ஏப்ரல் 7ஆம் தேதி புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு நடத்தவும்; முற்பட்ட வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு என்ற சட்டத்திருத்தத்தின் மூலம், இடஒதுக்கீட்டினை முற்றிலுமாக அழிக்க நினைக்கும் பாஜக அரசினைக் கண்டித்து, இந்த மாதம் 27ஆம் தேதி தமிழகம் வரும் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்தவும் முடிவு எடுத்துள்ளது. பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஜனவரி 1 அன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது அறிவிக்கப்பட்டது.

Ambedkhar peranani apr7 600இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை ராமகிருட்டிணன், தமிழக மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், மார்க்சியப் பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் பொறுப்பாளர் பச்சைமலை, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் டைசன், நீரோடை அமைப்பின் தோழர் நிலவன், அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தெய்வமணி, தமிழர் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் ஜோசப் கென்னடி, தமிழர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி, இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில், தமிழ்நாடு மக்கள் கட்சியின் ஒருங் கிணைப்பாளர் இளையராஜா, தமிழ்நாடு குடியரசு கட்சி - மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

Pin It