அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: விண்வெளி
டி.டி.எச். சேவைக்கான சிறிய டிஷ் ஆன்டெனாவை ரேடியோ தொலைநோக்கியாக பயன்படுத்தி மழை மேகத்தை கண்டறியும் புதிய வசதியை உருவாக்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர் ஜெ. பெனலன் (69).
இவரது இந்த புதிய கண்டுபிடிப்புக்கு தேசிய அளவிலான அமைப்புகளின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சென்னை அம்பத்தூர் அருகில் உள்ள பாடியில் வசித்து வருபவர் ஜெ. பெனலன். மோட்டார் மெக்கானிக் பிரிவில் பட்டம் பெற்ற இவர் பள்ளி பருவத்தில் பொ. திருகூடசுந்தரனார் எழுதிய அறிவியல் ஆய்வுகள் குறித்த புத்தகத்தைப் படித்தது முதல், அறிவியல்பால் ஈர்க்கப்பட்டார்.
1953-ம் ஆண்டு முதல் இவருக்கு வானியல் ஆய்வில் ஈடுபாடு அதிகரித்தது. இதன் காரணமாக பல்வேறு முக்கிய விண்ணியல் ஆய்வு நிகழ்வுகளில் பங்கேற்றார் பெனலன். வானியல் ஆய்வுகளை அனைத்துத் தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் அவற்றை எளிமைப்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறியும் வழிகளைத் தேடினார் இவர். இந்த தேடலின் விளைவாக வானியல் ஆய்வில் முக்கியமானதாக கருதப்படும் ரேடியோ தொலைநோக்கியை எளிமைப்படுத்தும் வழிகளை கண்டுபிடிக்கும் பணிகளில் அவர் ஈடுபட்டார்.
வானியல் ஆய்வில் பொதுவாக கண்ணாடி தொலைநோக்கி மற்றும் ரேடியோ தொலைநோக்கி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. கண்ணாடி தொலைநோக்கி மூலம் நட்சத்திரங்கள், கோள்கள் ஆகியவற்றை கண்களால் காண முடியும். மேகக் கூட்டம் அதிகமாக இருக்கும் சமயங்களில் இதனைப் பயன்படுத்த முடியாது.
நட்சத்திரங்கள், கோள்கள் ஆகியவை பிரதிபலிக்கும் ஒளி அளவின் அடிப்படையில் பெறப்படும் எண்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவை ரேடியோ தொலைநோக்கிகள்.
ஒரு குறிப்பிட்ட திசை நோக்கி வைக்கும்போது அந்த திசையில் கடந்து செல்லும் நட்சத்திரங்கள், கோள்கள், சூரியன் ஆகியவற்றின் நிலைகளை அறிந்து கொள்ளலாம். ரேடியோ தொலைநோக்கிகளை உருவாக்குவது மிகுந்த செலவு மிக்கதாகவும் உருவத்தில் பெரிதானதாகவும் இருப்பதால் இதனை எளிமைப்படுத்த வேண்டிய அவசியத்தை பெனலன் புரிந்து கொண்டார்.
பல ஆண்டுகள் ஆய்வுக்குப் பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை செயற்கைக்கோளில் இருந்து நேரடியாக பெற உதவும் டி.டி.எச். ஒளிபரப்பு முறையில் பயன்படுத்தப்படும் டிஷ் ஆன்டெனா இதற்கு உதவும் என தெரியவந்தது.
