பொலிவியாவில்
சேயின் வீரம்
விளையாடிக் கொண்டிருக்கிறது.
கியூபாவை எதிர்த்த
அமெரிக்காவின் அதிகார பீடம்
அசிங்கப்பட்டுக்கிடக்கிறது.
சேயின் பதாகைதாங்கி
இதோ லட்சோயலட்சம்
இளைஞர்கள் எழுந்து நடக்கிறார்கள்
ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடக்கிறார்கள்.
சே......!
என்று சொன்னாலே சிலிர்க்கிறது!
எங்கள் இதயத்தில் - உன் உயிர் துடித்துக் கொண்டிருக்கிறது.....
நாங்கள் இழந்திருப்பது
உன் உடம்பை மட்டும்தான்......!
உன் மூச்சுப்பட்ட இடமெல்லாம்....
உன் பாதம்பட்ட பாதையெல்லாம்....
நீ உயிர்த்தெழுகிறாய்!...
பூமியில் புரட்சியின்
திசையைத் தேடும்
ஒவ்வொருவரும் உன்னோடு
பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
பெருத்த ஓசையுடன்
ஏகாதிபத்தியத்தின்
காதுகளைக் கிழித்து
உலகம் முழுவதும் -
உன் எச்சரிக்கை மணி
ஒலித்துக்
கொண்டிருக்கிறது!..
நீ...
வாழ்ந்து
கொண்டிருக்கிறாய்.