சங்க இலக்கியத் தேடல்

வாணி அறிவாளன் | பக். 112 | ரூ.90 வெளியீடு : தமிழ்க் கோட்டம்,

சென்னை - 29.

இந்நூலில் உடன்போக்கு, நடுகல் வழிபாடு, யானை, தன்னுணர்ச்சி, வாடாவள்ளி, அதியமான் நெடுமான் அஞ்சி பற்றிக் கட்டுரைகளும் பெண்பாற்புலவர் பற்றியக் கட்டுரையும் ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ளன.

 

புரட்சியில் பூத்த காந்திய மலர்கள்

சோலை | பக். 248 | ரூ.80/ | வெளியீடு : சர்வோதயச் செயல்பாட்டு ஆராய்ச்சி மையம், மதுரை.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்திஜியின் தலைமையில் தமிழகத்தில் பணியாற்றிய பல்லாயிரக்கணக்கான தொண்டர்களில் சிலர் சர்வோதய இயக்கத்தில் பணிபுரிந்தனர். அப்படி பணி புரிந்தவர்களில் ஜெகந்நாதன், கிருஷ்ணம்மாள் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் இருவரும் கலப்புத் திருமணம் செய்து நிலத்தை தானம் பெற்று விநியோகித்த செயல்களும், சந்தித்த பிரச்சனைகளும், பெற்ற விருதுகளும் இந்நூலில் எளிய தமிழில் எழுதப்பட்டுள்ளன.

 

புகழ்மிக்க புறநானூற்றுத் தொடர்கள்

மயிலை பாலு | பக். 72 | ரூ.25/ வெளியீடு : பாரதி புத்தகாலயம், சென்னை - 18.

சங்க இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் விதமாக, இந்நூல் ஆசிரியர் எழுதிய முதல் புத்தகம் அறிமுக அகல்விளக்கு குறுந்தொகை என்னும் நூல் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக வந்திருக்கும் இந்நூலில், உடனே மனதில் தைக்கும் சில பாடல்களின் தொடர்கள் வழி செய்யுள்களையும், அந்த செய்யுள்களில் உள்ள முழுச் செய்திகளும் உரைநடையில் சொல்லப்படுகின்றன.

 

கலையாத மௌனங்கள்

ஈ. ரஞ்சித் | பக். 40 | ரூ.20

வெளியீடு : ரஞ்சித், அத்தாணிக்காரர் தோட்டம், சத்தியமங்கலம் - 2.

இந்நூல் ஆசிரியரின் முதல் கவிதை தொகுப்பு இது. மாணவர் பருவத்தில் படைப்பிலக்கியத்தின் பக்கம் வந்த இவரின் இந்தத் தொகுப்பில் சமூகத்தையும், காதலையும் மென்மையாக பதிவு செய்துள்ளது.

 

வேலூர் சிப்பாய் புரட்சி - 1806

சி.எம்.என். சலீம் | பக். 96 | ரூ.35 வெளியீடு : ஸாஜிதா புக் சென்டர், சென்னை - 1.

பொதுவாக இந்திய விடுதலைக்கு 1857-ல் நடைபெற்ற சிப்பாய் புரட்சிதான் என்று வரலாற்றில் பேசப்படுகிறது. இதை மறுக்கும் விதமாக, ஆதாரத்துடன் இந்திய விடுதலைக்கு முதன் முதலில் வித்திட்ட ஆயுதப் போராட்டமான வேலூர் புரட்சிதான் என்றும், இதை தலைமையேற்று நடத்திய திப்பு சுல்தானின் பங்கும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு பற்றியும், நிறைய வரலாற்று புகைப்படங்களும் வந்துள்ள நூல் இது.

