அணுசக்தி இழப்பீடு சட்ட முன் வரைவு (சிவில் நியூக்ளியர் லயபிலிடி பில்) மத்திய அமைச்சரவையால் நவம்பர் 2,0 2009 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் சனநாயக நெறிமுறைகள் அனைத்தையும் புறந்தள்ளி அச்சட்ட முன்வரைவு மக்களிடமிருந்தும், பத்திரிகையாளர்களிடமிருந்தும், மக்கள் பிரதிநிதிகளிடமிருந்தும் மறைத்துவைக்கப்பட்டிருந்தது. அப்போதே சமூக செயல்பாட்டாளர்களுக்கு மத்திய அரசின் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது தௌpவாகப் புரிந்தது. அக்டோபர் 1,0 2008 அன்று கைச்சாத்திடப்பட்ட இந்தியா-அமொpக்கா அணுசக்தி உடன்பாட்டுக்குப்பின்னர் இப்படிப்பட்ட ஒரு சட்டத்துக்காக அமொpக்கர்கள் ஏவிக் கொண்டேயிருந்தனர்.
வீட்டோடு மாப்பிள்ளையாய் இருக்கும் வீரர் மாமியாருக்கு பாpசு வாங்கிச் செல்வது போல, ஏப்ரல் மாதம் அமொpக்காப் போகவிருக்கும் பாரதப் பிரதமர் அந்த ஆட்சியாளர்களுக்கு எடுத்துச் சொல்ல விரும்புவதுதான் அணுமின் விபத்து இழப்பீடு சட்டம்.
இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. ஆந்திர மாநிலத்தில் _காகுளம் மாவட்டம் கோவாடா எனுமிடத்திலும், குஜராத் மாநிலத்தில் பாவ்நகர் மாவட்டம் மித்திவிர்தி எனுமிடத்திலும் அமொpக்க கம்பெனிகள் அணுஉலைகள் நிறுவ இடமும் ஒதுக்கியாயிற்று. இவர்கள் கடை திறக்கத் தடையாய் இருப்பது இந்திய அரசு இழப்பீடு சட்டம் இயற்றாமல் இருப்பதுதான்.
மார்ச் மாதம் 10ம் தேதி மன்மோகன் சிங் அரசு அவசரகதியாக இந்த சட்ட முன்வரைவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. தாக்கல் செய்யப்பட்ட நிலையிலேயே எதிர்ப்புகள் தொpவிக்கப்பட்டதால், வாக்கெடுப்பு நடத்தவேண்டிவரும் என்பதாலும், அப்படி வாக்கெடுப்பு நடத்தினால் முதலுக்கே மோசம் உருவாகுமென்பதாலும், அந்த முன்வரைவை திருப்பிப் பெற்றுக் கொண்டது அரசு. இதுகாறும் தூங்கிக் கொண்டிருந்த எதிர்கட்சிகள் திடீரென விழித்துக்கொண்டு அரசை அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.
அணுமின் விபத்து இழப்பீடு சட்ட வரைவு 28 பக்கங்கள் கொண்டது. ஏழு பகுதிகளையும், 49 சரத்துக்களையும் கொண்ட இதன் குறிக்கோள்் அணுமின் விபத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவது, இழப்பீடு கோரல்களுக்கு இயக்குனரை நியமிப்பது, மற்றும் அணுமின் இழப்பீடு கோரல்களுக்கான இயக்ககம் தோற்றுவிப்பது.
இந்த சட்ட வரைவில் காணப்படும் பல பிரச்சினை களுள் ஒன்று தனியார் நிறுவனங்கள் வெறும் லாப நோக்கோடு அணுமின்சாரம் தயாரிப்பில் நுழைய வழிவகுப்பது. இதுவரை இந்திய அணுமின் நிலையங் கள் அரசின் அணுமின் கார்பரேசன் மூலமே நிறுவப்பட்டும், இயக்கப்பட்டும் வருகின்றன. இதற்குள்ளேயே எத்தனையோப் பிரச்சினைகள் இருக்கும் நிலையில் தனியாரையும் உள்ளே விடுவது உசிதமானதா என்பது விவாதத்திற்குரியது. மக்கள் வாpப்பணத்தில் இயங்கும் இந்திய அரசு நிறுவனமே எந்தத் தகவலையும் மக்களுக்குத் தராமல் தான்தோன்றித்தனமாக இயங்கும்போது, லாபம் ஒன்றையே ஒரே குறிக்கோளாகக் கொள்ளும் தனியார் நிறுவனம் என்னவெல்லாம் செய்யும், எப்படியெல்லாம் இயங்கும் என்பது வெள்ளிடைமலை. அணுமின் நிலையம் போன்ற மிகுந்த ஆபத்தான தொழிற்சாலைகளை தனியாருக்குத் தாரை வார்ப்பது போpடருக்கு வழிவகுக்கும்.
சுயமாக இயங்கும் கட்டுப்பாட்டு நிறுவனங்கள் ஏதுமற்ற நிலையில், இது இன்னும் ஆபத்தாகவே அமையும்.