டிஷ் ஆன்டெனாவில் இருந்து வரும் வயரை செட்டாப் பாக்ஸ்-க்கு கொண்டு சென்று அதில் இருந்து வயரை இதற்காக மிகக் குறைந்த செலவில் உருவாக்கப்பட்டுள்ள கருவிக்கு கொண்டு வந்து அதில் இருந்து மல்டி மீட்டருடன் வயரை இணைக்க வேண்டும். டிஷ் ஆன்டெனா எந்த திசை நோக்கி வைக்கப்பட்டுள்ளதோ அந்த திசையில் வானில் நிகழும் மாற்றங்களை எண்களின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
மழை மேகம், சூரியன், வானியல் நிகழ்வுகள் மட்டுமல்லாது, வானில் ஏற்படும் ஹைட்ரஜன் மேகங்களையும் இதன் மூலம் ஆய்வு செய்ய முடியும். இதன் மூலம் வானில் உருவாகியுள்ள மேகக் கூட்டம் மழை தரும் மேகமா? அல்லது மழை தராத மேகமா? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
நட்சத்திரங்கள், கோள்களுக்கு உள்ள எண்களைப் போன்று மேகத்துக்கும் உள்ள எண் மதிப்பீடு அடிப்படையில் துல்லியமாக கண்டறிய முடியும். இதன் மூலம் வானிலைத் துறை பணிகளையும் எளிமைப்படுத்த முடியும். இந்த எளிய முறையில் பெரிய அளவில் ரேடியோ தொலைநோக்கி அமைத்தால் ஆகும் செலவில் மிகக் குறைந்த அளவே இதற்கு செலவாகும். மேலும், பள்ளிகளில் இவற்றை உருவாக்குவதன் மூலம் மாணவர்களுக்கு வானியல் நிகழ்வுகளை மிகக் குறைந்த செலவில் எளிய முறையில் கற்பிக்க முடியும்.
அதிகபட்சம் ரூ. 150க்குள் இந்த முறையில் ரேடியோ தொலைநோக்கியை உருவாக்க முடியும் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்கீகாரம்: ரேடியோ தொலைநோக்கி தயாரிப்பில் முக்கிய மைல் கல்லாகக் கருதப்படும் இந்த முறை சரியானது என ஊட்டியில் உள்ள டாடா அடிப்படை ஆய்வு மையத்தின் வானியல் மையம் அங்கீகரித்துள்ளது. இதேபோல ஹைதராபாத்தில் உள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தின் விண்ணியல் ஆய்வு மையமும் இது சரியானது என பாராட்டி அங்கீகரித்துள்ளது.
இந்த இரு நிறுவனங்களின் அங்கீகாரத்தின் மூலம் டிஷ் ஆன்டெனாவை ரேடியோ தொலைநோக்கியாக பயன்படுத்துவதற்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சுமார் 20 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் இதுபோன்ற அமைப்பை நிறுவி, மிகப்பெரிய அளவிலான விஎல்ஏ எனப்படும் ரேடியோ தொலைநோக்கியை உருவாக்கலாம்.
2009-ம் ஆண்டு அமெச்சூர் ரேடியோ தொலைநோக்கி ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிகளுக்கு நிதி உதவி அளித்து இத்தகைய ரேடியோ தொலைநோக்கியை பெரிய அளவில் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றார் பெனலன்.
இன்னும் படிக்க:http://www.viparam.com/index.php?news=14927
http://del.icio.us/post?url=http://www.viparam.com/index.php?news=14927&title=மழைமேகத்தைகண்டறியபுதியவசதி: சென்னைவிஞ்ஞானிக்குதேசியஅங்கீகாரம்
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: விண்வெளி
காலனி ஆதிக்க நாடுகள் சந்திரனிலும் கால் ஊன்றவேண்டும் என்று ஆசைப்படலாம். ஆனால் அந்த ஆசை நிறைவேறுவது அவ்வளவு எளிதல்ல.
சந்திரனில் வசிக்கவேண்டுமென்றால் சுவாசிக்க காற்று வேண்டும்...
குடிக்க நீர் வேண்டும்...
உண்ண உணவுவேண்டும்...
சரியான காற்றழுத்தத்தில் வசிப்பிடம் வேண்டும்...
எரிபொருள் வேண்டும்...
இவ்வளவு வசதிகளையும் சந்திரனிலேயே தேடிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பூமியிலிருந்து சந்திரனுக்கு கொண்டு செல்லும் ஒவ்வொரு பவுண்டு எடைக்கும் 50,000 டாலர்கள் செலவு பிடிக்கிறது. ஒரு காலன் தண்ணீரின் எடை எட்டு பவுண்டுகள். ஒரு காலன் தண்ணீரை பூமியிலிருந்து சந்திரனுக்கு கொண்டு செல்ல ஆகும் செலவு 400,000 டாலர்கள்.
