அண்மையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட முதலமைச்சர், ஸ்மார்ட் சிட்டி விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

முறையான பராமரிப்புடன் கூடிய பரந்து விரிந்த சாலைகள், வீடுகளின் கழிவுநீர்க்குழாய்கள் அமைக்கப்பட்டு, அவை பொதுக்குழாயுடன் இணைக்கப்படுதல், மேம்படுத்தப்பட்டச் சுகாதார அமைப்பு முறை, நவீனத் தொழில் நுட்பங்களின் அடிப்படையில் வாழ்க்கைத்தர மேம்பாடுளுக்கானத் தீர்வுஎன அமைக்கப்படும் சிறப்பான நகர அமைப்பே “ஸ்மார்ட் சிட்டி”.

தமிழகத்தில் 11 நகரங்களைத் தேர்வு செய்து ஸ்மார்ட் சிட்டி உருவாக்க அ.தி.மு.க. ஆட்சியின் போது ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி 196 கோடி ருபாய்.

இதில் ஒரு விழுக்காடு கூட (அ.தி.மு.க.) மாநில அரசு செலவு செய்யவில்லை, அதற்கும் குறைவாகவே செலவிட்டுள்ளது என்று மாநிலங்களவையில் ஒன்றிய வீட்டு மற்றும் நகர்ப்புற அமைச்சரவையில் வைத்த அறிக்கை கூறியிருக்கிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சென்னைக்கு மாநகராட்சி மூலம் வெறும் 3 கோடியும், கோவைக்கு 7 கோடியே 27 லட்சமும், சேலத்திற்கு 5 லட்சமும் ஏனைய தொகையை எட்டு மாவட்டங்களிலும் செலவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அ.தி.மு. க. அரசு சென்னை ஸ்மார்ட் சிட்டியை அமைக்க முறையாகவும், சரியாகவும் செயல்பட்டு இருந்தால் சென்னை மழைநீர் தேங்கிய வெள்ளக்காடாக ஆகியிருக்காது.

மாறாக, முதலமைச்சர் சொல்வது போல கமிஷன் - கரப்ஷன் என்று இருந்து விட்டு, ஸ்மார்ட் சிட்டி குறித்தச் சிந்தனையே இல்லாமல் இருந்தது அ.தி.மு.க அரசு. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மக்கள்.

எனவே முதல்வர் சொன்னது போல், ஸ்மார்ட் சிட்டி விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம் என்பதை மக்கள் உணர்கிறார்கள்.

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It