சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு - 22

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் செய்தித்தாள்களில் சில இந்தியப் படங்கள் மற்றும் தமிழ்ப் படங்களின் பெயர்கள் ஆஸ்கர் போட்டிக்குச் செல்வதாகச் செய்திகள் வரும். பல நேரங்களில் கமல்ஹாசன் படங்களின் பெயர்களைப் போட்டு அப்படங்கள் ஆஸ்கர் போட்டிக்குச் செல்வதாக தினத்தந்தியில் செய்திகளை பார்த்திருக்கிறேன்.

இந்த கேள்விகளும் செய்திகளும் பல நேரங்களில் ஆச்சரியத்தையும், சில நேரங்களில் அதிர்ச்சியையும் தந்திருக்கின்றன. இன்றளவும் பலர் ஆஸ்கர் விருது என்பது ஏதோ எல்லா படங்களுக்குமான உலக அளவிலான விருது என்றே நினைக்கின்றனர். அடிப்படையில் ஆஸ்கர் விருது என்பது அமெரிக்கப் படங்களுக்கான அமெரிக்க அளவில் தரப்படும் விருது என்பது இன்றளவும் பலர் அறியப்படாத ஒன்றாகவே உள்ளது.

அப்படியெனில், நம்ம ஊர் ஏ.ஆர்.ரஹ்மான் 2010ஆம் ஆண்டு இரண்டு ஆஸ்கர் பரிசு களை வாங்கினாரே? என்று சிலர் கேட்கலாம். ஆம். அவர் வாங்கியது ஓர் அமெரிக்க படத்தில் இசையமைப்பாளராகப் பணிபுரிந்த காரணத்தினால்தான். அதேபோல்தான் பூனா திரைப்பட கல்லூரியில் பயின்ற கேரளாவைச் சேர்ந்த ரசூல் பூக்குட்டியும் அதே அமெரிக்கப் படத்தில் தொழில்நுட்ப கலைஞராகப் பணிபுரிந்த காரணத்தினால்தான் ஆஸ்கர் விருது பெற்றார். அவர்கள் இந்தியர்கள் என்ற காரணத்தால் அவர்களுக்கு ஆஸ்கர் வழங்கப்படவில்லை. மாறாக அவர்கள் பணிபுரிந்த அமெரிக்க படத்தில் அவர்களின் பணி சிறப்பாக அமைந்ததற்காகத்தான்.

இந்தியர் என்ற அடிப்படையில் சினிமாவுக்கு மிகச்சிறந்த சேவை செய்தவர் என்ற வாழ்நாள் சாதனையாளர் ஆஸ்கர் விருது வழங்கப்பட்ட ஒரே இந்தியர் சத்யஜித் ரே தான். ‘காந்தி’ திரைப்படத்திற்காக சிறந்த ஆடை வடிவமைப்பாளர் என்கிற ஆஸ்கர் விருதைப் பெற்ற பானு ஆத்தயாவும் இந்தியர்தான். ஆனாலும் அது முழுமையான இந்திய தயாரிப்பல்ல. ரிச்சர்ட் ஆடன்பரோ இயக்கிய ‘காந்தி’ திரைப்படம் ஓர் அமெரிக்க - இங்கிலாந்து இந்திய கூட்டுத் தயாரிப்பாகும்.

தற்போதைய நிலையில் இந்தியப்படம் ஒன்று ஆஸ்கர் விருது வாங்க வேண்டுமென்றால். ஒரே ஒரு பிரிவில்தான் வாங்க முடியும். அப்பிரிவு, வெளிநாட்டுப் படங்களுக்கான ஆஸ்கர் விருது என்கின்ற பிரிவாகும். அமெரிக்கா அல்லாத வேறொரு நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆங்கிலம் பேசாத படத்துக்கான விருது அது.

