ஒரு பறவையின் சிறகு
உதிர்ந்து கிடக்கிறது.
உயரங்களில் ஊர்வலம் போன
மலரும் நினைவுகளில்
ஆழ்ந்தபடி...
பறவைக் கூட்டம்
கண்களை விட்டு மறைகையில்,
வானம் மட்டுமல்ல
மனசும் வெறுமையாகி விடுகிறது.
அந்திக்குக் கூடு திரும்பும் பறவை
பகலின் கடைசியழகு,
சிறகசைத்து விடைபெறுகிறது.
பறவைகள்
சுதந்திரத்தின் குறியீடு
அவற்றை மாமிசப் பார்வை பார்க்கிறது
அசைவ மனசு
மேகங்கள் வானத்தின்
அக அழகு,
பறவைகள் அதன்
புற அழகு.
உயரப் பறப்பதை எந்தப் பறவையும்
சாதனையாகக் கூறிக்கொள்வதில்லை
அதுவே அதன் இயல்பு.
இரையும் குடிநீரும்
தேடிக் களைத்த பறவைக்கு
இளைப்பாற வெயில் விரிந்த
கட்டிடங்களே இன்று மிச்சமிருக்கிறது

More articles by கோ.அருணகிரி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.