10 வயது முசுலீம் பெண்ணை, உறவினரே கொன்று பலிகொடுத்தார்!

கர்நாடகாவில் பெங்களூரை அடுத்த ஹோச ஹள்ளி என்ற நகரின் எல்லையில், காவல் துறையி னர் உயிர்ப் பலி கொடுக்கப்பட்ட 10 வயதுள்ள ஆயிஷா என்கிற பெண்ணின் உடலைக் கைப்பற்றினர்.

இந்தப் பெண்ணைக் கொன்று பலி கொடுத்ததற் காக, பெண்ணின் சிற்றப்பா முகமது வாஸில் என்பவர் உள்ளிட்ட நான்கு பேர்களை ராம்நகர் மாவட்டக் காவல் துறையினர் கைது செய்தனர். வாஸில் உள்ளூர் மசூதி யினுடைய செயலாளராக உள்ளார். மேலும் ரதீஷுன்னிசா (38), நசீம்தாஜ் (33), ஒரு வேலையற்ற இளைஞன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

அவர்கள் நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த ஆயிஷா என்கிற பெண்ணைக் கடத்தி, 1.3.2017 இல் கொலை செய்ததாகக் குற்றஞ்சாற்றப்பட்டனர். ஆயிஷா வின் உடலை 3.3.2017 அன்று மாகதி நிலையத் தைச் சார்ந்த காவலர்கள் கைப்பற்றினர்.

எதற்காக உயிர்ப்பலி?

நசீம்தாஜ் என்கிற சூனியக்காரி, ஆலோசனை சொன்னதின் பேரில், வாசில் தன்னுடைய சகோதரன் முகமது ரஃபிக் பக்கவாத நோய்க்கு ஆளாகியிருப்ப வரை மீட்க, ஒரு குமரிப்பெண் பலிகொடுக்கப்பட வேண்டுமென்று ஆலோசனை சொன்னார். ரஃபிக் என்பவருக்குப் பேய் பிடித்திருப்பதால்தான், பக்கவாத நோய்க்கு ஆளானார் என்றும் சூனியக்காரி சொன் னாள்.

வாசில் குடியிருக்கும் பகுதியில் ஆயிஷா குடும்பமும் வாழ்கிறது. உடனே ஆயிஷாவின் நிழற்படம் ஒன்றை எடுத்து, அந்தச் சூனியக்காரிக்கு வாசில் அனுப்பினார். சூரினயக்காரி அந்தப் பெண்ணை பலிகொடுத்தால் போதும் என்று அனுமதியும் தந்தாள்.

1.3.2017 புதன் அன்று, ஆயிஷா தன் தகப்பனாரின் கடையிலிருந்து வீட்டுக்கு வந்தபோது, வழி மறித்து வாசிலும், வேலையற்ற ஒரு சிறுவனும் மறை வான இடத்துக்கு அவளைக் கடத்திக் கொண்டு போய் பிளாஸ்டிக் கயிற்றினாலும், ஒரு கைக்குட்டைத் துணியாலும் அப்பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டனர். அந்த வேலையற்ற இளைஞன்தான் ஆயிஷாவை உயிரோடு கடைசியாகப் பார்த்தவன்.

வாசில் யார் யாருக்கெல்லாம் தொலைப்பேசியில் பேசினார் என்பதைச் சாட்சியமாக வைத்து, காவலர் விசாரணை செய்தனர்.

வாசில், ஆயிஷாவை ஹோசஹள்ளியில் உள்ள ஒரு புதைகுழிக்கு (Tomb) அழைத்துச் சென்று, சில சடங்குகளைச் செய்தான்; ஆயிஷாவின் கழுத்தைக் கத்தியால் அறுத்தான்.

ஆயிஷாவின் உடலை ஒரு சாக்குப் பையில் கட்டி, சிறிது தொலைவில் வீசினான்.

மகளைக் காணோம் என்று அங்கும் இங்கும் தேடிப் பெற்றோர் அலைந்தபோது, வாசிலும் அவர்களுடன் சேர்ந்த தேடுவதுபோல் நடித்தான். பெற்றோர்கள் காவல் நிலையத்துக்குப் புகார் மனு கொடுக்கச் சென்றபோது, வாசிலும் அவர்களுடன் சென்றான்.

உண்மையில் வாசில் தான் கொலைகாரன் என்று தெரிந்தவுடன், அக்கம் பக்கத்துப் பொதுமக்கள் வாசில் வீட்டுக்குள் புகுந்து பண்டங்களை அடித்து நொறுக்கினர்.

“வாசிலைக் கைது செய்” என்று கோரிப் பொது மக்கள் சாலை மறியலும் செய்தனர். காவலர்கள் பொது மக்களை அமைதிப்படுத்தினர்; தக்க நடவடிக்கை எடுப் போம் எனப் பொது மக்களுக்கு உறுதி தந்தனர்.

இந்துக்கள் பேயை நம்புகிறார்கள்; சூனியக்காரிகள் சொல்கிறபடி சாமி சிலைகள் முன் மனித உயிரைப் பலி கொடுக்கிறார்கள்.

இஸ்லாமியர்களாக மதம் மாறிய பிறகும், இந்துக் களைப் போலவே அவர்களும் பேயை நம்புகிறார்கள்; சூனியக்காரியை நம்புகிறார்கள். அவளுடைய சம்மதத் தின் பேரில், ஏதும் அறியாத 10 அகவை ஆயிஷா என்கிற பெண்ணை ஒரு புதைகுழிக்கு முன் உயிர்ப் பலி கொடுத்துவிட்டார்கள்.

மத நம்பிக்கையும் மூடநம்பிக்கையும் சூனியமும் எல்லா மதங்களுக்கும் சொந்தம்.

Pin It