சந்திரனில் உள்ள பாறைகளில் ஆக்சிஜன் அடக்கம். வெப்பத்தையும் மின்சாரத்தையும் பயன்படுத்தி ஆக்சிஜனை எளிதாக பெற்றுவிடலாமாம். சந்திரனில் தண்ணீர் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடாது. சந்திரனின் தென் துருவத்தில் பனிக்கட்டி வடிவத்தில் நீர் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தண்ணீர் சுரங்கங்களை வெட்டி நீரை எடுத்துக் கொள்ளலாம். நீரை ஹைட்ரஜனாகவும் ஆக்சிஜனாகவும் பிரித்து ராக்கெட்டுகளுக்கு தேவையான எரிபொருளை சம்பாதித்துக் கொள்ளலாம்.
சந்திரனில் தண்ணீர் கிடைக்காமற்போனால் பூமியிலிருந்துதான் நீரைக் கொண்டு செல்லவேண்டும். திரவ ஹைட்ரஜனை பூமியிலிருந்து கொண்டு போகவேண்டும். அதனுடன் சந்திரனின் பாறைகளில் இருக்கும் ஆக்சிஜனைக் கலந்து, நீரை தயாரித்துக் கொள்ளலாம். இந்த நீர் தயாரிக்கும் முயற்சியின் போதே மின்சக்தியையும் பெற்றுக் கொள்ளமுடியும் என்பது மகிழ்ச்சியான செய்தி.
இவையனைத்தும் சாத்தியமாகக் கூடிய செலவில் அமைந்தால், சந்திரனிலும் அமெரிக்கா தனது காலனி ஆதிக்கத்தை விரிவாக்கும்.
மேலும் படிக்க: http://science.howstuffworks.com/what-if-moon-colony.htm
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: விண்வெளி
நூறு நபர்களை சந்திரனில் குடியமர்த்த என்ன செலவாகும்? 15 பில்லியன் டாலர்கள் செலவாகுமாம்.
ஒரு மனிதன் ஓர் ஆண்டில் சாப்பிடும் உணவின் எடை 450 பவுண்டுகள். 100 பேர்களுக்குத் தேவையான உணவை சந்திரனுக்கு கொண்டு செல்ல அதிகம் செலவாகும் என்பதால் சந்திரனிலேயே உணவை விளைவித்துக்கொள்ள முடியுமா? முடியும்.
விவசாயம் செய்வதற்கு கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன், ஹைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய தனிமங்கள் தேவை. இந்த தனிமங்களை ஒருமுறை சந்திரனுக்குக் கொண்டு சென்று விவசாயம் செய்துவிட்டால் போதுமாம். சந்திரனில் குடியிருக்கும் மனிதர்களின் கழிவுகளில் இருந்து மறு சுழற்சி முறையில் அடுத்தடுத்த சாகுபடிகளுக்கு இந்த தனிமங்களை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்
காற்றடைத்த குடியிருப்புகள்தான் தொடக்கத்தில் பயன்படுத்தப்படுமாம். செராமிக் மற்றும் உலோகங்களைப் பயன்படுத்தி வீடுகளை அமைக்க ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
சந்திரனில் மின்சக்தி தட்டுப்பாடு இருக்காது போல் தோன்றுகிறது. சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் மின்சாரமும், ஹைட்ரஜன் ஆக்சிஜன் சேர்க்கையால் பெறப்படும் மின்சாரமும் தடையின்றி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சந்திரனில் கிடைக்கக்கூடிய யுரேனியத்திலிருந்து அணுமின்சக்தி பெறவும் வாய்ப்பு இருக்கிறது.
இவ்வளவு வசதிகள் இருந்தும் சந்திரனில் மனிதன் குடியேற இன்னும் என்ன தடை?
முதல் குடியிருப்பை தொடங்குவதில்தான் தடை.
சந்திரனுக்கு போகும் மனிதனின் எடை 200 பவுண்டுகள்.
முதன்முதலாக உணவிற்காக கொண்டு செல்லப்படும் தனிமங்கள் 500 பவுண்டுகள்.
தங்குமிடமும், கருவிகளும் 1,000 பவுண்டுகள்.
