கீழக்கரையைச் சேர்ந்த ஒரு முஸ்லிமான நடிகரால் திரையில் முகம் காட்டி முன்னுக்கு வந்தவர் வடிவேல் எனும் காமெடி நடிகர். நிழலில் தனது சிரிப்பிற்கு கிடைத்த அங்கீகாரத்தை தனது பலமாக கருதிக் கொண்ட இவர், அதை நிஜத்தில் காட்ட நினைத்தார். தேர்தல் நேரத்தில் திடீர் அரசியல்வாதியான இவர், ஒரு கட்சிக் காக பிரச்சரம் செய்தார். உண்மை யில் இவர் அரசியலுக்கு வரவேண் டுமென்றால் முறைப்படி ஒரு கட்சியில் சேர்ந்து அக்கட்சிக்காக பிரச்சாரம் செய்திருந்தால் அதை குறை காண முடியாது. ஆனால் மழைக்காலத்தில் திடீ ரென முளைக்கும் காளான் போன்று, தேர்தல் பிரச்சாரத்திற்கு காசு வாங்கி கொண்டு பிரச்சாரம் செய்யும் நடிகர் - நடிகைகளை போல இவரும் பிரச்சாரத்தில் ஈடு பட்டார் என்று சில பத்திரிகைகள் கூட எழுதின. அதையும் தாண்டி இந்த கைப் புள்ளையின் பிரச்சாரத்திற்கு அடிப்படை விஜயகாந்த் எதிர்ப்புதான் என்பது 'கைப்புள்ளை'களும் அறிந்த ரகசியம். பிரச்சாரத்தில் வெறுமனே விஜயகாந்தை மட்டும் சாடியவர், மறந்தும் கூட ஜெயலலிதா பற்றி விமர்சிக்கவில்லை. காரணம் என்னதான் காமெடியராக இருந்தாலும் ஆட்சி மாறினால் காட்சி மாறிவிடும் என்பதில் உஷாராகவே இருந்தார்.
மேலும் தேர்தல் முடிவு தெரிந்தவுடன் 'அதிமுக பெரிய கட்சி; அதனால் வெற்றி பெற்றுள்ளது என்று அந்தர் பல்டி யடித்து, திரையில் கூட முகம் கட் டாமல் அறையில் மறைந்து கொண்டார். ஆனாலும் ஒரு வழக்கு அவரை வெளியே இழுத்து வந்துள்ளது. ஒரு நில மோசடி வழக்கில் அவர் தலைமறைவாகி விட்டார் என்று செய்திகள் வெளியாக பாய்ந்து வந்து பத்திரிக்கை முன்பாக பேசிய வர், "சதாம் உசேன் மாதிரி குழி தோண்டி மறைந்து வாழ்கிற அளவுக்கு, நான் பெரிய குற்றவாளியா? என்று சின்னப்புள்ளத்தனமாக கூறியுள்ளார்.
இராக்கின் முன்னாள் அதிபரும் அரபுலகின் அஞ்சா நெஞ்சருமான சதாம் ஹுஸைன் மீது, இவரைப் போல மோசடி வழக்கு பாய்ந்து அவர் பதுங்கு குழியில் பதுங்க வில்லை. அமெரிக்கா எனும் உலக சட் டாம் பிள்ளைக்கு சிம்ம சொப்பன மாக திகழ்ந்த அவரை ஓய்க்க திட்ட மிட்ட அமெரிக்கா, 'சதாம் பேரழிவு ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளார்' என்ற ஒரு கோயபல்ஸ் பொய்யை சொல்லி இராக் மீது படையெடுத்து அங்கு பல்லாயிரம் அப்பாவிகளை கொன்று, சதாமையும் கொன்று ஒரு பொம்மை அரசை நிறுவியுள்ளது. திரைப்படத்தில், போர் தொடுத்துவரும் அந்நிய நாட்டின் படை முன்பு வெள்ளைக் கொடியை ஏந்தியபடி நடனமாடி காலில் விழுந்த இந்த புலிகேசி போன்று, அமெரிக்காவில் அயோக்கியத்தனமான போருக்கு அடிபணியாமல், தனது நாட்டு மக்களை அம்போவென விட்டு விட்டு அந்நிய நாட்டிற்கு பாய்ந்தோடாமல், பதுங்கியிருந்து தாக்க தக்க சமயம் பார்த்திருந்த சிங்கத்தை பிடித்து தூக்கிலேற்றியது அமெரிக்கா.
நாமறிந்தவரை தூக்கு கயிறை பார்த்தும் தனது முகத்தை மூடிக் கொள்ளாத ஒரு மாவீரன் உலக வரலாற்றில் சதாமாகவே இருக்க முடியும். இத்தகைய ஒரு மாவீரனைத் தன் மீது சுமத்தப்பட்ட மோசடி வழக்கிற்கு உதாரணம் காட்டி, மிகப் பெரிய குற்றவாளி என அடையாளம் காட்டும் வடிவேலின் செயல் உள்ளபடியே அவர் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தையான 'சின்னப்புள்ளைத்தனமானது' என்பதை அவருக்கு நினைவூட்டுகிறோம்.
- முகவை அப்பாஸ்