Keetru
இலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் தகவல் களம் சிரிப்'பூ'
Font problem?
Keetru  width= Dalithmurasu
Dalithmurasu width=
 width=ஆகஸ்ட் 2007
வெளியேற்றப்படாத அந்நியன்!

"நாட்டின் சுதந்திரம் என்ற நோக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நலிவடைந்தவர்களை ஒடுக்குவதற்கு, வலிமையுள்ளவர்களுக்கு இருக்கும் சுதந்திரத்திற்கும் - முழு மனிதர்களாக வளர்வதற்கான வாய்ப்போடு, நலிவடைந்தவர்களுக்கு இருக்கும் சுதந்திரத்திற்கும் இடையே பெருத்த வேறுபாடு இருக்கிறது. சுதந்திரம் போன்ற அபத்தங்களைப் பற்றிப் பேசும் இந்து தேச பக்தர்களிடம் நான் கேட்கிறேன்: அவர்கள் இந்த சுதந்திரத்தினால் என்ன பலனை அடையப் போகிறார்கள்? சமூக விடுதலை தற்போது இருக்கும் நிலையிலேயே இருக்குமானால், வெள்ளையர்களிடமிருந்து அவர்கள் பெறப்போகும் சுதந்திரம் - ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட மக்களை மேலும் ஒடுக்குவதற்கே பயன்படுமானால், நாம் ஏன் அதற்காகப் போராட வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. மாறாக, எமது நோக்கத்தை ஆராய்ந்தால், நாங்கள் எந்த கொள்கைக்காகப் போராடுகிறோம் என்று பார்த்தால் - அது குறுகிய வட்டத்தை கடந்து நிற்பதைப் புரிந்து கொள்வீர்கள்.''

- டாக்டர் அம்பேத்கர், 3.1.1945

தலித்முரசு


ஆசிரியர்
புனித பாண்டியன்

ஆசிரியர் குழு
இளங்கோவன்
அழகிய பெரியவன்
யாக்கன்
காவ்யா
விழி.பா. இதயவேந்தன்

ஆண்டுக் கட்டணம்: ரூ.100
நூலகக் கட்டணம்: ரூ.200
வாழ்நாள் கட்டணம்: ரூ.1000

தொடர்பு முகவரி
203, ஜெயம் பிரிவு - சித்ரா அடுக்ககம்
9, சூளைமேடு நெடுஞ்சாலை
சென்னை-600 094
தொலைப்பேசி: 044-2374 5473
Email: ambedkar@md4.vsnl.net.in

ஜுலை 05 இதழ்
ஆகஸ்ட் 05 இதழ்
செப்டம்பர் 05 இதழ்
அக்டோபர் 05 இதழ்
நவம்பர் 05 இதழ்
டிசம்பர் 05 இதழ்
ஜனவரி 06 இதழ்
பிப்ரவரி 06 இதழ்
மார்ச் 06 இதழ்
ஏப்ரல் 06 இதழ்
மே 06 இதழ்
ஜூன் 06 இதழ்
ஜூலை 06 இதழ்
ஆகஸ்ட் 06 இதழ்
செப்டம்பர் 06 இதழ்
அக்டோபர் 06 இதழ்
நவம்பர் 06 இதழ்
டிசம்பர் 06 இதழ்
ஜனவரி 07 இதழ்
பிப்ரவரி 07 இதழ்
மார்ச் 07 இதழ்
ஏப்ரல் 07 இதழ்
மே 07 இதழ்
ஜூன் 07 இதழ்
ஜூலை 07 இதழ்
முதல் "சுதந்திர'ப் போராட்டம் நடைபெற்று 150 ஆண்டுகளும், நாடு "சுதந்திரம்' பெற்று 60 ஆண்டுகளும் ஆகியுள்ளன. அந்நியர்களை வெளியேற்றி, இம்மண்ணை விடுவித்து இந்நாட்டு மக்களே ஆட்சி செய்ய வேண்டும் என்பதுதான் பொதுவான குறிக்கோள். ஆனால் நடந்தது என்ன? வெள்ளையர்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர். ஆனால், வெள்ளையர்களுக்கு முன்பே மூன்றாயிரம் ஆண்டுகளாக, இம்மண்ணின் தொல்குடி மக்கள் மீது மாபெரும் பண்பாட்டுப் படையெடுப்பை நிகழ்த்திய ஆரியர்கள் வெளியேற்றப்படவில்லை. ஆங்கிலேயர்களை வெளியேற்றுவதற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், ஆரியர்களை வெளியேற்றுவதற்கு அளிக்கப்படவில்லை. இதற்கான காரணங்களை உற்று நோக்குவது மிகவும் அவசியம்.