உற்பத்தி செய்யும் கருவிகள் 1,000 பவுண்டுகள்.
ஏறத்தாழ ஆள் ஒன்றுக்கு 3000 பவுண்டு வீதம் 100 பேருக்கு 300,000 பவுண்டு எடை சந்திரனுக்கு கொண்டு செல்லப்படவேண்டும். ஒரு பவுண்டு எடையை சந்திரனுக்கு சுமந்து செல்ல 50,000 டாலர்கள் செலவு பிடிக்கிறது. ஆக, 15 பில்லியன் டாலர் இருந்தால் சந்திரனில் நூறுபேர்கள் கொண்ட ஒரு காலனி அமைப்பதைப் பற்றி சிந்திக்கலாம்.
செலவுக்கணக்கு இத்துடன் முடிந்து விடவில்லை. விண்வெளி நிலையத்தை ஏற்றி இறக்குதல், ஆட்களைத் திரட்டுதல், பயிற்சியளித்தல், நிர்வாகம், விலைவாசி ஏற்றத்தாழ்வுகள், அனாமத்து செலவினங்கள் என்று எல்லா செலவுகளையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் பலநூறு பில்லியன் டாலர்கள் செலவழித்தால் தான் சாத்தியப்படும்.
அதனால்தான் தாமதம்.
இன்னும் படிக்க... http://science.howstuffworks.com/what-if-moon-colony.htm
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- புழல் தி.பாலகுமார்
- பிரிவு: தொழில்நுட்பம்
மலர்விழி: ஒரு ஆச்சரியமான செய்தியைப் படித்தேன். ஓஎம்ஆர் சாலையில் உள்ள உணவகத்தில், ரோபோ வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுகிறது.
மலர்விழி: அற்புதம். நான் ரோபோ மற்றும் ரோபோ 2.0 திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். சில தொலைக்காட்சித் தொடர்களில் வரும் ரோபோக்களை வியந்தேன். இவை கற்பனை என்று நினைத்தேன். இது நிஜமாகும் என்று நான் நினைக்கவில்லை. ரோபோ என்றால் என்ன? இயந்திரமா? அல்லது ஒரு இயந்திர மனிதனா? அல்லது ஒரு கணினியா?
விக்ரமன்: எனக்கு ரோபோக்களைப் பற்றி ஓரளவு தெரியும். அன்றாட வாழ்வில் ரோபோக்களுக்குப் பல உதாரணங்கள் உள்ளன. கூட்டாகச் செயல்படும் ரோபோக்கள் கோபோட்கள் என்று அழைக்கப்படுகின்றன. வீட்டு உபயோக ரோபோக்கள், மருத்துவ ரோபோக்கள், தொழில்துறை ரோபோக்கள், பொழுதுபோக்கு ரோபோக்கள், கல்வி ரோபோக்கள் மற்றும் மீட்பு ரோபோக்கள் ஆகியன இப்போது பயன்படும் சில ரோபோக்கள் ஆகும். சொல்வது சரிதானே?
விக்ரமன்: ரோபோடிக்ஸ் என்றால் என்ன? ஏதும் விளையாட்டா?
விக்ரமன்: ரோபோக்களின் நோக்கம் என்ன? பொழுதுபோக்கா?
மலர்விழி: ரோபோவை முதலில் கண்டுபிடித்து உருவாக்கியது யார்?
மலர்விழி: நவீன அல்லது ஆரம்பகால ரோபோட்டிக்ஸின் தந்தை யார்?
விக்ரமன்: இந்தத் துறையில் இந்தியாவின் நிலை என்ன? எப்போது வந்தது? இந்தியாவில் ரோபோட்டிக்ஸின் தந்தை யார்?
விக்ரமன்: ரோபோ எப்படி இயங்கியது? எப்படி நடந்தது, பேசியது? பொருட்களை எடுத்தது? தலையைத் திருப்பியது?
