வீசிய புயலில்
வேரறுந்த மாமரத்தில்
கூடுகட்டி வாழ்ந்த
குருவி ஒன்று
வட்டமடித்து
வட்டமடித்து
வந்து வந்து
தேடுகிறது
கண் விழிக்காத
தன் குஞ்சுகளை
பசித்த பருந்தொன்றுக்கு - அவை
விருந்தானது தெரியாமல்.
கீற்றில் தேட...
கருக்கல் விடியும் - செப்டம்பர் 2012
தேடல்
- விவரங்கள்
- பி.முகுந்தராஜன்
- பிரிவு: கருக்கல் விடியும் - செப்டம்பர் 2012