ஆஸ்கர் விருதுகள் 1929ல் தொடங்கப்பட்டா லும் வெளிநாட்டு படத்துக்கான ஆஸ்கர் விருது எனும் பிரிவு 1956ஆம் ஆண்டுதான் தொடங்கப் பட்டது. இந்தப் பிரிவுக்கு அமெரிக்கா அல்லாத எந்த நாடுகளும் தங்கள் நாட்டின் சார்பாக ஒரே ஒரு படத்தை அனுப்பலாம். அந்தப் படத்தை அனுப் பும் நாட்டின் சார்பாக ஒரு குழுவோ, நடுவர்களோ தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கும் குழு உறுப்பினர்கள் அல்லது நடுவர்கள் பெயர்களை முன்னதாகவே ஆஸ்கர் விருது தரும் அகெடெமிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அனுப்பப்படும் படங்கள் எல்லாம் போட்டியில் பங்கு பெறும் தகுதி சுற்றுக்காக அனுப்பப்படும் படங்களே தவிர போட்டியில் பங்கு பெறுவதற்காக அனுப்பப்படும் படங்கள் அல்ல. அவ்வாறு இந்த ஆண்டு இந்தியா சார்பில் தகுதிச் சுற்றுக்காக அனுப்பப்பட்ட படம் ‘ஆதா மெண்ட மகன் அபு’ என்கிற படமாகும். ஆனால் இப்படம் போட்டியில் பங்கு பெறும் தகுதியைப் பெறவில்லை. 1957ஆம் ஆண்டிலிருந்து இந்தியா சார்பாக இடையில் சில ஆண்டுகளை தவிர ஒவ் வொரு ஆண்டும் ஒரு படம் அனுப்பப்பட்டுள்ளது. அவ்வாறு அனுப்பப்பட்ட படங்களில் ஏழு தமிழ் படங்களும் அடக்கம். ஆனால், இதுவரை எந்த தமிழ் படமும் போட்டிக்கான தகுதியை பெற வில்லை. இப்பிரிவு தொடங்கப்பட்டு, கடந்த 56 ஆண்டுகளில் மூன்றே மூன்று இந்தியப் படங்கள் தான் போட்டியில் கலந்து கொள்ளக்கூடிய தகுதி யைப் பெற்றுள்ளன.

மெஹ்பூப் கான் இயக்கிய ‘மதர் இந்தியா’, மீரா நாயர் இயக்கிய ‘சலாம் பாம்பே’ மற்றும் அலு டோஸ் காவாரிக்கர் இயக்கிய ‘லகான்’ ஆகியவை தான் அந்த மூன்று படங்கள். கடந்த 56 ஆண்டுகளில் வெளிநாட்டு படங்களுக்கான ஆஸ்கர் பிரிவில் ஏன் மூன்றே மூன்று இந்திய படங்கள்தான் போட்டிக் கான தகுதியை பெற்றன? அந்த மூன்று படங்களில் ஏன் ஒன்றுகூட விருது வாங்கவில்லை? வரக்கூடிய ஆண்டுகளில் இந்தியப் படங்கள் ஆஸ்கர் போட்டிக்குத் தகுதி பெறுமா? ஆஸ்கர் விருதுகள் வாங்குமா? போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலைத் தெரிந்துகொள்ள, பொதுவாக ஆஸ்கர் போட்டி நடத்தப்படும் விதத்தையும், குறிப்பாக வெளிநாட்டு படங்களுக்கான ஆஸ்கர் பிரிவு பற்றி யும் அதன் சட்டதிட்டங்கள் பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

இந்த ஆண்டு தகுதிச் சுற்றுக்காக அனுப்பப் பட்ட “ஆதாமெண்ட மகன் அபூ’வை முதலில் பார்த்தபோது அப்படத்தின் ஒலிப்பதிவு மிகப் பெரிய குறையாக இருந்தது. இன்று உலகளவில் எடுக்கப்படும் எல்லா படங்களுமே நேரடி ஒலிப் பதிவில் எடுக்கப்படுகின்றன. நம் இந்தியப் படங் கள் இன்னமும் டப்பிங் முறையையே பயன்படுத்து கின்றனர். கதையும் படப்பிடிப்பும் சிறப்பாக உள்ள இந்தியப் படங்கள்கூட அதன் டப்பிங் முறை ஒலிப் பதிவினால் தரமிழந்து போகின்றன. நேரடி ஒலிப் பதிவு அந்த திரைப்படத் தொழிலின் தவிர்க்க முடியாத பாகமாக மாறும்வரை, நம் இந்தியப் படங்கள் உலகத் தரத்திலான படங்களோடு இணை யாக நிற்க முடியாது என்பதே என் கருத்து.

