பீகார் போன்ற பின்தங்கிய மாநிலங்கள் முன்னணியில் போய்க் கொண்டிருக் கின்றன. முன்னணியில் இருந்த தமிழகம் பின்தங்கி விட்டது. அம்மையார் மட்டுமே, முன்னேறி விட்டதாகச் சொல்கிறார்.

ஆம் நிரந்தர முதல்வர் என்ற முழக்கத்திலிருந்து, “வருங்கால பிரதமர்” என்ற முழக்கத்திற்கு முன்னேறியிருக்கிறது.

ஒருவேளை அப்படி ஓர் அசம்பா விதம் நடந்து அம்மையார் வடக்கே சென்று விட்டால், நாம் கொஞ்சம் நிமிர்ந்து உட்காரலாம் என்று அ.தி.மு.க., அமைச்சர்கள் பகல் கனவு காண்கி றார்கள். அதுதான் பிரதமர் முழக்கம் பலமாகக் கேட்கிறது.

அம்பேத்கர், பெரியார், அண்ணா வழியில் கலைஞர் அரசு கட்டிக்காத்த சமூகநீதியை அம்மையாரின் அரசு நசுக்குகிறது.

 இடஒதுக்கீட்டை நிறைவேற்ற முயற்சித்ததால் அன்று வி.பி.சிங் அரசைக் கவிழ்த்தது பா.ஜ.க., என்பது தெரிந்தும், தமிழக அரசின் இடஒதுக்கீட்டு மறுப்பைக் கண்டிக்கும் வைகோ, ராமதாஸ் போன்ற தலைவர்கள், பா.ஜ.க.வுக்குத் தோள்கொடுப்பதற்குப் போட்டி போடுகிறார்கள்.

கடல் கடந்து இன அழிப்புச் செய்தது காங்கிரஸ் கட்சி, உள்நாட்டிலேயே சமூக அழிப்புச் செய்தும், தொடர்ந்து செய்யவும் தயாராக இருக்கும் கட்சி பா.ஜ.க. இது புரியாமலா வைகோவும், ராமதாசும் அரசியல் நடத்து கிறார்கள்.

அதுபோல, பா.ஜ.க.வின் கொள்கைகளைத் தைரியமாக அமல்படுத்தும் ஜெயலலிதா, சிறுபான்மையினரின் ஓட்டுகளுக்காக, கம்யூனிஸ்டுகளைக் கூட்டணியில் வைத்திருக்கிறார். கம்யூனிஸ்டுகளுக்கும், அ.தி.மு.க.வுக்கும் உள்ள தேர்தல் உறவு கம்யூனிஸ்டுகளை நம்பி இருக்கும் சாமானிய மக்களை விழி பிதுங்க வைத்திருக்கிறது-.

நமக்கு மேலே இருப்பவரைப் பார்ப்பதைவிடக் கீழே இருப்பவரைப் பார்க்க வேண்டும் என்கிறது மனு ஸ்மிருதி. உயர்சாதி எனப்படுபவர்கள் நம்மை ஆதிக்கம் செய்து வாழ்ந்தாலும், அதைப்பார்த்துப் பொறாமைப்படாமல், நமக்குப்பின்னே ஒரு சாதி உரிமைக்காகப் போராடிக்கொண்டு இருக்கிறது, நாம் ஆதிக்கம் செய்ய ஒரு இனம் இருக்கிறதே என்று பெருமைப் பட்டுக்கொள்ள வேண்டும். இந்நால்வருணம் அவாளின் முன்னேற்றம்தான்.

கருணாநிதி நினைத்திருந்தால் ஈழத்தமிழர்களைக் காப்பாற்றி இருக்க லாம், அழித்துவிட்டார் என்று வார்த் தைக்கு, வார்த்தை கூறுகிறாரே ஜெயல லிதா, ‘நாளைய’ பிரதமர் என்று தன் வலிமையைக் காட்ட நினைக்கும் அவர், ‘நேற்று’ ஏன் ஈழப்படுகொலையை நிறுத்தியிருக்கக் கூடாது.

கலைஞரை எதிரி என்று ஜெயலலிதா சொல்கிறார் என்றால், அவரைத் தானே சொல்கிறார் என்பதல்ல பொருள். ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் எதிரி என்கிறார், கலைஞரை முன்வைத்து.

இவையெல்லாம் சமூகநீதிக்கான முன்னேற்றப் பாதையன்று. மனுநீதியை நோக்கிய தவறான பாதை என்பதை நாம் உணர வேண்டாமா? அது தவறு என்று சொல்ல வேண்டாமா? எப்படிச் சொல்வது? வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மதவாத சக்திகளை, அ.தி.மு.க., பா.ஜ.க., கூட்டணிகளைத் தோற்கடித்துத் தான்!

Pin It