ஈயாய் ஒரே கூட்டம்.
நாணம் சிறிதுமின்றி
உயிரைத் துச்சமாகக் கருதி
கூடாரத்திலிருந்து சிரித்தவாறே
கைகளை நாலாபுறமும் ஆட்டியாட்டி
நளினமாக நடந்துவந்தாள்
அந்தச் சாகசக்காரி.
பின் -
உச்சியிலிருந்து தொங்கும் பிடிகயிற்றை
இலாவகமாகப் பற்றித்
தாவிக் குதித்தாள்
மொத்தப் பார்வையும்
மொச்சைக்கொட்டை போல் விழித்திருக்க

ஏறி சரிவதும்
உருண்டுப் புரள்வதும்
சுற்றிச் சுழல்வதும்
வளைந்து நெளிவதும்
குனிந்து நிமிர்வதும்
ஓடி ஆடுவதும் என
மாம்பழ உடம்போடு ஒட்டியிருந்த
மினுக்கும் அரைகுறை ஆடையில்
சாகசம் நிகழ்த்திக் கொண்டிருப்பவளிடம்
பளிச்செனத் தெரிந்தது அவளது
பசி வயிறு.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.