மேலே உள்ள தலைப்புதான் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இன்றைய அரசியல் நிலை. கட்சியில் பதவியிலில்லாததும், தேர்தலில் தோற்றுப்போனதும் அவருக்குக் கடுமையான விரக்தியைத் தந்துள்ளது. அந்த விரக்தி காங்கிரஸ் கட்சியின் மீதான விசுவாதத்தைக் குறைத்துள்ளது.

அவரது சிந்தனையயல்லாம் அ.தி.மு.க.வின் முன்னேற்றம் பற்றியே உள்ளது. அதனால்தான் மத்தியில் ஆட்சி அமைத்திருக்கும் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியை நேரடியாகவும், மறைமுகமாகவும் விமர்சித்து வருகிறார். அவரது விமர்சனங்கள் எல்லாம் செயலலிதா நிறுவனத்தால் திட்டமிட்டு தயாரிக்கப்பட்டவை.

சமீபத்தில் பேசிய இளங்கோவன், சோனியா ராகுல் நினைத்திருந்தால் பதவிக்கு வந்திருக்கலாம். ஆனால் அவர்கள் வரவில்லை. இங்கே அப்பா, மகன் பதவியில் இருக்கிறார்கள் என்று சாடைப்பேச்சு பேசி உள்ளார். சோனியாவும், ராகுலும் பதவிக்கு வரமாட்டோம் என்று உத்திரவாதம் கொடுத்திருக்கிறார்களா? அல்லது அவர்களுக்காக இளங்கோவன் உத்திரவாதம் கொடுக்கிறாரா?

2004 ஆம் ஆண்டு சோனிய பிரதமராக வேண்டும் என்று நினைத்தபோது, அதற்கு ஒரு அழுத்தமான கருத்தைச் சொல்லி, பி.ஜே.பியை விடக் கடுமையாக எதிர்த்தவர் செயலலிதா. அவரை எதிர்த்துப் பேச திராணியில்லாத இளங்கோவன், ஆதரவு அளித்த கலைஞரை விமர்சிக்கிறார்.

கடந்த கால அரசியல் நிகழ்வுகளைச் சொல்லி கலகம் ஏற்படுத்த நினைக்கிறார். பழைய நிகழ்வுகளைக் களைந்து 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட தி.மு.க. காங்கரஸ் கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. மத்திய அரசிடம் இருந்து மாநில வளர்ச்சிக்கு வேண்டிய நிதிகளைப் பெற்று, மாநில நலத் திட்டங்களைச் செய்து கொண்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் 2006இல் காங்கிரஸ் துணையுடன் ஆட்சிக் கட்டிலேறிய தி.மு.க., மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி மக்களாட்சி நடத்திக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களைக் காட்டிலும், திறம்பட திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

இதையயல்லாம் அறியாமல் விரக்தி மயக்கத்தில் இருக்கும் இளங்கோவன், காங்கிரசும், அ.தி.மு.க.வும் கூட்டணியாக இருப்பது போலவும், தி.மு.க. எதிரணியில் இருப்பது போலவும் பேசிவருகிறார். விஜயகாந்திடம் அழையா விருந்தாளியாகவும் போய் நிற்கிறார்.

காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என்று வெற்றுடம்பை உருட்டுகிறார். ஆனால் செயலலிதா முதல்வராக வர வேண்டும் என்று அவர் உயிர் இன்னமும் துடிக்கிறது.

இந்த மாற்றத்தைத்தான் தமிழகத்தில் எதிர்பார்க்கிறார் இளங்கோவன். தமிழக மக்கள் செயலலிதாவிடம் அடிமையாக இருக்க வேண்டுமே தவிர, தமிழனிடம் சுதந்திரமாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். அதற்காகத்தான் தி.மு.க.வை விமர்சிக்கிறார். ஆனால் அவரது எண்ணத்தில் இருந்து மக்கள் தெளிவான மாற்றத்துடன் உள்ளனர்.

தங்களை யாரிடமும் அடிமையாக்காமல் பாதுகாத்துக்கொள்ளும் சுய அறிவு அவர்களுக்கு உள்ளது. எனவே இளங்கோவனின் உபதேசம் அவரைப் போன்ற ஒரு சில தொண்டர்களுக்குத்தான் பொருந்தும்.

மக்களின் ஆதரவு பெற்ற கலைஞரை விமர்சிப்பதால் அவருக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. மாறாக இளங்கோவனின் அருகம்புல் அரசியலில் அருவருப்புதான் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

Pin It