தோழனின்
இரவல் கண்ணாடியை
கண்களிலும்
புன்னகையை
உதடுகளிலும்
பொருத்தியபடி,
சுற்றுலா பயணத்தில்
அலுவலக நண்பர்களுடன்
அரை மப்பின்
ஆழச் சிரிப்பில்,
மனைவி - கணவன் உடன்
அரிதான மகிழ்வின் தருணத்தில்
ஏதேனும் நிகழ்வொன்றில்,
காதணி விழாவிலோ
சடங்கிலோ
வெட்கம் கலந்த
மஞ்சள் வாசத்தில்,
வங்கியல்லது
சிட்ஸ் லோனுக்காய்
கூனிக் குறுகி
சிரிப்பைத் தொலைத்த
சில்லறைக் கடன்களில்,
பேரன் பேத்திகளின்
கொஞ்சுதலில்
வாய்க் கொள்ளாச்
சிரிப்பில்
வழிந்தோடும் வயோதிகத்தில்,
இப்படியான
ஏதேனுமொரு சூழலில்
எடுக்கப்பட்ட புகைப்படங்களில்
புன்னகைக்கிறார்கள்
கண்ணீர் அஞ்சலிகளில்
இடம்பெற்ற
இடம் பெயர்ந்தோர்!...
கீற்றில் தேட...
கருக்கல் விடியும் - மே 2012
இடம் பெயர்ந்தோர்...
- விவரங்கள்
- க.தங்கபாபு
- பிரிவு: கருக்கல் விடியும் - மே 2012