 

பெரியார் அம்பேத்கர் சாதி ஒழிப்பு

ஆ. வந்தியத்தேவன் | பக். 112 | ரூ.50

இந்தியாவின் வடபகுதியில் அம்பேத்கரும், தென்பகுதியில் பெரியாரும் சாதி ஒழிப்பில் முக்கிய பங்காற்றினர். அவர்களின் சாதி ஒழிப்பு பற்றிய கருத்துகளும் இந்நூலாசிரியர் பல்வேறு காலங்களில் அம்பேத்கர், பெரியார் மற்றும் சாதி ஒழிப்பு போராளிகளைப் பற்றி எழுதியக் கட்டுரைகளும் வானொலி பேச்சுகளும் இந்நூலில் உள்ளன.

 

பெரியாரும் திராவிட இயக்கமும்

இரா. விஜயசங்கர் | பக். 44 | ரூ.15 வெளியீடு : சமூக விஞ்ஞானக் கழகம், சென்னை - 94. | விற்பனை உரிமை: பூபாளம் புத்தகப்பண்ணை, புதுக்கோட்டை .

இந்திய சமூக விஞ்ஞானக் கழகத்தின் சார்பில் பெரியார் நினைவுச் சொற்பொழிவுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் விரிவான வடிவமே இந்நூல். மேலும் இந்நூலில் திராவிட இயக்கம் தோன்றிய சூழல், வரலாற்று பின்னணி, ஆரிய-திராவிட மோதல், அன்றைய அரசியல் சமூக இயக்கங்கள், நீதிக்கட்சி, பெரியாரின் வருகை, சுயமரியாதை இயக்கம், சமதர்மத்தை நோக்கி, திராவிட இயக்கத்தின் முதல் திருப்பம், திராவிடர் கழகம், திராவிட முதலாளிகளுக்கு ஆதரவு மற்றும் தத்துவார்த்த பிரச்சனைகள் ஆகிய தலைப்புகளில் திராவிட இயக்கம் பற்றி ஆராயப்பட்டுள்ளன.

 

லண்டன் டயரி

இரா. முருகன் | பக். 192 | ரூ.125 வெளியீடு : கிழக்கு பதிப்பகம்,

சென்னை - 18.

லண்டன் சரித்திரத்தின் துவக்கம் என்பது கிறிஸ்து பிறந்த முதல் நூற்றாண்டில்தான் என்று கூறும் இந்நூல் ஆசிரியர் ரோமானியர்களின் ஆரம்ப கால ஆட்சியிலிருந்து விக்டோரிய மகாராணியின் ஆட்சி வரையிலான வரலாற்றை ஒரு பயண அனுபவத்தின் வழியாகக் கூறுகிறார்.

 

உணவோடு உரையாடு

Healer அ. உமர்பாரூக் | பக். 48 ரூ.20/ | வெளியீடு : பாரதி புத்தகாலயம், சென்னை - 18.

நம்முடைய உடல் நலம் என்பதில் உணவுமுறை முக்கியப் பங்காற்றுகிறது. இந்த உணவு முறைகளால் ஆரோக்கியமும், நோயும் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் நம் உடல் நலத்துக்கு ஏற்ற உணவு எது என்றும் அதில் சைவ உணவு மற்றும் அசைவ உணவுகளில் உள்ள புரத சத்துகள் பற்றிக் கூறுகிறது இந்நூல்.

 

சூதாட்டம்

பிடல் காஸ்ட்ரோ | பக். 64 |ரூ.25 பாரதி புத்தகாலயம், சென்னை 18. தமிழில் : கி. ரமேஷ்

1999 முதல் 2008 வரையில் உலகப் பொருளாதார நெருக்கடி குறித்து அவ்வப்போது பிடல் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்நூல் 1930களில் உலகம் கண்ட பொருளாதார சீரழிவு இன்று வேறு வடிவில் தொடர்கிறது என்று கூறுகிறார். பிடல் பிரேசில் ஜனாதிபதி லூலா டிஸில்வாவிற்கு சந்திப்பு பற்றிய கட்டுரையும் இந்நூலில் உள்ளன.

Pin It