வெள்ளையர்களின் ஆட்சி, மநுதர்மத்தின் அடிப்படையில் இல்லை. இந்நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு பல நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்ட கல்வி, ஜனநாயகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஏற்பட்ட விழிப்புணர்வு, பார்ப்பனர்களை கேள்விக்குட்படுத்தியது. இதன் விளைவு, வெள்ளையனை வெளியேற்றும் போராட்டம் தீவிரமடைந்தது. பார்ப்பனர்கள் இந்நாட்டின் குடிமக்களாகத் தங்களை மாற்றிக் கொள்வதற்காகத்தான், வெள்ளையர் எதிர்ப்பில் தீவிரம் காட்டினர். அதன் மூலம் அவர்கள் தங்களை தேசபக்தர்களாக, தேசத் தலைவர்களாக, தேசத்தையே ஆட்சி செய்யும் குடிமக்களாகப் பரிணாமம் பெற்றனர்.

அதனால்தான் நாட்டு விடுதலைக்காக அதிதீவிரப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அம்பேத்கரும் பெரியாரும் பார்ப்பன எதிர்ப்பையும் - சாதி ஒழிப்பையும் முதன்மைப்படுத்தினர். இன்று மீண்டும் உலகமயமாக்கல் ஆபத்தை முன்வைத்து, ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னிலைப்படுத்தப்படுகிறது. ஆனால், இந்து/பார்ப்பனியப் பண்பாடுதான் இன்றளவும் ஏகாதிபத்தியத்திற்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. எனவே, பார்ப்பனியத்தை எதிர்ப்பதும், உள்நாட்டு ஏகாதிபத்தியமான சாதியை ஒழிக்கப் போராடுவதுமே - மறுகாலனியத்தை நிரந்தரமாகத் தடுக்கும். இதைச் செய்யாமல், மறுகாலனியத்திற்கு எதிராக மட்டுமே மக்களைத் திரட்டுவது, பார்ப்பனிய எதிர்ப்பை மழுங்கடிப்பதிலும் சாதியமைப்பைப் பாதுகாப்பதிலும்தான் முடியும்.

இதை சரியாகப் புரிந்து கொண்டு, இதுநாள் வரை முன்னுரிமை அளிக்கப்படாத சமூக ஜனநாயகத்தை வென்றெடுக்கப் போராடுவதே - உண்மையான சுதந்திரப் போராட்டமாக இருக்க முடியும்.

சுதந்திரப் போராட்டம், எந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதை அம்பேத்கரே வரையறுத்துள்ளார் : "தாழ்த்தப்பட்ட மக்களை முன்னேற்றுவதைத் தவிர, இந்தியாவில் வேறெந்த உயரிய பணியும் இருப்பதாக நான் நினைக்கவில்லை... தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களுக்காகப் பாடுபடும் ஆற்றல் கொண்ட நானோ, மற்றவர்களோ இந்தப் பணியை கைவிட்டு வேறு பணிக்குச் சென்றால், வேறு எவரும் இப்பணியைச் செய்ய வரமாட்டார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் 2000 ஆண்டுகளாக எத்தகைய சிதைந்த நிலையில் இருந்தார்களோ அந்நிலையிலேயே அவர்கள் இருப்பார்கள்... தாழ்த்தப்பட்ட மக்கள் ரொட்டிக்காகவும் மீனுக்காகவும் போராடுகிறார்கள் என்று கூறுவது முட்டாள்தனமானது. அவர்கள் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்காகப் போராடுகிறார்கள். அம்மக்களின் கொள்கைகள் குறுகிய வட்டத்தைக் கடந்து நிற்கின்றன. அவர்களது கொள்கைகள், இந்தியாவை மட்டுமல்ல; உலகையே மறுசீரமைக்கக் கூடியவை.''


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: editor@keetru.com. படைப்புகளை அனுப்பும்போது தாங்கள் பயன்படுத்திய எழுத்துரு எதுவென்பதைத் தெரியப்படுத்தவும்.

