ஒரு ஊர்ல ஒரு குட்டிப் பாப்பா இருந்தாளாம். அவளை கொசு ஒன்னு கடிச்சிச்சாம். கொசு கடிச்சதுல இரத்தம் கூட வந்திடிச்சு. பாப்பா ரொம்ப அழ ஆரம்பிச்சிட்டாள். உடனே பக்கத்துல இருந்த சிங்கமும் புலியும் அவள்ட்ட வந்து, அழாதே பாப்பா...

நாங்க உன்னை கடிக்கல, அந்தக் கொசு தான் கடிச்சதுன்னு சொன்னாங்களாம். அப்படியும் பாப்பா அழுகைய நிறுத்தவேயில்லை. உடனே புலி, கொசுக்கு ஃபோன் செஞ்சிதாம். "ஏய் கொசு, ஏன் பாப்பாவை கடிச்ச? ஹ்ம்ம்.. இனிமே அப்படி செய்யக் கூடாது.. புரியுதா" ன்னு சொல்லிச்சாம்.

யானை, கரடி, தவக்களை எல்லாம் வந்து; "பாப்பா,அழாதே..உனக்கு ஒன்னுமில்ல,எல்லா சரியாடு"ம்னு சொன்னாங்க. அப்புறம் அவளுக்கு சரியாடிச்சு. கொசுவும் வந்து சாரி கேட்டுடிச்சு.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.