உலகத்தில், 1917இல் முதன்முதலாக சமதர்மப் புரட்சி செய்து, இரஷ்யாவை சமதர்ம நாடாக மாற்றி அமைத்தவர் புரட்சியாளர், லெனின்.
அவர் 1924-இல் மறைந்தார். அவர் காலத்து ஆட்சி யிலேயே-அரசு நிகழ்ச்சிகளிலிருந்து மதம் நீக்கப்பட்டது. கல்வித் திட்டத்திலிருந்து மதம் நீக்கப்பட்டது; மத நிறு வனங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அனைவர்க்கும் கல்வி, அனைவர்க்கும் இலவச மருத்துவம் என்கிற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
அடுத்து, மாவோ தலைமையில் 1949இல் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி மலர்ந்தது.
கிழக்கு அய்ரோப்பிய நாடுகள் சிலவும் சோவியத்து இரஷ்யாவின் அரவணைப்பில் சமதர்மக் கொள்கை களை நடைமுறைப்படுத்தின.
ஆனால் ஏகாதிபத்திய நாடுகளிடையே இருந்த ஒற்றுமையும் புரிதலும் உலக சமதர்ம நாடுகளி டையே மலரவில்லை.
அமெரிக்க ஏகாதிபத்தியம் சமதர்ம நாடுகளைப் பலவீனப்படுத்த எல்லா முயற்சிகளையும் செய்தது.
மதத்தை மீட்டெடுப்பது என முயன்று சோவியத் தில் ஊடுருவியது; பெண்களைப் பயன்படுத்தி உளவறி யச் செய்து சீனாவின் போக்கை 1986, 1987களில் மாற்றியது.
சோவியத்து சமதர்ம ஆட்சியை கார்ப்பச்சால் 1990 உருப்படியில்லாமல்-உருவில்லாமல் அழித்தார்.
ஆனால் 1959இல் பிறகு, சமதர்ம ஆட்சியை கியூபாவில் நிறுவிய பிடல் காஸ்ட்ரோ, 1961 முதல் அமெரிக்காவுடன் ஆன எல்லா உறவுகளையும் அறுத்துக் கொண்டார்.
அவர் உடல்நலம் கெட்டவுடன், தாமே முன்வந்து, தம் தம்பி ரவுல் காஸ்ட்ரோவை கியூபாவின் அதிப ராக்கினார்.
ஒபாமாவும், ரவுல் காஸ்ட்ரோவும் முதன்முதலாக அய்க்கிய நாடுகள் அவையின் சார்பில் 2013 திசம் பரில் நடைபெற்ற மண்டேலா நினைவு நாள் நிகழ்ச்சி யில் சந்தித்தனர்; கைகுலுக்கினர்; அப்போது சில செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர்.
2013 திசம்பர் முதல் கடந்த 18 மாதங்களில் கியூபா - அமெரிக்கா இடையே நடைபெற்ற இரகசியப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இப்போது பனாமா நகரில் நடந்த - “35 அமெரிக்க நாடுகளுக்கு (Americas) இடையே ஆன உச்சி மாநாட்டி”ல், 10-4-15 வெள்ளிக் கிழமை ரவுல் காஸ்ட்ரோவும், ஒபாமாவும் கைகுலுக் கிக் கொண்டனர். இதனால் கியூபாவின் இப்போதைய போக்கில் மாற்றம் வருமா? என்பது நாம் அனைவரும் சிந்திக்கத்தக்கது.
1. 1962இல் துண்டிக்கப்பட்ட வணிக உறவை மீட் டெடுப்பது;
2. 1962இல் மூடுப்பட்ட தூதுவர் அலுவலகங்களை மீண்டும் திறப்பது;
இவை அமெரிக்காவின் திட்டங்கள்.
கியூபா நாடு பயங்கரவாதத்தைத் தூண்டும் நாடு களில் ஒன்று என அமெரிக்கா பட்டியலிட்டிருக்கிறது. அந்தப் பட்டியலிலிருந்து கியூபா நாட்டின் பெயரை நீக்க வேண்டும் என்பதும்; குவாண்டநாமோ விரிகுடா வில் நிறுவப்பட்டுள்ள கப்பல் தளத்தை அமெரிக்கா மூட வேண்டும் என்பதும் கியூபாவின் உடனடிக் கோரிக் கைகள்.
இனி, எல்லோருக்கும் இலவசக் கல்வி, எல்லோ ருக்கும் இலவசமான - தரமான வைத்தியம் என்கிற கியூபாவின் சமதர்மக் கொள்கை மாறிவிடுமா என் பதைப் பற்றி நாம் கூர்ந்து சிந்திக்க வேண்டும்.