எங்கு காணினும்

தகித்துக் கொண்டிருக்கிறது

கோடை வெயில்

இப்புவியை முழுதாய்

எரித்துவிடும்படி...

பசுமை தொலைந்த

நகரத்து வீதிகளெங்கும்

பற்றி எரிகிறது

வெறுமையின் உஷ்ணங்களில்....

பட்டுப்போன மரங்களெல்லாம்

மழைக்காக தவமிருக்கின்றன

மிச்சம் தொட்டுக் கொண்டிருக்கும்

உயிரை காக்கும் படி....

ஆறு, குளம், ஏரியெங்கும்

பிசுபிசுக்கிறது

நெருப்பின் குழம்பு....

கோடையின் வெப்பத்தால்

வெயிலின் தகிப்பால்

இப்புவியின் எல்லாம்

பற்றி எரிகிறது

நம் ஏழை வீட்டின்

அடுப்பைத் தவிர....

 

Pin It