வெளிநாட்டுப் படங்களுக்கான ஆஸ்கர் பிரிவில் போட்டிக்கு தகுதி பெற்ற காட்சி இரு படங்களான ‘சலாம் பாம்பே’ மற்றும் ‘லகான்’ இரண்டுமே நேரடி ஒலிப்பதிவில் தயாரிக்கப்பட்டவை.

நேரடி ஒலிப்பதிவு மாத்திரம் இல்லாமல், படத் தில் வரும் பல்வேறு சூழல்களுக்கே உரிய உண்மை யான சப்தங்களும், அமைதியும் படத்தின் ஒரு பாக மாக இருக்க வேண்டியுள்ளது. இன்று உலக தரத்தி லான எல்லா படங்களுமே நம் மனதை தொடு வதற்கு முக்கிய காரணம், அவற்றின் கதையும் காட்சியமைப்பும் மாத்திரம் அல்ல. மாறாக காட்சி களின் வெளிகளுக்கே உரிய சப்தங்களும் அமைதி யும் தேவைப்பட்டால் இசையும் ஒன்று சேர்ந்து கலாபூர்வமாக இழைவதும்தான்.

பல இந்தியப் படங்களில் மிகச்சிறந்த ஒலி யமைப்பு இருந்தாலும் அவற்றில் மிளிரும் செயற்கைத் தன்மையும், பொருந்தாத் தன்மையும் சர்வதேச தரத்திலான படங்களை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு எரிச்சலூட்டவே செய்கிறது.

இந்த தொழில்நுட்ப காரணத்திற்கு அப்பாற் பட்டு, ஆஸ்கர் விருது கமிட்டி உறுப்பினர்கள் பார்ப்பது மற்ற நாடுகளிலிருந்து வரும் படங்கள் அந்நாட்டின் மொழியை, கலாசாரத்தை பேசுவ தோடு உலக அளவிலான ஒரு மானுட, அரசியல், சமூகப் பிரச்சினையை அழகியலொடு கையாளு கிறதா என்பதுதான்.

சிறந்த வெளிநாட்டு படத்துக்கான ஆஸ்கர் விருது பெறும் படம்தான் அந்த ஆண்டு அமெரிக்கா வுக்கு வெளியே தயாரிக்கப்பட்ட படங்களில் மிகச் சிறந்த படம் என்பதை தர்க்கரீதியாக யாராலுமே ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம், உலக நாடு களில் தயாரிக்கப்படும் பல சிறந்த படங்கள் ஆஸ்கர் போட்டிக்கு அனுப்பப்படுவதே இல்லை. ஒவ் வொரு ஆண்டும் வெளிநாட்டு படத்துக்கான ஆஸ்கர் விருது பிரிவின் தகுதிச் சுற்றுக்கு உலகம் முழுமையிலிருந்தும் சுமார் 60 படங்களே அனுப்பப்படுகின்றன. இந்த 60 படங்களிலிருந்து தான் போட்டிக்கு தகுதியானவை என்று 5 படங் களை தேர்ந்தெடுக்கின்றனர். இந்த 5 படங்களை தேர்ந்தெடுப்பது ஆஸ்கர் கமிட்டி நியமிக்கும் ஒரு நிபுணர் குழு.

இந்த ஒரு பிரிவைத் தவிர மற்ற பிரிவுகளில் போட்டிக்கான படங்களை தேர்ந்தெடுப்பது ஆஸ்கர் விருதை தரும் அகெடெமியின் உறுப்பினர் கள்.