Keetru | Tamil | Tamilnadu | Literature | Cinema | Recipe | Joke
Submit Your Feedback
Name
Email
Message
 

  வாசகர் கருத்துக்கள்
Sait
2007-09-03 08:17:00
saitmuhsin@yahoo.com

My best regards for your services

Kenaiyan
2007-09-10 05:01:00
muzumuttaal@yahoo.co.in

The writer's views are mostly aimed against the Bhramins rather than upliftment of Daliths. Criticising and cornoring the Bhramis will more and more helpful for the other upper caste Hindus to tighten their grip on innocent Daliths! I am asking the writer that who are suppressing the Daliths in Tamil Nadu Villages? Who are humilating, assaulting, killing, burning the houses of Daliths in the villages of Tamil Naadu! Who had thrusted human refuse in the mouths of Daliths in the Village " Thinnium" 2 years ago! Our aim is not craeate a rift between caste Hindus and Daliths But to make them understood that the caste hindus have been the most beneficiaries of enslaving the Daliths. Because the peasents, land owners of uppe castes needed cheap and obedient labour. They acheived the same, by using the Religion as a cover! Otherwise why and how the casteism was kept intact even after Bhuddhism. Buddhism was thriving in India formore than 6 centuries, including the period of Ashoka! Who kept alive the caste system? Who were benefitted from keeping Daliths as Daliths? Who are still insulting and unleasing violance against Daliths! Its utter foolish on parts the intellects from Dalith community to waste their time in castigating the Bhramins, while the other Dominant castes are hrusting human refuse " Pee" in Daliths mouth! Before I conclude, Dr. Ambedkar himself liked his teacher so much , he took his name, and condemning all Bhramins without knowing about them is equal to condemning the teacher of Ambedkar and condemning Ambedkar himself!

JAMBULINGHAM
2007-09-11 04:47:00
jamb@gmail.com

திருமலைப்பாளையம், கோவை மாவட்டத்தில் உள்ள கிராமம். இங்கு 500 தலித் குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமத்தில் உள்ள கிளை அஞ்சல் அலுவலகம், அங்குள்ள சுமதி என்ற அஞ்சல்காரரின் வீட்டில் இருப்பதால், தலித்துகள் யாரும் இங்கு வந்து அஞ்சல் அட்டைகள் வாங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, தலித்துகள் கேட்டுக்கு வெளியே நின்றுதான் வாங்கிக் கொள்ள வேண்டும். இத்தீண்டாமை குறித்த செய்தி, "இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டில் (23.7.07) வெளிவந்தது. இது குறித்து மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், அஞ்சல் நுழைவுப் போராட்டம் ஒன்றை பெரியார் தி.க. அறிவித்திருந்தது. அதற்குள் பாலமுருகன் என்ற தலித் இளைஞர் அளித்த புகாரின் அடிப்படையில் 24.7.07 அன்று சுமதி கைது செய்யப்பட்டுள்ளார். பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஆய்வு நடத்தி, தீண்டாமைக் கொடுமையை உறுதி செய்திருக்கிறார்.
அக்கிராம சாதி இந்துக்கள் சுமதியை கைது செய்ய வேண்டாம்; சமரசம் செய்து கொள்வோம் என்று கூறியுள்ளனர். கொதித்தெழுந்த தலித்துகள் இதை ஏற்கவில்லை. தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதி காட்டினர். பத்திரிகை செய்தியாலும், பெரியார் தி.க.வின் போராட்ட அறிவிப்பாலும் - அஞ்சல் அலுவலகம் அந்த வீட்டின் மற்றொரு அறைக்கு மாற்றப்பட்டுள்ளது- Very Good! Is Ms. Sumathi a Bhramin? Can the Daliths really understand as what is the present situation? Is any of the present day Bhramin sshow any caste difference? We can't understand as why Daliths are still thinking of 1930's and 1940's! The Daliths find it easy to target the Bhramins who are less in numbers and by abusing the Bhramins, they thought that they can join with other caste Hindus! But the irony is that the caste hindus did not reform as how Bhramins reformed! Unless Daliths understand who has to be "recified" they will be continued to be suppessed! But if they fear that they can not take up the caste hindus, and hence continue the Bhramin huntingwork, more and more " Sumathi" storey and more more "THINNIUM STOREY" WILL HAPPEN!



கீற்றுவில் தேட

Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.puthiyakaatru.keetru.com

www.koottanchoru.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

www.anicha.keetru.com

www.anaruna.keetru.com

www.thaagam.keetru.com

www.dheemtharikida.com

www.noolagam.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.kathaisolli.keetru.com

www.kuthiraiveeran.keetru.com

www.ani.keetru.com

www.puthuezhuthu.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.bank.keetru.com

www.thamizharonline.com

www.punnagai.keetru.com

www.puthiyathendral.keetru.com

www.vanam.keetru.com

www.vizhi.keetru.com

www.kanavu.keetru.com

www.inmai.keetru.com

www.sancharam.keetru.com

www.kannottam.keetru.com

www.neythal.keetru.com

http://uthappuram.keetru.com/

http://semmalar.keetru.com/

About Us | Terms & Conditions | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com
Hosted & Maintained by india intellect
Best viewed in Windows 2000/XP