விக்ரமன்: ஒரு அறிவியல் இதழில் ரோபோக்கள் பற்றிப் படித்தேன். ரோபோக்கள் இணைப் பாதுகாவலர், இணைவாசி, இணை ஆய்வாளர் மற்றும் இணைப் பணியாளராகப் பயன்படுகின்றன. பாதுகாப்பு, சேவைகள், தளவாடங்கள், உற்பத்தி, மேக்ரோ, மைக்ரோ மற்றும் நானோ ஆட்டோமேஷன், மருத்துவ அறுவை சிகிச்சை, எலும்பியல் செயற்கை உறுப்புகளைப் பொருத்தி மறுவாழ்வளித்தல், ஆளில்லா வாகனங்கள், அறிவார்ந்த போக்குவரத்து மற்றும் கண்காணிப்பு ஆய்வு ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. அறிவார்ந்த இணை ரோபோ மற்றும் மனித ரோபோ இடைமுகங்களாகப் பயன்படுத்தப்படுகிறது.
மலர்விழி: ரோபோ மனிதர்கள் போலத் தன் புலன்களைப் பயன்படுத்துகிறது. இது எப்படி சாத்தியமாகிறது? ஏதேனும் சிறப்பு நுட்பங்களா? அல்லது கருவிகளா?
மலர்விழி: சென்சார்கள் என்பவை அதன் புலன் உறுப்புகள், அதனால் வெப்பம், புகை, ஒளி ஆகியன உணர முடியும். ஒரு ரோபோவிற்குச் சிறந்த சென்சார் எது?
விக்ரமன்: சென்சார்கள் தவிர, ரோபோவின் மற்ற முக்கிய பாகங்கள் என்ன?
மலர்விழி: ரோபோக்களில் பல வகைகள் உள்ளனவா?
விக்ரமன்: ரோபோக்களின் மூளை எது? அதாவது ரோபோ மனசு எது?
மலர்விழி: ரோபோக்கள் ஆண்பால் வடிவம் மட்டும்தானா?
வீரபிரதாபன்: கைனாய்டுகள் என்பவை பெண் பாலினமாக வடிவமைக்கப்பட்ட மனித உருவ ரோபோக்களாகும். அவை அறிவியல் புனைகதைத் திரைப்படங்களிலும் கலையிலும் பரவலாகத் தோன்றுகின்றன. பெண் ஆண்ட்ராய்டுகள், பெண் ரோபோக்கள் அல்லது ஃபெம்பாட்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. சில ஊடகங்கள் ரோபோடெஸ், சைபர்டால், ஸ்கின் ஜாப் அல்லது ரெப்ளிகன்ட் போன்ற சொற்களையும் பயன்படுத்தியுள்ளன. சோபியா ஒரு ஃபெம்பாட்.
வீரபிரதாபன்: அடிப்படையில் ரோபோக்கள் என்பவை வளர்ப்பு விலங்குகளின் வாழ்க்கையின் அடிப்படையில் மனிதனால் உருவாக்கப்பட்ட பதிப்புகள்; அவை மனித மற்றும் விலங்குகளின் நடத்தையைப் பிரதிபலிக்கும் இயந்திரங்கள். ரோபோ நாய்கள் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. ட்ரோன்கள் என்பவை ரோபோ பறவைகள். நவீன ரோபோட்டிக்ஸ் விஞ்ஞானிகள் அமெரிக்காவில் ரோபோ பூனை, ரோபோ சிலந்தி என்று சிலவற்றுக்கு வடிவம் கொடுத்து உருவாக்கினர். மவுஸ் ஒரு ரோபோ எலிதானே?
வீரபிரதாபன்: ரோபோவில் மூன்று முக்கிய பாகங்கள் உள்ளன. ஏறக்குறைய அனைத்து வகை ரோபோக்களிலும் ஒரே மாதிரியானவை அடிப்படையானவை.
