Shilpa Shetty


சயனத்திற்கென அய்ந்து அறைகளில்
சுழன்று சுழன்று
அடிவயிற்றில் வலிவாங்கி
தினமும் குமுறினாள் பாஞ்சாலி

சுருட்டிய உடைகளுடன்
மரத்தில் குந்திய
கண்ணனின் முன்னால்
கைகளைத் தூக்கி
காட்டுகின்றனர் எல்லாவற்றையும்
குளத்திலிருந்து மேலேறிய
கோபிகைகள்

சிவனும் திருமாலும்
ஓரினச் சேர்க்கையில்
பண்பாடு காத்த தருணத்தில்
வழிந்த உயிரணுக்களில்
உருவம் தகைந்தது அய்யப்பனுக்கு

குறிகளைப் பிடித்துக் கொண்டு
கோபுரங்களில் நிற்கும் சிலைகளின்
அடியில்தான் நடக்கின்றன
கர்ப்பக்கிரக பூசைகள்

காமசூத்திரத்தின் கலைகளனைத்தும்
சிலைகளாய் நிற்கும்
இந்துத்துவத்தின் ஆபாசம்
நடிகையெனினும்
நர்த்தகியெனினும்
பெண்ணென்றால் போதும்
லோகமகா குருக்களுக்கு

பெண்பித்து, காமக் கொடூரம்
இந்தக் குப்பைகள் மேலிருந்து
கூவுகிறாய்
ஒரு முத்த நிகழ்ச்சியை எதிர்த்து

ஊரில் சொல்வார்கள்
"குடுமிய உட்டுப்புட்டு
கோவணத்த புடிக்கிறானுங்க
கிறுக்கனுங்க'

-யாழன் ஆதி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.