இந்த விருது ஆஸ்கர் விருது என்று உலகம் முழுதும் பிரபலம் அடைந்திருந்தாலும் இதன் உண்மையான பெயர் அகெடெமி விருது என்பது தான். இந்த விருதை வழங்கும்  அமைப்பின் பெயர் ‘அசையும் படங்களின் கலை மற்றும் அறிவியலுக் கான அகெடெமி’.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்கர் விருது நிகழ்வு, 84ஆவது நிகழ்வு ஆகும். இந்த 84 ஆண்டுகளில் இந்த அகெடெமி விருது பெறும் படங்கள் சரியானதாக இருக்க வேண்டும் என்பதற்காக பல நேரங்களில், அகெடெமி அதன் சட்ட திட்டங்களை மாற்றியுள்ளது. அடிப்படையில் போட்டிக்கான படங்களை தேர்ந்தெடுப்பது இந்த அகெடெமியின் உறுப்பினர்கள். ஒரு சிக்கலான வாக்களிக்கும் முறையின் மூலமாக அகெடெமியின் உறுப்பினர்கள் பல்வேறு பிரிவுக்கான போட்டிக்கு படங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்த அக டெமியின் உறுப்பினர்கள் எல்லோருமே அமெரிக்க திரைப்படத் துறையில் பணியாற்றும் கலைஞர் களும் எழுத்தாளர்களும் தொழில்நுட்ப கலைஞர் களும் ஆவர்.

இந்த அகடெமியில் உறுப்பினராவது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. உறுப்பினருக் கான ஆண்டு சந்தா என்னவோ வெறும் 100 அமெரிக்க டாலர்தான். அகெடெமியின் அழைப் பின் பேரிலேயே ஒருவர் உறுப்பினர் ஆகமுடியும். தற்போது அகெடெமியின் உறுப்பினர்களாக கிட்ட தட்ட 6000 பேர் உள்ளனர். இந்த எண்ணிக்கை  அமெரிக்க திரைப்படத் துறையில் முழு நேரமாக பணிபுரிபவர்களில் பத்தில் ஒரு பகுதிதான். பெரும் பாலான உறுப்பினர்கள் பிரபலமான, புகழ்பெற்ற, தேர்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் ஆவர்.

மிகப்பெரும் வெற்றி பெற்ற அல்லது பல விருதுகள் வாங்கிய ஏதாவது இரு படங்களிலாவது அகெடெமியின் உறுப்பினர்கள் பிரதான பங்கு வகித்திருப்பர். அகெடெமி விருதுக்கான படங் களை தேர்ந்தெடுப்பதற்கு பொதுவான சட்ட திட்டங்களோடு ஒவ்வொரு பிரிவுக்கும் விஷேச சட்ட திட்டங்களையும் வைத்துள்ளது.

வெளிநாட்டு படத்துக்கான அகெடெமி விருதுக்கு அனுப்பப்படும் படங்கள் கண்டிப்பாக 35 MM அல்லது 70 MM அல்லது 2k டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 24 குஞளு முறையில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே, 16 MMலோ அல்லது சாதாரண டிஜிட்டல் தொழில் நுட்பத்திலோ எடுத்த படங் களை இப்பிரிவுக்கு அனுப்ப முடியாது.

மேலும் அப்படங்கள் எந்த நாட்டின் சார்பாக எடுக்கப்பட்டதோ, அந்த நாட்டில் வணிக ரீதியாக வெளியிடப்பட்டு குறைந்தபட்சம் ஒரு வணிக தியேட்டரிலாவது தொடர்ந்து 7 நாட்கள் ஓடியிருக்க வேண்டும். எனவே தியேட்டரில் வெளியாகாத சொந்த நாட்டில் யாருமே பார்க்காத படங்களை இவ்விருதுக்கு அனுப்ப முடியாது.