வீரபிரதாபன்: நிச்சயமாக, கார் என்பது ஒரு வகை ரோபோதான். அதில் காற்று ஓட்ட சென்சார், உள்ளிழுக்கும் காற்றின் வெப்பநிலை சென்சார், த்ராட்டில் சென்சார் போல எட்டு முக்கிய சென்சார்கள் உள்ளன. கட்டுப்படுத்தி மூளை என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு கணினி நிரலால் இயக்கப்படுகிறது. இது நகரும் பாகங்களுக்கு வேலையைச் செய்வதற்கான கட்டளைகளை வழங்குகிறது. இயந்திர பாகங்கள் வேலையைச் செய்கின்றன. இயந்திர பாகங்கள் இரண்டாவது முக்கியப் பகுதியாகும். மோட்டார்கள், பிஸ்டன்கள், பற்றிகள், சக்கரங்கள் மற்றும் பற்சக்கரங்கள் ஆகியவை கார் ரோபோவை நகரவும், பிடிக்கவும், திருப்பவும் மற்றும் தூக்கவும் செய்கின்றன. மூன்றாவது பகுதியான உணர்விகள், சென்சார்கள், ரோபோவிற்குச் சுற்றுப்புறத்தைப் பற்றித் தெரிவிக்கின்றன. இது சுற்றியுள்ள பொருட்களின் அளவுகள் மற்றும் வடிவங்கள், பொருட்களுக்கு இடையிலான தூரம் மற்றும் திசைகளையும் தீர்மானிக்க உதவுகிறது. கட்டுப்படுத்தி என்பது ஆற்றல் மாற்றும் அலகு ஆகும். இது இன்ஜின் மற்றும் கையாளி மேனிபுலேட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது பயனர் இடைமுகத்திற்காக இயக்கிகள் எனும் ஆக்சுவேட்டர்கள் மற்றும் உணர்விகளுடன் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது.
வீரபிரதாபன்: ரோபோக்கள் பேட்டரிகள், சூரிய சக்தி மற்றும் ஹைட்ராலிக்ஸ் மூலம் இயக்கப்படுகின்றன. ஆக்சுவேட்டர்கள் ஆற்றலை இயக்கமாக மாற்றுகின்றன. ஆக்சுவேட்டர்கள் சுழற்சி அல்லது நேர்கோட்டு இயக்கத்தை உருவாக்குகின்றன. சக்கரங்கள், கைகள், விரல்கள், கால்கள், சென்சார்கள், கேமரா, ஆயுத அமைப்புகள் போன்ற ரோபோக்களின் பாகங்களை இயக்குவதற்கு மின் மோட்டார்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுபவை ஏசி மோட்டார்கள், பிரஷ்டு டிசி மோட்டார்கள், பிரஷ்லெஸ் டிசி மோட்டார்கள், கியர்டு டிசி மோட்டார்கள் ஆகும். அவற்றின் வழியே மின்சாரம் பாய்கிறது. பீசோ மோட்டார்கள் மற்றும் அல்ட்ராசோனிக் மோட்டார்கள் முக்கியமாகத் தொழில்துறை ரோபோக்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து இயந்திரங்களும் இயங்குவதற்கு ஆற்றல் தேவை.
வீரபிரதாபன்: நியூமேடிக் ஏர் மசில்ஸ் என்பவை, உள்ளே காற்று செலுத்தப்படும்போது சுருங்கி விரியக்கூடிய கருவிகளாகும். மனித தசையின் செயல்பாட்டைப் பிரதிபலிக்கக் கூடியது. அவற்றுக்குள் காற்று உறிஞ்சப்படும்போது, அவை கிட்டத்தட்ட 10 சதவீதம் சுருங்குகின்றன. மசில் வயர்கள் என்பவை, வடிவ நினைவுக் கலப்பு உலோகங்களால் செய்யப்பட்ட மெல்லிய கம்பி இழைகள் ஆகும். உள்ளே காற்று உறிஞ்சப்படும்போது, அவை ஐந்து சதவீதம் வரை சுருங்கக் கூடியவை. ரோபோவுக்கும் தசைகள், நரம்புகள் உள்ளன.
