ஆங்கிலேயரின் ஆதிக்கம் கி.பி. 1818ஆம் ஆண்டில் இந்தியாவில் முழுமை அடைந்தது. பின்பு 1913இல் இயற்றப்பட்ட சட்டமான The Charter Act என்பதன் அடிப்படையில் கிருத்துவ நாட்டு மிஷனரிகளை இந்தியாவிற்குள் அனுமதிக்குமாறு கிழக்கிந்திய கம்பெனியைக் கட்டாயப்படுத்தியது. இதன் விளைவாக பெருமளவு கிருஸ்தவ மதமாற்றம் இந்தி யாவில் நிகழ ஆரம்பித்தது. இதன் விளைவாக பள்ளிகளில் பைபிள் போதிக்கப்பட்டது. சிறைச் சாலைகளில் கூட கிருஸ்துவ சமய போதனை நிகழ்த்தப்பட்டது. இந்துக் கடவுள்களை இழிவாகப் பேசும் நிலை ஏற்பட்டது. புகைவண்டி போக்கு வரத்தும், அஞ்சல்துறையும் இந்தியாவை ஒரு நிலைப்படுத்துவது போல் கிருஸ்துவ சமயத்தை வளர்க்க வலியுறுத்தப்பட்டன.
1837ஆம் ஆண்டில் நம் நாட்டில் தோன்றிய பஞ்சத்தால் இந்து மதம் சார்ந்தவர்களும், அனாதைக் குழந்தைகளும் கிருஸ்துவ மதத்திற்கு மாற்றம் செய்யப்பட்டனர். 1857ஆம் ஆண்டில் சிப்பாய்கள் பயன்படுத்தும் துப்பாக்கி ரவையில் பசு, பன்றி கொழுப்புச் சேர்த்தனர். இதனால் இந்துக்களும், முஸ்லீம்களும் கொதித்து எழுந்தனர். இதனால் சிப்பாய் கலகப் புரட்சி வெடித்தது. 1858ஆம் ஆண்டில் இந்திய அரசு கிழக் கிந்திய கம்பெனியில் இருந்து விடுவிக்கப்பட்டு பிரிட்டிஷ் அரசருக்கு மாற்றம் செய்யப்பட்டது.
1905ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இந்திய தேசிய விடுதலைப்போராட்டம் தொடர ஆரம்பித்தது. இப்போராட்டத்தின் விளைவாக 1947ஆம் ஆண்டில் இந்தியா விடுதலை பெற்றது. பதினெட்டாம் நூற்றாண்டின் முடிவுப் பகுதியில், 19ஆம் நூற்றாண்டின் மையப் பகுதியில் இந்தியாவில் கலாச்சாரக் குழப்பம் நிலவியது. இதனால் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் விளைவாக இந்தியா தாக்குண்டு இருந்தது. ஆங்கிலேயர் களின் ஆட்சிப் பொறுப்பு தகர்ந்து போனாலும் புராதன பண்பாட்டின் மூலம் ஆங்கில ஆதிக்கத் தினால் ஐரோப்பியச் சிந்தனைகள், இலட்சி யங்கள் இந்தியாவில் வேகமாகப் பரவி பாரதப் பண்பாட்டை சீரழித்தன.
ஆங்கிலப் படிப்பு மோகத்தினால் பிறப்பால் இந்தியர்களாக இருந்தும் மேனாட்டு ரசனை, நாகரீகம் இவற்றில் முழ்கினர். இதனால் நம்நாட்டு கொள்கைகள் இளைஞர்கள் வசம் இந்திய பண் பாடு இல்லாத நிலை ஏற்பட்டது. இந்த மாற்றங்கள் இந்தியர்களை ஒரு நீள உறக்கத்தில் ஆழ்த்திவிட்டது. மத்திய காலத்தில் இஸ்லாமியர் ஆதிக்கத்தினால் பக்தி இயக்கம் வேகம் கொண்டதுபோல, நாகரீ கத்தின் தாக்கம் இந்து சமயத்தில் பல சீர்திருத்த இயக்கம் தோன்றக் காரணமாயின.
இச்சீர்திருத்த இயக்கத்தின் மூலம் 1828ஆம் ஆண்டில் ராஜாராம் மோகன்ராய் ‘பிரும சமாஜத்தை’ தோற்றுவித்தார்.