இப்படங்களில் பேசப்படும் மொழி பெரும் பாலும் அந்நாட்டின் மொழியாக இருக்க வேண் டும். அப்படத்தில் பணிபுரிந்த கலைஞர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் பெரும்பாலும் அந்நாட்டை சார்ந்தவர்களாகவே இருக்க வேண்டும்.

சிறந்த வெளிநாட்டு அகெடெமி விருதுக்கான படத்தை எல்லா அகெடெமி உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், அவர்கள் அப் படத்தை னுஏனு-யிலோ அல்லது தனிப்பட்ட முறை யிலோ பார்க்கக்கூடாது. மாறாக அகடெமி தன் தியேட்டரில் திரையிடப்படும்பொழுதுதான் பார்க்கவேண்டும். அவ்வாறு பார்க்கும்பொழுது அவர்கள் பெயர் பதிவு செய்யப்படும். பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே பின்னர் சிறந்த படத்துக்கான வாக்கை அளிக்க முடியும்.

பொதுவான சட்டதிட்டங்களோடு இது போன்று ஒவ்வொரு பிரிவுக்கும் விஷேச சட்டங் களும் உள்ளன. பிரதான பிரிவுகளுக் கான போட்டி படங்களை தேர்ந் தெடுப்பது அந்தந்த பிரிவுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆவர். உதாரணமாக சிறந்த ஒளிப் பதிவுக்கான போட்டிப் படங்களை தேர்ந்தெடுப்பது ஒளிப்பதிவாளர் களாக இருக்கும் உறுப்பினர்கள் ஆவர். இவர்கள் தங்கள் துறையில் விற்பன்னர் களாக இருப்பதால், சிறந்த ஒளிப்பதிவு என்பது வெறும் தரமான அழகான படப்பிடிப்பு என்று மட்டும் பார்க்கா மல், படத்தின் கதையை சொல்வதில், படத்தின் இயக்குநரின் பார்வையைக் கொண்டுவருவதில் எந்த அளவுக்கு ஒளிப்பதிவாளர்கள் பங்காற்றியிருக் கிறார்கள் என்பதையும் பார்ப்பார்கள். ஒவ்வொரு பிரிவிலும் உறுப்பினர்கள் இதுபோன்ற அளவு கோள்களை கடை பிடிப்பர்.

சிறந்த படத்துக்கான போட்டிப் படங்களை மட்டும் எல்லா உறுப்பினர்களும் தேர்வு செய்வர். 2010 வரை சிறந்த படத்துக்கான போட்டிப் படங் களின் எண்ணிக்கை வெறும் 5ஆகத்தான் இருந்தது. அதன்பின் அந்த எண்ணிக்கையை 10ஆக அதிகப் படுத்தினார்கள்.

இந்த ஆண்டு முதல் குறைந்தபட்சம் 5 என்றும், அதிகபட்சம் 10 என்றும் மாற்றிவிட்டார்கள். அதனால் இந்த ஆண்டு சிறந்த படத்துக்கான பிரிவுக்கு 9 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
சிறந்த படத்துக்கான போட்டி பிரிவு படங்களை தேர்ந்தெடுப்பதற்கும் சில விசேஷ விதிகள் உள்ளன. சிறந்த படத்துக்கான போட்டியில் ஒரு படம் இடம் பெறவேண்டுமானால் குறைந்தபட்சம் வாக்களித்த உறுப்பினர்களில் ஐந்து சதவீதத்தினராவது அப் படத்திற்கு முதலிடத்தைத் தந்திருக்க வேண்டும். உதாரணமாக 6000 உறுப்பினர்களில் 5000 உறுப் பினர்கள் வாக்களித்திருந்தால் குறைந்தது 250 பேரா வது ஒரு படத்திற்கு முதலிடம் தந்து வாக்களித் திருந்தால்தான் அப்படம் போட்டியில் பங்கு பெற முடியும்.