வீரபிரதாபன்: சில உயிரினங்களுக்குத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, அவற்றை சில குறிப்பிட்ட நோக்கங்களுக்காகக் கருவிகளாகப் பயன்படுத்தினர். இத்தகைய உயிரியல் சார்ந்த கருவிகள் ரியோ பாட்ஸ் அல்லது சைபோர்க்குகள் என்று அழைக்கப்படுகின்றன. 2011-இல், சில சைபோர்க் கரப்பான் பூச்சிகள் உருவாக்கப்பட்டு, மனிதர்களால் சென்றடைய முடியாத இடங்களில் உள்ள ஆபத்துகள் குறித்த தரவுகளைச் சேகரிக்கப் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்க வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பரணிதரன் தலைமையிலான விஞ்ஞானிகள் ஒரு தொழில்நுட்பத்தை வடிவமைத்தனர். அவர்கள் ஒரு வெட்டுக்கிளியைச் சைபோர்க் ரோபோவாக மாற்றினர். அவை இரசாயன உணர்விகள் மூலம் குண்டுகளில் உள்ள அபாயமான வேதிமங்களை முகர்ந்து உணர்கின்றன. தொழில்துறையில் அவற்றின் பங்கு அதிகம். ஆறு வகையான தொழில்துறை ரோபோக்கள் கார்டீசியன், செலக்டிவ் காம்ப்ளையன்ஸ் அசெம்பிளி ரோபோ ஆர்ம், சிலிண்டிரிக்கல், டெல்டா, போலார், மற்றும் செங்குத்தாக இணைக்கப்பட்டவை ஆகும். இந்த ஆறு அச்சு ரோபோக்கள் ஆர்க் வெல்டிங், ஸ்பாட் வெல்டிங், மெட்டீரியல் ஹேண்ட்லிங், மெஷின் டெண்டிங் மற்றும் பிற பயன்பாடுகளுக்கு மிகவும் ஏற்றவை.
வீரபிரதாபன்: ரோபோக்களில் மனிதனைப் போன்ற நடத்தையைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு முகத்தை அடையாளம் காணுதல், கணினி விளையாட்டுகளில் விளையாடுபவரின் செயல்களுக்குப் பதிலளித்தல், முந்தைய செயல்களின் அடிப்படையில் முடிவுகள் எடுத்தல், சாலைப்போக்குவரத்து நெரிசலின் அடர்த்தியைப் பகுப்பாய்வு செய்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு வார்த்தைகளை மொழிபெயர்த்தல் என்றெல்லாம் செயல்படுகிறது. செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடுகள் அழுத்த உணர்விகள், நிலை மற்றும் வெப்பநிலை உணர்விகள், ஒளியியல் மற்றும் பாய்வு உணர்விகள், மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த உணர்விகள், இரசாயன மற்றும் வாயு உணர்விகள் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன. மனிதன் பார்வை அமைப்பு போன்ற காட்சிவழி தொலைஉணர்வு அமைப்பு ஒரு வகை தொலை உணர்வு அமைப்பாகும். ஒளியியல் தொலை உணர்வு, அகச்சிவப்பு தொலை உணர்வு, நுண்ணலை தொலைஉணர்வு, ரேடார் தொலைஉணர்வு, செயற்கைக்கோள் தொலைஉணர்வு, வான்வழி தொலைஉணர்வு, ஒலியியல் மற்றும் அண்மை ஒலியியல் தொலைஉணர்வு ஆகியன தொலைஉணர்வின் ஆறு வேறு வகைகள்.
வீரபிரதாபன்: அமெரிக்க நிறுவனம் ஒன்று ஃபிப்பி என்ற சமையல் ரோபோவை உருவாக்கியது. சமையல்காரர் ஃபிரைஸ் மற்றும் கிரேவியை வாணலியில் ஊற்றுவார். ஃபிப்பி அதைச் சமைத்து, தட்டில் மாற்றிப் பரிமாறுகிறது. பின்னர் அந்த நிறுவனம் ஃபிப்பி 2.0 என்ற புதிய மாடல் சமையல் ரோபோவை வெளியிட்டது. இது முதல் பதிப்பை விட இரண்டு மடங்கு வேகத்தில் சமைக்கிறது. அதனால் ஓவனைக் கையாள முடியும்; சமையல் முறையை, கலவையின் சரியான தன்மையையும் கற்றுக் கொள்கிறது. காய்கறிக் கழிவுகளையும் சமையலறைக் குப்பைகளையும் மூலையில் உள்ள குப்பைத் தொட்டியில் போடுகிறது. ஃபிப்பி ரோபோவுக்கு ஒரே ஒரு கைதான் உள்ளது. கால்கள் இல்லை. அது கூரையில் பொருத்தப்பட்டு நகர்கிறது மற்றும் சுழல்கிறது. ரோபோ சமையலறை என்பது மாடுலர் சமையலறை கருத்தின் அடுத்த பரிமாணமாகும். ரோபோக்கள் நமது சமையலறைகளையும் வீடுகளையும் எதிர்காலத்தில் ஆளக்கூடும். ரோபோ செஃப்.
