நல்ல சேதி சொல்ல வரும்
கொடுவா மீசைக்காரனுக்கு
பியானோவை போல
கருப்பு வெள்ளை பல் வரிசை..
மேனியெங்கும் சேலை
போர்த்திவரும் பூம்பூம் மாடுகளின்
கண்கள் பகலில் வீடுகளை வேவு பார்க்க..
இரவில் துவாரமிட்டு குறி சொல்லும்...
வேறோரு மனைவியின் சேலையை
நுகர்ந்து கொண்டிருப்பவனின்
நாசிகளை துளைக்கும் குறிகள்..
அவனை அம்மணப்படுத்தின..
கூட்டலும் கழித்தலுமாய்
ஜக்கம்மாவை கணக்கிட்டு கொள்ளும்
அவன் கண்களுக்குள் ஒழிந்திருக்கிறது
ஒரு நூற்றாண்டுகாலப் பெரும் பசி...
- சிபி சரவணன்