அதனால்தான் இந்த ஆண்டு அத்தனை பிரபல மில்லாத படங்களான The tree of life மற்றும் Ex-tremely loud and incredifly close  போன்ற படங்கள் போட்டியில் பங்கு பெறமுடிந்தது. அதே நேரத்தில் Brides maids போன்ற படங்கள் இந்த ஆண்டு அமெரிக்காவில் மிகச்சிறந்த தியேட்டர்களில் ஓடியிருந்தாலும் அந்தப் படம் சிறந்த படத்துக்கான போட்டி பிரிவில் இடம்பெறவில்லை. அந்தப் படத்திற்கு பலர் இரண்டாம், மூன்றாம் இடம் தந்திருப்பர். ஆனால் 250க்கும் குறைவானவர்களே அப்படத்திற்கு முதலிடம் தந்திருப்பர். அதனால் தான் அப்படம் போட்டி பிரிவில் இடம்பெற முடியாமல் போனது.

ஆஸ்கர் விருது என்பது இப்படி விசேஷ விதி களை மட்டும் கொண்டதில்லை. பல விநோதங் களையும் கொண்டது. 2005ஆம் ஆண்டு ஆங் லீ இயக்கிய ப்ரோக் பேக் மவுண்டெய்ன்  படத்துக்குத் தான் சிறந்த படத்துக்கான விருது வந்திருக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கைப்படி அதுதான் முதலிடத்தில் இருந்தது. ஆனால் அப்படம் ஆண் களின் ஓரினச் சேர்க்கைப் பற்றியதாக இருந்ததால் அப்படத்திற்கு சிறந்த படத்துக்கான விருது தருவதன் மூலம் எங்கே தவறான செய்தியை தந்துவிடுவோமோ என பயந்து கடைசி நேரத்தில் இரண்டாம் இடத்தில் இருந்த உசயளா படத்திற்கு சிறந்த படத்துக்கான விருதை அகடெமி தந்தது.

அகடெமியின் விருதாகத் தரப்படும் ஆஸ்கர் சிலை தங்க முலாம் பூசப்பட்ட செம்பு சிலை யாகும். ஓர் அடிக்கு சற்று கூடுதலான உயரமும், 4 கிலோ எடையும் கொண்ட இந்த சிலைக்கு ஏன் ‘ஆஸ்கர்’ என்ற பெயர் வந்தது என்பதற்கு பல கதை கள் உண்டு. அதில் அதிகமாக சொல்லப்படும் கதை இதுதான். அகெடெமி விருதின் ஆரம்ப நாட்களில், இந்த சிலையை பார்த்த அகெடெமி பெண் ஊழியர் ஒருவர் அந்த சிலை அவளின் மாமா ஆஸ்கர் மாதிரியே இருப்பதாக கூற, அதிலிருந்து அச்சிலையை எல்லோரும் ஆஸ்கர் என அழைக்க ஆரம்பித்தார்கள்.

ஆஸ்கர் விருதின் முக்கிய அம்சமே, விருது பெறும் நபர் மற்றும் படங்களின் பெயர் கடைசி வரை சஸ்பென்ஸாக வைத்திருப்பதுதான். முதல் அகெடெமி விருது விழாவில் விருது பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்டு விட்டதால் அந்த விழா முழுதும் நீண்ட சலிப்பு தரும் பேச்சாக இருந்தது. இதன் காரணமாக அடுத்த ஆண்டு விருது பட்டியலை விருது வழங்கும் தினம் மதியத்திற்கு மேல்தான் பத்திரிகைக்கு கொடுத்தனர். ஆனாலும் ஒரு பத்திரிகை அப்பட்டியலை தன் மாலைப் பதிப்பில் வெளியிட்டு விட்டது. இதன் பிறகுதான் தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் கடைசி நேரத்தில் கவரைப் பிரித்து விருது பெற்ற படம் மற்றும் நபர்களின் பெயரை அறிவிக்கும் முறை வந்தது.