இந்த இயக்கத்தின் மூலமாக கிருஸ்துவ, முஸ்லீம் (இஸ்லாமிய) கோட்பாடுகளைக்கொண்டு தமது இயக்கத்தினை நெறிப்படுத்தினார்.
இதன்படி விக்கிரக வழி பாடுக்கு எதிர்ப்பு, ஒரே கடவுள் தத்துவம், உடன் கட்டை ஏறுதல், ‘சதி’ முறை ஒழிப்பு முறைகளை முன் வைத்தார். இக்கோட்பாட்டில் இன, சாதி, மொழி வேறுபாடில்லாமல் ‘ஒரே கடவுள்’
என்ற கோட்பாட்டை ஏற்கும் அனைவரும் பிரும சமாஜத்தில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் நாத்திகம், கிருஸ்துவம், இந்து சமய புராணத் தன்மை அனைத்தையும் பிரும சமாஜம் எதிர் கொண்டது.
ராஜாராம் மோகன்ராய், மகரிஷி தேவேந்திர தாகூர், பிரம்மானந்த கேஷப் சந்திரா சென் ஆகியோர் தொடர்ந்து தலைமைப் பொறுப் பேற்க பிருமசமாஜம் நாடெங்கும் வேகமாகப் பரவியது.
1875ஆம் ஆண்டில் பம்பாயில் சுவாமி தயானந்தரின் தலைமையில் “ஆரிய சமாஜம்” என்ற மற்றொரு இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இதன் தலைவராகவும் திகழ்ந்தார். இவர் தனது வாதத்திறமையால் கிருஸ்துவப் பிரச்சாரத்தையும், இஸ்லாமியத்தையும் வன்மையாக எதிர்த்தார்.
தயானந்தர், வேதங்களை முதன்மைப்படுத்தினார், அனைத்து ஞானத்திற்கும் அடித்தளம் வேதங்கள் என்றார். வேதகாலத்திற்குப் பிறகு ஏற்பட்ட நிகழ்வுகளை தயானந்தர் ஏற்கவில்லை. வேதங்கள் பிராமணர்களுக்கு மட்டுமே உரியது என்ற நிலையை மாற்றி அனைவரும் படிக்க ஏற்பாடு செய்தார். சாதி வேறுபாட்டை கண்டித்தார். பெண் விடுதலைக்காகப் பாடுபட்டார். கல்வி போன்ற அறச்செயல்களின் மூலம் ஆரிய சமாஜத்தை விரிவு படுத்தினார். இதனால் ஆரிய சமாஜம் வடநாட்டில் குறிப்பாக பஞ்சாப்பில் வேகமாக பரவியது.
இதற்குப் பின்னால் தோன்றிய ‘பிருமஞான சபை’ என்ற அமைப்பின் மூலம் கிறிஸ்துவ, லோகாயத கொள்கைகள் இந்தியாவில் பரவுவதை தடுத்து நிறுத்த வழிவகை செய்தது. மேலும் 1875ஆம் ஆண்டில் நியூயார்க்கில் பிளாவட்ஸ்கி என்ற ரஷ்ய அம்மையாரும், ஆல்காட் என்ற ஆங்கிலேய ராணுவ வீரரும் பிருமஞானசபையைத் தோற்று வித்தனர். இந்த அமைப்பானது இந்து தத்துவம், திபெத்திய பௌத்தக் கூறுகளை இணைத்து செயல் பட்டு மேனாட்டு மக்களைக் கவர்ச்சிப்படுத்தியது. இதனால் இவ்வியக்கம் பலரையும் ஈடுபடுத்திற்று என்று கூறப்படுகிறது.
இந்த இயக்கத்தின் மூலமாக இந்து சாத்திரங் களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகெங்கும் பரவச் செய்தது. இச்சீர்திருத்த இயக்கம் இந்து கலாச்சாரம் முழுமையும் மேனாட்டு பண்பாட்டில் அடிபட்டுப் போகாமல் தடுத்து நிறுத்தியது. இந்து சமயத்தை முழுமையாகச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்ற வேகத்தில் பிருமசமாஜமும், ஆரிய சமாஜமும், சனாதன இந்துக்களின் பிடியில் இருந்து விலகின. சனாதனிகள், பாரதத்தின் ரிஷி களும், முனிபுங்கவர்களும் காட்டிய வழியினிலே கடைபிடித்து வேத, இதிகாசங்கள் காட்டிய வழியைக் கடைபிடித்தது. சனாதனிகள் கொள்கை நெடுநாள் நீடிக்காமல் போய்விட்டது.
