பவுத்தத் துறவிகளின் மாநாட்டுப் பந்தலுக்கு தீயிட்ட பார்ப்பனர்கள்
பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு: (10.12.2015 இதழ் தொடர்ச்சி)
8) அபிமன்யூ என்ற காஷ்மீரை ஆண்ட பார்ப்பன மன்னன் பவுத்தர்களை இனப் படுகொலை செய்துவிட்டு கடும் பனிப் பொழிவினால் இறந்தார்கள் என்று பொய்ப் பிரச்சாரம் செய்தான். (ஈழத் தமிழர்களை சிங்கள ராணுவம் படுகொலை செய்ததுபோல) இந்தப் படுகொலைகளை குளிர்காலங்களில் நடத்தினான். அந்த 6 மாதங்களிலும் தனது நாட்டை விட்டு வெளியேறி, ஒரு பள்ளத்தாக்குப் பகுதிக்குப் போய்விடுவான். திட்டமிட்டபடி பவுத்தர்கள் படுகொலைகள் நடக்கும். கேட்டால் பனியில் உறைந்து இறந்தார்கள் என்று பொய் சொல்வான். பனிப் பொழிவில் பார்ப்பனர்கள் ஏன் இறப்பதில்லை என்று கேட்டதற்கு, “அவர்களிடம் உள்ள ஆன்மீக சக்தியால் மரணத்தைத் தடுக்கிறார்கள்; அந்த ஆன்மீக சக்தியைப் பயன்படுத்தி, கடவுளுக்கு யாகங்களையும், படையல்களையும் செய் கிறார்கள்” என்று பதில் கூறினான். (ஆதாரம்: கல்கணன்)
9) பவுத்த மதத்தினர் ஒரு பெண்ணைக் கடத்தியதாகக் கூறி ஆயிரக்கணக்கான பவுத்த மடாயலங்களைத் தீ வைத்துக் கொளுத்தினான், காஷ்மீர் அரசன் கின்னரன்.
10)காஷ்மீர் மட்டுமன்றி பிற பகுதிகளிலும் பவுத்தர்கள் படுகொலை செய்யப்பட்டனர். போதி மரத்தை (அரசமரம்) வெட்டி வேரோடு சாய்க்க பல முறை முயன்றான். கேரளாவை ஆண்ட குமாரிலபட்டன். அவனது கொடுமை தாங்காமல், பவுத்த மதத்தினர் அனைவரும் கேரளாவை விட்டு வெளியேறினர்.
சுதன்வனன் எனும் மன்னன், தனது குடிமக்களுக்கு பிறப்பித்த ஆணை: “தனுஷ்கோடி பாலத்திலிருந்து இமாலயம் வரை, பவுத்த மதத்தினரைக் குழந்தைகள் முதியவர்கள் என்று பாராது அனைவரையும் கொன்றுவிட வேண்டும். அவ்வாறு செய்யாதவர்கள் கொல்லப்படுவார்கள்”. (தகவல்: சங்கர விஜயம்)
11)“பிற மதத்தின் மீது அடக்குமுறையை ஏவி விடுவதும், அட்டூழியங்கள் புரிவதும் உலகம் முழுதும் நடந்துள்ளது. ஆனால், பவுத்த மதத்தை இந்தியாவை விட்டுத் துரத்துவதற்காக செய்யப்பட்ட அடக்குமுறைகளுக்கும், அட்டூழியங் களுக்கும் ஈடான வேறு ஒன்று உலகின் எந்த மூலையிலும் நடந்தது இல்லை”. (ஆய்வாளர் டபுள்யு. டி. வில்கின்ஸ்)
பார்ப்பனக் கொடுமைகளை - புத்தமதம் எதிர்த்த தற்காக வரலாற்றில் பார்ப்பன கொலைக்காரக் கூட்டம் இவ்வளவு படுகொலைகளையும், அழிப்புகளையும் செய்தது. புத்தருக்குப் பிறகு, பார்ப்பனர்களை எதிர்த்து, அதில் வெற்றிப் பெற்ற ஒரே வரலாற்று நாயகன் பெரியார் மட்டுமே.
தேவ பூதி
1) சுங்க வம்சத்தின் கடைசி மன்னன் தேவ பூபதி.
2) அவனிடம் அமைச்சராக இருந்த வாசுதேவன் எனும் பார்ப்பனன், மன்னனின் காமக்கிழத்திக்கு அரசியைப் போல் வேடமிட்டு, ‘அந்தப்புரத்துக்கு’ அனுப்பி, மன்னனை தந்திரமாகக் கொலைச் செய்தான். (ஆதாரம்: பாணரின் ‘ஹர்ஷ சரிதம்’)
3)கன்வ குலத்தைச் சார்ந்த வாசுதேவன் பரம்பரை 40 ஆண்டுகள் - ‘பார்ப்பன தர்ம’ ஆட்சி நடத்தியது.