இந்தப் பெயர்களை கடைசி வரை சஸ்பென் ஸாக வைத்திருக்க அகெடெமி பெரு முயற்சி எடுக் கிறது. அகெடெமியின் வாக்கு சேகரிப்பு மற்றும் வாக்கு எண்ணிக்கையை நிர்வகிக் கும் தனியார் நிறுவனத்தை சேர்ந்த இருவரை தவிர யாருக்குமே கடைசிவரை இப்பெயர்கள் தெரியாது. அப்படியா னால் விருது பெறும்போது அந்த விருதில் வாங்   கும் நபர்களின் பெயர் பொறிக்கப் பட்டிருக்குமா என்ற கேள்வி வரும்.

அகெடெமி விழா மேடையில் கலைஞர்கள் விருது வாங்கும்பொழுது, அதில் அவர்கள் பெயரோ, படத்தின் பெயரோ பொறிக்கப்பட்டிருக் காது. அது வெறும் விருது சிலைதான். விருது வாங்கி பேசிய பின்பு, இரு பெண்கள் விருது வாங் கிய நபரை மேடையின் இடது புறம் அழைத்துச் செல்வர். மேடையின் விளிம்பை அடைந்ததும் விருது சிலை அவரிடமிருந்து பறிக்கப்படும். அதில் அவர் பெயர், ஆண்டு, படத்தின் பெயர், விருதின் பெயர் பொறிக்கப் பட்டு, அடுத்த நாள் காலை மீண்டும் அவருக்கு வழங்கப்படும்.

இந்த விருதின் பொருள் ரீதியான மதிப்பு என்னவோ வெறும் பத்தாயிரம் ரூபாய் தான். ஆனால் விருது வாங்கிய பின் வாங்கிய நபரின் பெயரைப் பொறுத்து அதன் மதிப்பு பல மடங்கு உயர்கிறது. அதனால்தான் அவ்விருதை விருது வாங்குபவர்கள் யாருக்கும் விற்க முடியாதபடி அவர்களோடு அகெடெமி ஓர் ஒப்பந்தந்தை போடு கிறது. அந்த ஒப்பந்தத்தின்படி விருது வாங்கிய வர்கள் விருதை அகெடெமிக்கு மட்டுமே விற்க முடியும். அதுவும் வெறும் ஒரு டாலர் விலைக்கு. ஆரம்ப காலத்தில் இந்த ஒப்பந்தம் இல்லாததால் சில பழைய ஆஸ்கர் விருதுகள் பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன.

ஹஅயீயள என்றழைக்கப்படும் அகெடெமியின் மிகப் பிரபலமான பணி இந்த விருது வழங்-கும் நிகழ்ச்சிதான். காரணம் விருது வழங்கும் நிகழ்ச் சியை நேரடி ஒளிபரப்பாக 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கிட்டதட்ட 100 கோடி பேர் பார்க்கின் றனர். இதன் மூலம் அகெடெமிக்கு மிகப் பெரிய வருமானம் கிடைக்கிறது. இந்த வருமானத்தின் மூலம் அகெடெமி விருது வழங்கும் நிகழ்ச்சியைக் காட்டிலும் பல சிறப்பான பணிகளைச் செய்கிறது.

அதில் இரு முக்கிய பணிகளை குறிப்பிட்டாக வேண்டும். ஒன்று, அகெடெமியின் திரைப்பட சுருள் நூலகம் உலகின் மிகச்சிறந்த திரைப்பட நூலகம். இந்நூலகத்தை அகெடெமி வெகு அற்புத மாக பராமரிக்கிறது. இன்னொரு மிகமுக்கிய பணி, பழைய திரைப்படங்களின் நெகட்டிவ் படச் சுருளை கெட்டு போகாமல் கவனத்தோடு பாது காத்தல். காலத்திற்கேற்றபடி, புதிய தொழில்நுட்ப உத்திகளை பயன்படுத்தி படங்களின் மூலவடிவங் களை மாற்றியும் பாதுகாக்கிறது. இதற்காக அகெடெமி பெருந்தொகையை செலவு செய்கிறது. என்னைப் பொறுத்தவரை அகெடெமியின் அளப் பற்கரிய பணி என்பது இதுதான்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It