காவிரித் தீர்ப்பாயத்தைக் கலைக்க ஆணையிடும் வகையில் இந்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஒற்றைத் தீர்ப்பாயத்திற்கான சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், ஒருவேளை ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டால் அதில் விசாரணைக்குக் காவிரி வழக்கை அனுப்பக் கூடாது,  காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும், மேக்கேத்தாட்டில் கர்நாடக அரசு புதிய  அணை கட்ட இந்திய அரசு அனுமதிக்கக் கூடாது, தமிழக உழவர்களுக்கு முழுமையான வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தின் முன்பு, கடந்த மார்ச்சு 28 அன்று தொடங்கி _- காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இரவு பகலாக -_ பத்தொன்பது நாட்கள் நடத்தி வந்த தொடர் அறப்போராட்டம், 15.04.2017 அன்று நிறைவடைந்தது. 

kaveri 600போராட்டத்தில், காவிரி உரிமை மீட்புக் குழுவில் உறுப்பு வகிக்கும் தமிழக விவசாயிகள் சங்கம், தமிழர் தேசிய முன்னணி, விடுதலைத் தமிழ்ப்புலிகள், இந்திய சனநாயகக் கட்சி, மனித நேய சனநாயகக் கட்சி உள்ளிட்ட அரசியல் அமைப்புகளும்,  உழவர் அமைப்புகளும், இளைஞர்களும் பங்கேற்றனர்.

போராட்டம் நடைபெற்ற பத்தொன்பது நாட்களிலும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தின் முதல் நாளான 28.03.2017 அன்று, தஞ்சை மாவட்டம், திருத்துறைப்பூண்டி, வேதாரணியம் பகுதி தோழர்களும், 29.03.2017 அன்று சென்னை, புதுச்சேரி, பெண்ணாடம், சிதம்பரம், காட்டுமன்னார் குடி, சீர்காழி, ஒசூர், கிருட்டிணகிரி, தருமபுரி, கோவை, ஈரோடு மாவட்டத் தோழர்களும், 30.03.2017 அன்று திருச்சி, மதுரை, திருச்செந்தூர், புளியங்குடி தோழர் களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

பின்னர் சுழற்சி முறையில் வெவ்வேறு நாட்களில் தோழர்கள் தொடர்ந்து வந்த அனைத்து நாட்களிலும் திரளாகப் பங்கேற்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், பொருளா ளர் தோழர் அ. ஆனந்தன், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, தலை மைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ. இராசேந்திரன், நா. வைகறை, க. விடுதலைச்சுடர், இரெ. இராசு, கோ. மாரிமுத்து, க. முருகன், பொதுக் குழு உறுப்பினர்கள் தோழர் கதிர்நிலவன், திருச்சி மூ.த. கவித்துவன், குடந்தை தீந்தமிழன், தஞ்சை இரா.சு. முனியாண்டி, பாவலர் இராசாரகுநாதன், பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் அ. தேவதாசு, வல்லம் செயலாளர் தோழர் சி. முருகையன், செங்கிப்பட்டி தோழர்கள் ப.வு. சண்முகம், ஆனந்த், செயராஜ், மணிகண்டன், தஞ்சை மாநகரத் தோழர்கள் பன்னீர்ச்செல்வம், அண்ணா துரை, சீனிவாசன், குடந்தை தோழர்கள் பிரபு, செந்தமிழன், முத்துக்குமார் உள்ளிட்டோர் வெவ்வேறு நாட்களில் போராட் டப்பந்தலிலேயே தங்கி போராட்டத்தில் பங்கேற்றனர். 

மயிலாடுதுறை பெரியசாமி, சென்னை பழ.நல். ஆறுமுகம், காஞ்சிபுரம் நடராசன், புளியங்குடி க. பாண்டியன், ஈரோடு வெ. இளங்கோவன், புதுச்சேரி வேலுச்சாமி, சிதம்பரம் எல்லாளன், பெண்ணாடம் கனகசபை, திருச்செந்தூர் மு. தமிழ்மணி, அரியலூர் மேலமைக்கேல்பட்டி வடிவேலன், சீர்காழி கோ. நடராசன், இராசராசன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பேரியக்கச் செயல்பாட்டாளர்கள், அவரவர் பகுதி தோழர்களுடன் போராட்டத்தில் பங்கேற்றனர். ஓசூரிலிருந்து திரு. வனமூர்த்தி தலைமையில் மைலான் நிறுவனத் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

மகளிர் ஆயம் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் தோழர் மதுரை அருணா, நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட் சுமி, திருச்சி தோழர் வெள்ளம் மாள் ஆகியோர் அனைத்து நாட்களிலும் போராட்டத்தில் பங்கேற்றனர். தஞ்சை தோழர்கள் தமிழினி,இராசப்பிரியா, சரசுவதி,பெண்ணாடம் வித்தியா, ஓசூர் வழக்கறிஞர் பாக்கிய லட்சுமி உள்ளிட்ட திரளான மகளிர் தோழர்கள் வெவ்வேறு நாட்களில் பங்கேற்றனர்.

போராட்டம் குறித்து செங்கிப்பட்டி, பூதலூர் பகுதிகளில் மாணவர்களும் இளைஞர்களும் பரப்புரை மேற்கொண்டனர். தமிழக இளைஞர் முன்னணித் தோழர் குழ.பா. ஸ்டாலின் இதற்கான பணிகளை ஒருங்கிணைத்தார்.

Pin It