான் இச்சட்டங்கள் இயற்றப்பட்டன என எங்கல்சு குறிப்பிடுகிறார்; (The English sponsored reforms in Ireland, particularly the Land Act of 1870 and 1881, they viewed as attempts to appease the Irish bourgeoisie landowners and the upper crust of the Catholic clergy and thereby split the national movement (Karl Marx, Frederick Engels – On the National and Colonial Questions: Selected Writings, ed. Aijaz Ahmad p.15). வேளாண் துறையில் உற்பத் திச் செய்யப்பட்ட பல்வேறு உற்பத்திப் பொருட்களைப் பரிமாற்றம் செய்ய முடியாத நிலையில் உற்பத்தி சக்திகள் இந்தியாவில் முடக்கப்பட்டன.

இயற்கை அளித்த பெரும் செல்வத்திற்கிடையில் சமூக அவல நிலை இருப்பது இந்தியாவைத் தவிர வேறெங்குமில்லை. இங்கிலாந்து நாடாளுமன்றக் குழுவின்  முன் இது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது (Nowhere, more than in India, do we meet with social destitution in the mist of natural plenty, for want of the means of exchange. It was proved before a committee of the British House of Commons, which sat in 1848 that when grain was selling from 6s to 8s. a quarter at Khandesh, it was sold at 64s to 70s at Pune, where the people were dying i n the streets of famine, without the possibilities of gaining supplies from Khandesh, because the clay roads were impracticable (Karl Marx, Frederick Engels – On the National and Colonial Questions: Selected Writings, ed. Aijaz Ahmad p.15,pp.71-72) 1894ஆம் ஆண்டிற்கு முன்பு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டங்கள்

ஆனால் 1824இல்தான் முதன் முதலாகக் கிழக்கிந் தியக் குழுமம் வங்கப் பகுதிகளில்  நிலம் கையகப் படுத்தும் சட்டத்தைக் கொண்டு வந்தது. மீண்டும் 1850இல் தொடர்வண்டியைப் பொதுப் பணி என்று குறிப்பிட்டு அந்தச் சட்டத்தை விரிவுப்படுத்தியது. இதே போன்று 1839 மும்பையிலும், 1852இல் சென்னை மாகாணத்திலும், 1857இல் பிரித்தானிய அரசு நேரடி பார்வையில் இந்திய நிர்வாகம் வந்தபோது 1861, 1863, 1870ஆம் ஆண்டுகளில் பல சட்டங்களைத் திருத்தியது. இதன் தொடர்ச்சிதான் 1894 நிலம் கையகப் படுத்தும் சட்டமாகும்.  ஐதராபாத், மைசூர், திருவாங்கூர் ஆகிய பகுதிகளில் மன்னர் ஆட்சி நடைபெற்றது. இம்மன்னர்களின் ஒப்புதலைப் பெறாத காரணத்தினால் இப்பகுதிகளில் 1894சட்டம் பயன்படுத்தப்படவில்லை.

1894இல் நில கையகப்படுத்தும் சட்டம் கொண்டு வந்த போது பிரித்தானிய ஆட்சியின் உயர் அலுவலர் பிளி°  இச்சட்டம் தனியார் துறையின் ஊக வணிகத்திற்குப் பயன்படுத்தப்படாது. ஆனால் நிறுவனங்களுக்கு மட்டுமே நிலம் கையகப்படுத்தப்படும். உள்ளாட்சி அமைப்புகளை நெருக்கடிகளுக்கு உள்ளாக்கக் கூடாது.  மேலும் அரசுத் தனது சட்ட நடவடிக்கையால் தனியார் நிறுவனங்களுக்கு முகவர்களாகச் செயல்படும் நோக்கம் இல்லவே இல்லை. (The Bill will not be used in furtherance of private speculation and that the local governments should not be subject to pressure, which it might possibly sometimes be difficult to resist, on behalf of enterprises in which the public have no direct interest …. He stated that it was not the intention of the legislature that the Government should be made a property agent for companies to acquire land. This is 1894 speech by H.W.Bliss, (Legislating for Justice – The making of the 2013 Land Acquisition Law, Jairam Ramesh and Muhammad Ali Khan, p.220, 2015).  பிரித்தானிய ஆட்சி இந்திய வளங்களை எடுத்துச் சென்றது அவர்களின் பொருளாதார இலக்காக இருந் தாலும் எந்தத் தனியார் நிறுவனங்களுக்கும் முகவர் களாக இயங்க அவர்கள் முன் வரவில்லை.