குகசிவன்
1) புத்த மதம் வட இந்தியா முழுதும் அழிக்கப்பட்ட நிலையில் கலிங்க நாட்டில் மட்டும் (கி.பி. 4 ஆம் நூற்றாண்டு) குகசிவன் ஆட்சி நடந்தது. இவன் புத்தத்தின் தீவிர ஆதரவாளன். சிற்றரசன், புத்தரின் புனிதப்பல், கலிங்கத்தில் (இன்றைய பீகார் பகுதி) இருப்பதே, அங்கு புத்தர் கொள்கை ஆட்சி நீடிக்கக் காரணம் என்று கருதிய பார்ப்பனர்கள், பல முறை, புத்தரின் புனிதப் பல்லைக் கடத்திப் போக முயற்சித்தனர். அந்த சூழ்ச்சியை குகசிவன் முறியடித்து, பார்ப்பனர்களை நாடு கடத்தினான்.
2) குகசிவன் - மகத நாட்டை ஆண்ட சமுத்திர குப்தனுக்கு கப்பம் கட்டி வந்த சிற்றரசன். பார்ப்பனர்கள், சமுத்திர குப்தனிடம், குகசிவனுக்கு எதிராக, தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று முறையிடவே, சமுத்திரகுப்தன், குகசிவனையும், புனித பல்லையும் கொண்டுவர படை அனுப்பினான். பின்பு பார்ப்பனர்கள், பொய்ப் பிரச்சாரத்தை உணர்ந்து, மீண்டும் புனிதப் பல்லை குகசிவனிடம் ஒப்படைக்க, அவனிடம் நேசம் பாராட்டினான்.
3) தங்கள் சூழ்ச்சி பலிக்காமல் போகவே, பார்ப்பனர்கள், குகசிவனுக்குப் பகைவனான சுவேதனன் எனும் மன்னனுக்கு தூபம் போட்டனர். சுவேதனன், புத்தர் பல்லினை மீட்க குகசிவனுடன் போரிட்டான். பல்லாயிரம் பேர் மாண்டனர். முடிவில் குகசிவனும் மாண்டான். ஆனால், புத்தரின் புனிதப் பல், எதிரிகளின் கையில் சிக்கவில்லை. குகசிவன் விருப்பப்படி, அவனது மகளும் மருமகளும், புனிதப் பல்லை இலங்கைக்குக் கொண்டு போய் விட்டனர். புனிதப் பல்லை வரவேற்ற அந்நாட்டு மன்னன் (கீர்த்தி ஸ்ரீ மேகவர்ணன்) அதனை வைத்து ஒரு கோபுரம் அமைத்தான்.
சசாங்கன் (கி.பி. 603 - 620)
1) மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய பகுதிகளை அரசாண்ட கவுட மன்னன் சசாங்கன், புத்த மதத்தின் எதிரி, பவுத்தர்களையும், பவுத்த மடாலயங்களையும் அழித்தான். புத்த சின்னங்களை அழித்தான். புத்தரின் நினைவாகப் போற்றும் அரச மரத்தையும் (ஏற்கனவே அழிக்கப்பட்டு, அசோகனால் பாதுகாக்கப்பட்டது) வெட்டினான். பிறகு மகத மன்னன் பூர்ணவர்மனால் அரச மரம் (போதி மரம்) முற்றிலும் அழிந்துவிடாமல் மீண்டும் நீரூற்றிக் காப்பாற்றப்பட்டது. போதி மரத்தின் அடியில் இருந்த புத்தர் சிலை ஒன்றையும் அழிக்க முயன்றான்.
ஹர்ஷ வர்த்தனன் (கி.பி. 606 - 647)
1)இவன் வைசிய மரபைச் சார்ந்தவன். கன்னோசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த இவன், வர்ணா°ரமப் பித்தன். பார்ப்பனர் களுக்கும், புரோகிதர்களுக்கும் பொருட்களை வாரி வாரி கொடுத்தான். பார்ப்பனர்கள் வீடுகளில், முன்பாக மதுவை தயாரிக்கும் சோமச் செடிகள், பலிக்குரிய பொருட்கள், வேள்வித் தீக்குப் பயன்படும் பொருட்கள் மண்டிக் கிடந்ததாக, சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இறந்த தந்தையின் நினைவாக - பார்ப்பனர்களுக்கு 100 கிராமங்களை ‘தானம்’ செய்தான்.