இந்த சட்ட வரைவு அணுமின் விபத்து இழப்பீட்டுக்கு உச்சகட்ட வரம்பை நிர்ணயிக்கிறது. இது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது, கூடாதது. ஒரு தீவிபத்து இழப்பீடு நிர்ணயம் என்றால், என்னென்னப் பொருட்கள் எரிந்து சாம்பலாகும், எவ்வளவு இழப்பு வரும், எப்படி உச்ச வரம்பை நிர்ணயிக்கலாம் என்பவற்றை இலகுவாக முடிவு செய்யலாம். ஆனால் அணுமின் விபத்து எண்ணற்ற வழிகளில், எத்தனையோ தலைமுறைகளை, எப்படியெல்லாமோ பாதிக்கின்ற விடயம். இதற்கு எப்படி உச்சவரம்பு நிர்ணயிப்பது?
அரசு சார்ந்த அணுமின் நிறுவனத்துக்கு உச்ச வரம்பு ரூ. 2,100 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமொpக்க டாலாpல் கணக்கிட்டால் இது 450 மில்லியன் டாலராக இருக்கும். 1986 ஏப்ரல் மாதம் நடந்த செர்னோபில் அணுமின் நிலைய விபத்தின் காரணமாக அண்டை நாடான பெலரூஸ் 1991 முதல் 2003 வரையான 13 ஆண்டு காலகட்டத்துக்குள் மட்டுமே 13,000 மில்லியன் டாலர் செலவு செய்திருக்கிறது. இதிலிருந்து 450 மில்லியன் டாலர் இழப்பீடு என்பது ஒரு கேலிக்கூத்து என்பது தௌpவாக விளங்கும்.அரசு சாராத அணுமின் நிறுவனம் வழங்கும் இழப்பீடு அதிகபட்சமாக ரூ. 500 கோடியும், குறைந்தபட்சமாக ரூ. 100 கோடியுமாக இருக்கும் என வரையறுக்கிறது சட்டவரைவு. மத்திய அமைச்சரவை நிர்ணயித்த ரூ. 300 கோடி உச்சவரம்பு ரூ. 500 கோடியாக உயர்த்தப்பட்டிருந்தாலும், குறைந்தபட்சத் தொகை அப்படியே மாற்றப்படாமலிருக்கிறது. இது ஒரு மோசடி வேலையென்றே எண்ணத் தோன்றுகிறது.
இயக்குபவர் இழப்பீட்டை மட்டுமே நோக்கமாகக் கொள்ளும் இந்த சட்ட வரைவு, உபகரணங்கள் வழங்குபவர், அணுமின் நிலையம் கட்டுபவர் போன்றேhர் வழங்கவேண்டிய இழப்பீடு பற்றி வாய்திறக்கவேயில்லை. அவர்களை இயக்குபவர் கையில் ஒப்படைத்துவிட்டு ஓதுங்கி கொள்கிறது. ஒருவிதமாக பார்க்கும்போது இது அமொpக்கக் கம்பெனிகளை பாதுகாப்பதற்கான அப்பட்டமான முயற்சியென்றேத் தோன்றுகிறது.
இயக்குபவர் மட்டுமே இழப்பீடு வழங்குவதென்றால் இன்றைய நிலையில் இந்தியாவில் என்.பி.சி.ஐ.எல் நிறுவனம் மட்டுமே அணுமின் நிலையங்களை இயக்குகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது மக்கள் வாpப்பணத்தில் இயக்கப்படும் ஒரு பொதுத்துறை நிறுவனம். அரசு மக்கள் பணத்தை எடுத்து அம்மக்களுக்கே இழப்பீடு வழங்கிக் கொண்டிருக்க, அமொpக்கக் கம்பெனிகள் கையில் கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஜுட் விடலாமென்பது ஏற்றுக்கொள்ளப்படமுடியாத ஏற்பாடு.
இழப்பீடு வழங்கப்படவேண்டிய காலகட்டத்தை 10 வருடங்களெனக் குறிப்பிடுவது நகைப்புக்குரியது. அணுமின் நிலைய விபத்து ஆண்டாண்டு காலமாய் அவதிக்குள்ளாக்கும் போது, 10 வருடங்கள் இழப்பீடு பத்தாம்பசலித்தனமானது. இத்தனை ஓட்டைகளை உள்ளடக்கிய சட்ட வரைவை சட்டென்று சட்டமாக்கி, சிட்டாகப் பறந்து வாஷிங்டன் எஜமானர்களை மகிழ்விக்கத் துடித்த மன்மோகன் சிங் தனது சிந்தனைகளில், செயல்பாடுகளில் சராசரி இந்தியக் குடிமக்களின் பாதுகாப்புக்கு, நல்வாழ்வுக்கு முன்னுரிமை வழங்குவது சிறப்பு.
(பூவுலகு செப்டம்பர் 2010 இதழில் வெளியானது)