கலாம் சொன்னதால் அல்ல...
கனாக் கண்டு கொண்டுதான்
இருக்கிறார்கள் இவர்கள்...

இளைஞர்களின் கனவு...
எம்ப்ளாய்மெண்ட் அலுவலகம்
தனக்கு மட்டும் வேலை வாய்ப்பு
வழங்கிவிட்டு
இடிந்து விழுவது போல...

இளைணல்யின் கனவு...
எவனோ ஒருவன் தன்னைக்
குதிரையில் கடத்திக் கொண்டுபோய்த்
திருமணம் செய்வதாக...

தஞ்சாவூர்க்காரன் கனவு...
கடைமடை வரை
காவிரித் தண்ணீர்
சீறிப் பாய்ந்து
முப்போகம் விளைவிப்பதாக...

கிராமத்தான் கனவு...
கறுப்புத் தார்ச்சாலை
கண்மாய்க்கரை வந்து
முடிவதாக...

மாணவக்கனவு...
ஆசிரியரே இல்லாத
பாடபோதனை
தன் கைவரிசையில்
தோன்றி மறைவதாக...

விஞ்ஞானியின் கனவு...
தன் கைப்பிடிக்குள்
உலகத் தட்ப வெட்பம்
சுருங்கிச் சுருங்கி விரிவதாக...
அரசியல்வாதியின் கனவு...
பட்டா இல்லாமலே
தன் கைக்குள்
பூமத்தியரேகையின்
நீள அகலச்
சொத்துப்பதிவு
நடப்பதாக...

இறைவனின் கனவு...
அடுத்தடுத்த பிறவிகளில்
மனித அரவமற்ற
ரோபோக்களை
மட்டுமே
நடமாட விடுவதாகவென்ற
சிந்தனையில்
ஆழ்ந்திருப்பதாக...

இன்றைய மனிதன்...
கனவே
வராத
நீள்த்தூக்கம்
சாத்தியப்படாதா?
என்பதாக...

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.