ஆனால் மோடி அரசு, பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கு நிலம் கையகப்படுத்துவதில், முதல் தரத் தரகராகச் செயல்படத் துடிக்கிறது. 1894இல்  ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பர்மா, வங்கதேசம் இலங்கை  ஆகிய இன்றைய தனித்தனி நாடுகள் அன்றைய இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ளடங்கி யிருந்தன. 1881ன் மக்கள் தொகைக் கணக்கெடுப் பின்படி, இந்தியத் துணைக்கண்டத்தில் 25 கோடியே 80 இலட்சம் மக்களும், 1891இல் 28 கோடியே 60 இலட்சம் மக்களும் இருந்தனர். இந்திய முதலாளிகள் என்று சொல்லப்படுகிறவர்கள் ஒரு சிலர் கூட அன்று இல்லை என்பதுதான் உண்மை.

மேலும்  பிரித்தானிய ஆட்சி இந்திய முதலாளிகள் தொழில் துறையில்  முதலீடுகள் செய்வதை வரிச்சட்டங்கள் உட்பட பலச் சட்டங்கள் வழியாகக்  கட்டுப்படுத்தியிருந்தது. பிரித் தானிய ஆட்சியில் இந்தியாவில் வறுமையும்பசியும் பட்டினியும் பெரும்பான்மையான மக்களை  வாட்டி வதைத்துக் கொண்டிருந்த போது மற்றொரு பக்கத்தில் நிலவுடைமையாளர்கள் வேளாண் தொழிலாளர்களை யும் ஏழை மக்களையும் சுரண்டி வாழ்ந்தனர். ஏழைகளின் உழைப்பால் விளைந்த செல்வத்தை,  பிரித்தானிய  ஆட்சியாளர்களுக்கு ஒரு பகுதியை  நில வரியாக அளித்துவிட்டு இந்திய நிலவுடைமையாளர்கள் செல்வத்தில் ஊறித்திளைத்தனர்.

இந்தியாவில் கட்டமைப்புப் பணிகள்

பிரித்தானிய அரசு பல பொதுப்பணிகளைத் தொடங்கியது. தொடர்வண்டிப் போக்குவரத்து, சாலை போக்குவரத்து, நீர்ப்பாசனத் திட்டங்கள், மின் திட் டங்கள், தொலைத்தொடர்பு திட்டங்களைத் தொடங்கி இந்தியாவின் செல்வ வளத்தை இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்றது. இந்தியப் பொருளாதாரத்தை ஆய்வு செய்த தாதாபாய்நௌரோஜி, சு.ஊ.தத்  ஆகியோர் பிரித்தானிய அரசு மேற்கொண்ட பொதுப் பணிகளை யும் அதனால் அவர்கள் பெற்ற அரசியல் பொருளாதாரப் பயன்களையும் விளக்கி நூல்களை வெளியிட்டனர். நிலத் திருத்தச் சட்டங்கள் நிலச் சீர்த்திருத்தம் என்ற பெயரில் ரயத்வாரி, மகல்வாரி, ஜமின்தாரி போன்ற ஊர்ப்புற நில அமைப்பு முறைகளை நடைமுறைப்படுத் தினர்.

முனைவர் சாரதா ராஜூவின் ஆய்வு

சென்னை மாகாணத்தில் 19ஆம் நுற்றாண்டில் நிலவி வந்த  சமூகப் பொருளாதார  நிலைமைகளையும் நில அமைப்பு முறைகளையும் வரி அமைப்பு முறை களையும் மறைந்த ஆய்வாளர் முனைவர் சாரதா ராஜு அவர்களின் நூலில்  சுட்டிக்காட்டியுள்ளார். முனைவர் சாரதா ராஜுதான் தென்னாட்டில் முதன்முதலாக முனைவர் ஆய்வுப்பட்டத்தைப் பெற்ற பார்ப்பனர் அல்லாத பெண்மணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மொகலாயப் பேரரசு வீழ்ந்த பிறகு ஏழை விவசாயிகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட  கொடுமைகள்  பிரித்தானிய அரசு பொறுப்பேற்ற பிறகு ஓரளவிற்குக் குறைந்தாலும், அதிகபட்ச நில வருவா யை வரியாக பிரித்தானிய அரசு விதித்ததால், பயிரிட்ட வேளாண் குடிமக்களுக்கு எவ்விதப்  பயனுமில்லை. நிலவரியின் பெரும் சுமையைப் விவசாயிகளே தாங்க வேண்டிய நிலை இருந்தது என்பதையும், இங்கிலாந்து  கடைப்பிடித்த தடையற்ற வணிகக் கொள்கை இந்தியச் சூழலுக்கு  எதிராக அமைந்தது என்பதையும் இந் நூலுக்கு அணிந்துரை  வழங்கிய புகழ்ப் பெற்ற பேரா சிரியர் லோகநாதன் குறிப்பிட்டுள்ளார்(Economic Conditions in the Madras Presidency 1800-1850, Dr.Sarada Raju,2013)). நகர்ப்புறத்திலிருந்து ஊர்ப் புறத்திற்கு மக்கள் செல்லுதல்

- தொடரும்.