2) கி.பி. 613 இல் பவுத்தத்தைத் தழுவினான். அதற்குப் பிறகும் பார்ப்பனர்களுக்கு அள்ளி அள்ளித் தந்தான். ஆனாலும் புத்த மார்க்கத்தினரை மன்னன் ஆதரித்ததை பார்ப்பனர்களால் பொறுக்க முடியவில்லை.
3) கன்னோசி நகரில் 18 அரசர்கள், 30000 பவுத்த துறவிகள், 3000 பார்ப்பனர்களை அழைத்து, சட்ட மாநாடு நடத்தினான். சீனப் பேரறிஞர் யுவான் சுவாங்கிற்கு பெருமை தர திட்டமிட்டான். கங்கை நதிக்கரையில் பெரிய பந்தல் போடப்பட்டது. 22 நாட்கள் மாநாடு நடந்தது. 100 அடி உயர கோபுரம் அமைக்கப்பட்டு, அதன் உச்சியில் ஆள் உயர தங்கத்தால் ஆன புத்தர் சிலை, மாநாட்டு அரங்கில் நிறுவப்பட்டது. ஒவ்வொரு நாளும் மன்னர் - அரசர்கள் - ஊர்வலமாகப் புறப்பட்டு, மாநாட்டுக்கு வந்தனர். சீனப் பேரறிஞர் யுவான் சுவாங் மாநாட்டுக்குத் தலைமை தாங்கினார். வழிநெடுக முத்துக்களையும், தங்கத்திலான மலர்களையும் வழி நெடுக தூவிக் கொண்டே வந்தான்.
4) பார்ப்பனர்கள் பொருமினர். சதித் திட்டம் தீட்டினர். 5 ஆம் நாளில் சதித் திட்டத்தை அறிந்து, மன்னர் எச்சரித்தார். 23வது நாள் - புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த கோபுரத்தில் பார்ப்பனர்கள் தீ வைத்தனர். பெரும் முயற்சியால் அணைக்கப்பட்டது. ஹர்ஷனும் அரசர்களும் கோபுரத்தின் உச்சியில் ஏறி, புத்தர் சிலையைப் பார்வையிட்டு திரும்பும்போது, சதிகாரன் ஒருவன் கோபுரத்தின் சுவரில் மறைந்து நின்று, மன்னனை கத்தியால் குத்திக் கொலைச் செய்ய முயன்றான். மன்னன் சாமர்த்தியமாக, அவனைப் பிடித்தார். சிற்றரசர்கள், வாளினை உருவ, மன்னர் பெருந்தன்மையுடன் மன்னித்தார். பெருந்தன்மை கண்டு மனம் திருந்திய கொலையாளி, தன்னை ஏவி விட்டது பார்ப்பனர்கள் தான் என்ற உண்மையை ஒப்புக் கொண்டான். பார்ப்பனர்களும் உண்மையை ஒப்புக் கொண்டனர். சதிக்கு முக்கிய காரணமான பார்ப்பனர்களை மட்டும் தண்டித்து, 500 பார்ப்பனர்களை மட்டும் மன்னன் நாடு கடத்தினான்.
அருணாஸ்வரன்
1) ஹர்ஷவர்த்தனன் மறைவுக்குப் பிறகு, அவனது அமைச்சரவையில் இருந்த அருணா°வரன் எனும் பார்ப்பனன், ஆட்சியைக் கைப்பற்றி, தன்னை மன்னன் என்று அறிவித்தான்.
2) அவையில் சீனத் தூதுவராக இருந்த வாங்க் ஹியூன் சீ, அவரது 30 மெய்க்காப்பாளர்களை தாக்கிக் கொன்றான். வாங்க் ஹியூன் சீ, நோபாளத்துக்கு தப்பி ஓடி, நேபாள மன்னரிடமிருந்து பெரும் படையைத் திரட்டி வந்து, அருணா°வரனை குடும்பத்துடன் சிறைப்பிடித்து சீனத்துக்குக் கொண்டு போனான்.
சந்திரா பீடன்
1) கார்கோட மரபில் வந்த காஷ்மீர் மன்னன் (கி.பி.662). இவனது ஆட்சியில், ஒரு பார்ப்பன அதிகாரி மற்றொரு பார்ப்பன அதிகாரியைக் கொலை செய்ய, வழக்கை விசாரித்த சந்திரபீடன், கொலை செய்த பார்ப்பனருக்கு தண்டனை வழங்கினான். பார்ப்பனருக்கு மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது என்பது தர்மம். மரணதண்டனையிலிருந்து தப்பிய பார்ப்பன அதிகாரி, மன்னனது தம்பி ‘தாராபீடன்’ உடன் சதி செய்து, அண்ணனைக் கொலை செய்து, பார்ப்பன அதிகாரி துணையுடன் ஆட்சியைப் பிடித்தான்.
(தொடரும்)