வீரபிரதாபன்: மெமோ எனப் பெயரிடப்பட்ட புதிய மாடல் புல்வெட்டும் ரோபோ வாகனம், ஹோண்டா நிறுவனத்தால் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தடைகளைக் கண்டறியும் தானியங்கி சென்சார்களுடன் இது மேம்படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்பட்டுள்ளது.
வீரபிரதாபன்: கற்பனை எதிர்காலத்தில் உண்மையாகலாம். இசைக்குறிப்புகளில் உள்ள மிகச்சிறிய வேறுபாடுகளை முடிந்தவரை துல்லியமாகப் புரிந்து கொண்டு பிரித்தறியும் வகையில், ரோபோக்களில் உள்ள உணரிகளை மேம்படுத்துவதற்காக ரோபோட்டிக்ஸ் விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வெற்றியை நெருங்குகின்றனர்.
மலர்விழி: சோபியா பாட்டுப் பாடும், இன்னொரு ரோபோ வீணை வாசிக்கும், இன்னொன்று நடனமாடும். அந்தத் தருணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
வீரபிரதாபன்: இயற்கை பேரிடர்களைச் சமாளிக்க மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் பல ரோபோக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. சிரியா நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, பல மனித உயிர்களைக் காப்பாற்ற அவற்றைப் பயன்படுத்தலாம். நேபாளப் பேரழிவில் ரோபோக்களைப் பயன்படுத்த முடியவில்லை. அது துரதிர்ஷ்டம். ஆயினும் கவலைப்படாதீர்கள். எதிர்காலத்தில், இயற்கைப் பேரிடர்களின் போது அவற்றைக் கையாளவும் மனிதர்களை மீட்கவும் ரோபோக்கள் பரவலாகப் பயன்படுத்தப்படும். நமது இளம் ரோபோட்டிக்ஸ் விஞ்ஞானிகள் அந்தச் சாதனைகளுக்காகத் தயாராகி வருகின்றனர். விஞ்ஞான அறிவுக்கு வானமே எல்லை என்று நம்பிக்கைக் கீற்றுடன் தயாராக இருப்போம். என் அன்பு இளம் விஞ்ஞானிகளே, நீங்கள் தயாரா?
- விண்வெளி முதல் சமையலறை வரை: எங்கும் வந்துவிட்ட AI
- AI-யின் தவறான தகவல்... போர் ஏற்படும் ஆபத்து
- ஏஐ-யின் கண்களும் அதன் வகைகளும்
- AI: வரலாறும் அதன் நம்பகத் தன்மையும்
- நம்முடனே இருக்கும் AI
- AI-யை நான் ஏன் "நண்பா" என்று அழைக்கிறேன்?
- ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட பாலாடைக் கட்டி
- அழிந்த உயிரினங்கள் பேசினால்...!
- சீரற்ற சுவருடைய கட்டிடங்கள்
- ஜப்பானின் மாஜிக் புல்லட்
- மனித உடலில் இயந்திர உறுப்புகள்
- செயற்கை நுண்ணறிவு தேடும் அணுஉலை மின்சாரம்
- இயற்கையை அறிய உதவும் செயலிகள்
- ஆய்வக மீன் இறைச்சி
- அண்டார்டிகாவை ஆராயும் ஆளில்லா விமானங்கள்
- குளிரூட்டும் ஆடைகள்
- வானில் வலம் வரப் போகும் சூப்பர்சானிக் விமானம்
- மரணத்திற்குப் பிறகும் சூழல் பாதுகாப்பு
- சீன சிப் தொழிற்துறையின் வேகம்: அமெரிக்கா சமாளிக்குமா?
- காடுகளைக் காக்க லைடார் தொழில்நுட்பம்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.