1955ஆம் ஆண்டு கீதா பிரஸ்ஸின் 30ஆவது ஆண்டு விழா நடைபெற்றுள்ளது.  அந்த அச்சகம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினுடையது. இயக்கம் தொடங்கிய 1925 ஆம் ஆண்டிலேயே அச்சகத்தையும் அவர்கள்  தொடங்கியுள்ளனர். அதில் ஏறத்தாழ 60 லட்சம் கீதை புத்தகங்கள் அச்சிடப்பட்டு, 1955 ஆம் ஆண்டு வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர்களின் துண்டறிக்கை சொல்கிறது. அந்த முப்பதாம் ஆண்டு விழாவில், இந்தியாவின் அன்றைய குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத் கலந்து கொண்டுள்ளார். (அவரே ஒரு ஆர்.எஸ்.எஸ். காரர்தான்).

இதற்கு மாற்றாக அன்றே  தந்தை பெரியார் சிந்தித்துள்ளார். 1933-இல், பகுத்தறிவுப் பிரச்சார நூற்பதிப்புக் கழகம் (பி) லிட் என ஒரு வெளியீட்டகத்தைப் பெரியார் தொடங்கி, ராகவன் என்பவரிடம் அதன் முழுப் பொறுப்பையும் கொடுத்துள்ளார். ஒரு பங்கு ரூ.10 என்றும் 3000 பங்குகளைச் சேர்க்கத்  திட்டம் என்றும் பெரியார் குறிப்பிட்டுள்ளதோடு, 250 பங்குகள் சேர்ந்து விட்டதென்றும் அறிக்கையில் கூறியுள்ளார்.

1933-இல் ரூ.30,000 என்பது, இன்று பல கோடி ரூபாய் மதிப்புடையது என்பதை அறிவோம். அப்போதே  அப்படி ஒரு நிறுவனத்தை நிறுவி, நல்ல பகுத்தறிவுக் கருத்துடைய நூல்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள அய்யாவின் தொலைநோக்குப் பார்வை நமக்கு வியப்பைத் தருகிறது!

(11.09.2018 மாலையில், திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் நடைபெற்ற கலைஞர் புகழ் வணக்கக் கூட்டத்தில், தோழர் சுபவீ)

Pin It