இந்திய வானில் சக்தி தரிசனம் கண்ட இந்து சமயக் கொள்கைகள், இலட்சியங்களிலும் சிறிதும் விலகாது சாதாரணமாக எளிமையோடு விளங்கியது. பாரத மண்ணில் தோன்றிய அருளாளர்கள், ஞானிகள், ரிஷிகள் போன்றவர்கள் அனுபவ வெளிப்பாட்டினை அருளுரையாக வெளிப்படுத்தினர். அருளுரை மொழிபவராகத் தோன்றியவர்தான் இராம கிருஷ்ண பரமஹம்சர் ஆவார்.
இந்து சமயத்தை காலங்காலமாகக் கட்டிப் போட்டது எதுவென்றால், உள்ளுணர்வில் நிகழும் அனுபவ வெளிப்பாடுகளே ஆகும். மேலும் அத்வைதிகளின் தத்துவ விளக்கங்கள், ராஜ போகத்தின் பல நிலைகள், ஹடயோகிகளின் கடுமையான உடற்பயிற்சி, சாக்த - வைணவ - சைவ சமயங்களின் அன்பின் அடிப்படையிலான பக்தி நெறிகளே அனுபவ வெளிப்பாடு ஆகும். இந்த சமய கோட்பாடுகளையும், உண்மைகளையும் கண்முன் கொண்டும் செயல்பாட்டினைச் செய்தவர் ராமகிருஷ்ணர். இராமகிருஷ்ணரின் வாழ்வு கடவுளை நேரில் தரிசிக்க வைத்தது. பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு மனஅமைதி தரும் தத்துவ மாகவும் வாழ்ந்தவர் என்ற மாண்பைப் பெற்றவர் என்று சைவ சமயம் சுட்டிக்காட்டுகிறது.
இவர் பகுத்தறிவாதிகளின் அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கும் அரிய விளக்கம் கொடுத்தவரும் ஆவார். இவர் கொள்கையில் ஈடுபாட்டின் செயல் பாட்டினைக் கவர்ந்த கடவுள் மறுப்புக் கொள் கையில் ஈடுபட்ட நரேந்திரன் இராமகிருஷ்ணரால் ஈர்க்கப்பட்டு சுவாமி விவேகானந்தர் ஆனார் என்ற சிறப்பும் உண்டு. இறையன்பு பெற்று இன்பநிலை அடைந்த ராமகிருஷ்ணர் 1855ஆம் ஆண்டில் கல்கத்தாவில் உள்ள ஒரு காளி கோவிலுக்குப் பொறுப்பேற்றார். இதன் மூலம் இவருக்கு அம்பாள் தரிசனம், சமயங்களின் இறையனுபவம் அனைத்து சமய நெறிகளும் அவருக்குக் கிடைத்துள்ளது. 1862ல் பைரவி என்ற பெண் துறவி மூலம் தாந்திரீக சாதனம் பெற்றார். பரமஹம்சர் இராமபிரானை குழந்தையாகப் பாவித்த தாயின் வாத்சல்யத்தோடு இராமரின் உலோகச் சிலையுடன் திருமேனி யுடனும் இந்துமத கொள்கையின்படி உலாவி வந்துள்ளார்.
இவர் கண்ணன் மேல் காதல் கொண்ட அடிப்படையில் ஒருநாள் பகவத்கீதை படிக்கக் கேட்டபொழுது, கண்ணபெருமான் காட்சியும் அளித்து உள்ளார். டோராபூரி என்ற வேதாந்த குரு தக்ஷினேஸ்வரத்தில் தங்கிய பரமஹம்சர் அத்வைத வேதாந்தத்தைப் பிழிந்து கொடுத்தார். 1865இல் பரமஹம்சர் இரவுபகலாக நீரில் சமாதி நிலையில் இருந்துள்ளார். இவருக்கு பக்திநெறி, ஞானமார்க்கம், யோகநெறி, கர்மநெறி என இந்து சமயத்தின் அத்தனை கூறுகளும் இவருக்கு கைவந்த கலையாம்.
