somalia_650

(இதுவரை இல்லாத அளவுக்கு கடும் பஞ்சம் - பட்டினியை சந்தித்து வரும் சோமாலியாவைச் சேர்ந்த மக்கள் 19.7.2011 அன்று, தெற்கு எத்தியோப்பியா எல்லையைக் கடக்கும்போது, ஓர் அகதி முகாமில் உணவுக்காகக் காத்திருக்கின்றனர்)

அதனாலென்ன அவர்கள் சாகட்டும்
காய்ந்த சருகுகளைப் போல உயிர்வற்றி
போகட்டும் விடுவோம்
அவர்கள் தோலின் நிறம் சிவப்பா என்ன?
பசித்தால் நாம் என்ன செய்வது
அவர்கள் ஒன்றும்
சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இல்லையே!
அவர்களுக்கு என்ன இருக்கிறது அந்த உயிர்தானே
நமக்கோ பாருங்கள் நேரமே இல்லை
நம் நகங்களுக்கு பாலிஷ் போட்டுக்கொள்ள
அவர்கள்தான் துவண்டு போனவர்களாயிற்றே
அவர்களால் முடியுமா என்ன
வேகமாகப் போகும் நம் கார்களைத் தடுக்க
பாலற்றுக் குழந்தைகள் சாகின்றன
விடுங்கள் நாமென்ன
பார்த்துக்கொண்டா யிருக்கமுடியும்
நீங்கள் குடியுங்கள் அது விலையுயர்ந்த மதுபானம்
விடுங்கள் விடுங்கள் அவர்கள் சாகட்டும்
அவர்களின் எல்லா செல்வங்களும்
நாம் சுரண்டியவைதானே
யாராவது கேட்டால் சொல்லிவிடுவோம்
அவர்கள் கொள்ளையர்கள் என்று.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.