1866ஆம் ஆண்டில் தக்ஷினேசுவரர் கோவில் தோட்டத்தில் ஒரு இஸ்லாமியர் மிகுந்த சிரத்தை யோடு தொழுகை செய்து கொண்டு இருந்தார். அவரிடம் மதபாகுபாடு இன்றி உபதேசம் பெற்ற பரமஹம்சர் முஸ்லீம் பக்தர் போலவே உடை களை அணிந்து கொண்டு பழக்க வழக்கங்களையும் மாற்றிக் கொண்டு நமாசும் (பிரார்த்தனை) செய்து வந்தார். இவருக்கு நபிகள் நாயகம் காட்சியும் அளித்து உள்ளார்.
1874ஆம் ஆண்டில் ஷம்புசரண் முல்லிக் என்பவரை பைபிள் படிக்கச் சொல்லி கேட்டும் உள்ளார் பரமஹம்சர். மூன்று நாள் பரமஹம்சர் இதே சிந்தனையாகவே இருந்து உள்ளார். நான் காவது நாள் இவரது இதயத்தில் ஒரு குரல் வெளிப்பட்டது. இது மனிதகுல மீட்சிக்காக இரத்தம் சிந்திய இயேசுபிரான் என்ற குரல் ஓசை எழுந்தது. இயேசுபிரான் பரமஹம்சரின் தெய்வீக நிலையில் படித்தவர்களும், பாமரர்களும் ஈர்க்கப் பட்டு அவரைச் சுற்றி திரண்டனர். சீடர்கள் பலர் உருவானார்கள். அவர்களுள் தலைசிறந்தவர் சுவாமி விவேகானந்தர், இந்நிலையில் இந்துமத சைவத்திற்குப் பாடுபட்ட பரமஹம்சர் 15.8.1886ஆம் ஆண்டு அவரது சமாதி கூடுமுன் விவேகானந்தரை அழைத்தார், அப்போது பரமஹம்சர் “என்னுடைய எல்லாவற்றையும் உனக்குக் கொடுத்துவிட்டேன். நான் இப்போது வெறும் ஏழை பக்கிரி, இந்த பிள்ளைகளை கவனித்துக்கொள்” என்று அருளுரை கூறிவிட்டு இறைவனுடன் கலந்து உள்ளார்.
பரமஹம்சரிடம் அருளுபதேசம் பெற்ற விவேகானந்தர், பரமஹம்சரின் சீடர்களை யெல்லாம் ஒன்று திரட்டினார். 1893 ஆம் ஆண்டில் அமெரிக்கா சென்ற விவேகானந்தர், சிகாகோ சமயப் பேரவையில் உரையாற்றினார். பேரவையை அவரது பேச்சு மெய் மறக்க வைத்துள்ளது. பேரவை முடிந்தும் மீண்டும் 16 நாட்களில் 10 முறை விவேகானந்தர் பேச அழைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறாக மூன்று ஆண்டுகாலம் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து பல இடங்களில் உரையாற்றி உள்ளார் விவேகானந்தர். பயணம் முடிந்து இந்தியா திரும்பிய உடன் இராம கிருஷ்ணரின் பிற சீடர்களைத் துணை கொண்டு மே 1897ஆம் ஆண்டில் “ராமகிருஷ்ண மிஷன்” என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். ராமகிருஷ்ண பரம ஹம்சரின் அருள்மொழிகளை அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா ஆகிய நாடுகளில் பிரச்சாரம் செய்தும், சமயக் கோட்பாடுகளையும் பரப்பினார். இதோடு மட்டுமின்றி பஞ்சம், வெள்ளம் நிகழும் காலங் களில் மக்களுக்கு உதவும் தொண்டு நிறுவன மாகவும் விளங்கியது இந்நிறுவனம். குரு நாதர் இலட்சியங்களை நிறைவு செய்த விவேகானந்தர் 1902ஆம் ஆண்டில் இறைவனடி சேர்ந்தார்.
இவ்வாறாக சைவப்பெருவெளியில் மேனாட்டு ஆதிக்கத்தையும், கலாச்சாரச் சீரழிவும் ஏற்படா வண்ணம் பல்வேறு ஆன்றோர்கள் தம் இந்திய சைவ சமயத்தை நிலைநாட்ட பாடுபட்டவர்களைப் பற்றி நினைவு கூறுவதைப் பெருமிதம் கொள் கின்றேன்.